Natural Sciences Read in english

நமது மூளையில் 80% தண்ணீர் உள்ளது

By Niroshan Thillainathan on October 10th, 2014

நமது மூளையில் 80% தண்ணீர் உள்ளதுதண்ணீர் நமது உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் நமது மூளையின் திசுக்களில் 80% தண்ணீர் தான் உள்ளது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நமது மூளை அந்தத் தண்ணீரின் அளவிற்கு ஏற்றவாறு வேலை செய்யும் என்பது தான். இங்கு தண்ணீரைச் சேமிக்க வழியில்லை என்பதால், எந்த அளவிற்கு இவை பயன் படுத்தப்படுகிறதோ அந்த அளவிற்கு நீரேற்றம் ஏற்பட வேண்டும். இல்லையென்றால் மூளையின் செயல்பாடுகளில் பிரச்சனை வர ஆரம்பித்துவிடும்.

மற்ற உடலின் செல்களைக் காட்டிலும், மூளையின் செல்களுக்கு இரண்டு மடங்கு ஆற்றல் தேவை. ஒவ்வொரு நாளும் நீரேற்றம் ஏற்பட்டவுடன் அதற்கான ஆற்றல் அதிகமாகிவிடும். முழு ஆற்றலுடன் நீங்கள் செயல்படும்போது, அதற்கான வேகமும், விவேகமும் உங்கள் மூளையில் சேர்ந்துவிடும்.

இந்த நீரேற்றம் குறையும் போது மன அழுத்தம், ஆற்றலின்மை போன்றவை நிகழக்கூடும். இதனை வாய் வறண்டு போவது, தாகம், குழப்பங்கள் ஏற்படுதல் போன்றவற்றின் மூலம் கண்டறிந்து கொள்ளலாம். குறிப்பாக உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும் போது நமக்கு அதிகப்படியான தண்ணீர் தேவை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் நண்பர்களே!

எனவே, தண்ணீர் என்பது நமது உடலுக்கும் மிகவும் முக்கியமான ஓர் விடயம் ஆகும். நீங்கள் தினமும் எவ்வளவு லீட்டர் தண்ணீர் குடிப்பீர்கள் நண்பர்களே? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Your Brain is 80 of Water


We all know that water is essential for survival. But how many of us know that 80% of our brain is made of water. The surprising fact is that our brain depends on the amount of this water content. As there is no way to store water in the brain, the amount of water used in metabolism should be replaced accordingly. If not the brain function will be altered.

Neurons in our brain need twice the energy than other cells in the body. The energy increases with absorption of water.  Your brain will function with speed and accuracy when you function with full energy. When the absorption of water decreases, it causes depression and fatigue. The symptoms include dry mouth, thirst, and confusion. One should remember that intake of water is very important while dieting. Thus water is very important for life. How many liters of water do you drink every day? Post your comments below.


Wikipedia | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.