Natural Sciences Read in english

எப்போ உயரமாக இருப்பீர்கள்

By Niroshan Thillainathan on February 13th, 2014

எப்போ உயரமாக இருப்பீர்கள்காலையிலா, சாயங்காலத்திலா நீங்கள் உயரமாக இருப்பீர்கள்? இப்படி உங்களிடம் ஓர் கேள்வி கேட்டால் நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? முதலில் இது என்ன முட்டாள் தனமான கேள்வி என்று கேட்டு விட்டு, „இரு நேரத்திலும் அதே உயரமாகத் தான் இருப்பேன்“ என்று தானே பதில் சொல்வீர்கள்? சரி, உங்களால் நம்ப முடியாத முட்டாள் தனமான இந்த விடயத்தை நீங்களே சோதித்துப் பாருங்கள். காலையிலும், சாயங்காலத்திலும் உங்கள் உயரத்தை ஒரு முறை அளந்து பாருங்கள். வாயைப் பிளந்து கொண்டு நிற்பீர்கள்! ஆம், இந்த விடயம் முற்றிலும் உண்மை தான்! நாம் சாயங்காலத்தில் விட காலையில் சில சென்டி மீட்டர்கள் உயரமாகத் தான் இருப்போம். இந்த அறிவு டோஸில் அதற்கு என்ன காரணம் என்பதை அறியத் தருகின்றேன்.

அது வேறு ஒன்றுமே இல்லை: பொதுவாக நமது முள்ளந்தண்டு, எலும்புகளால் மட்டும் அமைக்கப் படவில்லை. அதில் intervertebral discs என்று அழைக்கப்படும் முள்ளெலும்பிடையான வட்டுகள் காணப்படுகின்றன. இந்த வட்டுகள் எலாஸ்டிக் (elastic) பஞ்சுகள் போன்று வளைந்து நெளிந்து நமது உடல் அசைவுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றன. நாம் இரவில் தூங்கும் போது பஞ்சு போன்ற இந்த வட்டுகள், நமது உடலில் உள்ள நீர்மத்தை (liquid) உறிஞ்சி எடுத்து விடுகின்றன. பின்னர் காலையில் நாம் தூக்கம் கலைந்து எழுந்ததும், இரு விடயங்கள் நடைபெறுகின்றன: முதலாவதாக நாம் நடந்து திரிந்து, விளையாடி, வேலை செய்யத் தொடங்கி விடுகின்றோம். இரண்டாவதாக நாம் நமது இரு கால்களிலும் நிற்கத் தொடங்கியதும், நமது முள்ளந்தண்டில் புவி ஈர்ப்பு விசை செலுத்தப் படுகிறது. இந்த இரு செயல்பாட்டாலும் அந்த வட்டுகளில் உறிஞ்சி எடுக்கப்பட்ட நீர்மம் நேரம் போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப் படுகின்றது. அதன் விளைவாக நமது முள்ளந்தண்டின் உயரம் குறைந்து விடுகின்றது. அத்துடன், நமது உடலின் உயரமும் குறைந்து விடுகின்றது. இதை எதிர்பார்த்து இருப்பீர்களா…?

சரி, உங்கள் உயரம் எப்போதுமே ஒரே நிலையில் இருக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தால், கவலையே வேண்டாம்! பேசாம ஒரு ஏவூர்தியில் (rocket) விண்வெளி சென்றுவிடுங்கள். ஏனென்றால், அங்கே ஒரு ஈர்ப்பு விசையுமே இருக்காது! உங்கள் விண்வெளிப் பயணத்திற்கு டிக்கெட் வாங்குவதற்கு NASA, ESA, ISRO போன்ற விண்வெளி முகமைகளை நாடவும்!


English Version

You are taller in the Morning than in the Evening


What will be your reply if I ask you, when you will be taller – in the morning or in the evening? Won’t you think that it is a stupid question? You will reply that you stay the same height throughout the whole day. OK, let us test this unbelievably stupid question. Check your height during morning and night. You will be dumb struck. Yes! It’s true that we are few centimeters taller in the morning than in the evening. This Arivu Dose will tell you the science behind this fact.

Our spinal column is not only made of vertebra.  There are intervertebral discs in between them. These discs act like an elastic sponge and help in the flexible movement of our body. The sponge like discs absorb the water from our body when we sleep during night. When we wake up in the morning two things happen. The first thing is that we become active and begin to walk, run, and move around, play and work. Secondly, the force of gravity acts on the spinal column when we stand. These two factors cause the discs to lose water progressively. This results in the shortening of the spinal column and also the reduction in our height. Isn’t it surprising?

Do you want your height to stay the same? Don’t worry! Take a rocket and fly to outer space, because there won’t be any gravity, so your height won’t change there.

Did you enjoy reading this Arivu Dose? Share your thoughts and opinions with me by dropping a comment below.


BruceBlaus | Creative Commons by-sa-3.0 de, via Wikimedia Commons

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

1347 Comments

 • Govind Mani Mani - 07/10/2014, 5:19 AM

  Thamil thamilthaan -useful news

 • Vinoth Vijaya - 07/10/2014, 4:17 AM

  Nice good news

 • Mei Anjaan - 07/09/2014, 7:09 PM

  அறிவுன்னா அறிவு அப்படி ஒரு அறிவு

 • Boopathi Midhun - 07/09/2014, 6:33 PM

  Super

 • Jai Shankar - 07/09/2014, 3:46 PM

  Dai una

 • Sasi Sweet - 07/09/2014, 3:30 PM

  It’s true

 • Vivek Gallant - 07/09/2014, 2:22 PM

  Really use full…

 • Jeyathasan Thanoj - 07/09/2014, 1:04 PM

  Roo

 • Mukesh Theeran - 07/09/2014, 12:08 PM

  Ok next

 • Narean Narean - 07/09/2014, 12:06 PM

  Thhk

 • Shanmuga Sundaram - 07/09/2014, 11:49 AM

  Very
  Nice

 • Vasanth Trichy - 07/09/2014, 11:45 AM

  Nice

 • Siva Kumar - 07/09/2014, 11:30 AM

  good info thanx

 • Cbe KR - 07/09/2014, 10:29 AM

  விண்வெளி சென்றால் காற்றழுத்தம் மாறுபாடு காரணமாக. உயரம் அதிகரிக்கும் (பூமியில் இருக்கும் போது காற்றழுத்தம் உள்ளதால்தான் நம் தலை சிதறாமல் இருக்கிறது)

 • Ark Karthikeyan - 07/09/2014, 8:43 AM

  thank to information

 • Gayathri Mathi - 07/09/2014, 8:37 AM

  Superji

 • Shahul Fuad - 07/09/2014, 8:00 AM

  Good info

 • Ru Pan - 07/09/2014, 7:57 AM

  super ariveu

 • Shanmuga Vadivu - 07/09/2014, 6:54 AM

  Really informative

 • Lenin Tamilkovan - 07/09/2014, 6:08 AM

  Sir if you are in weightless ness that is in space ur height will increase by a few centimeters really . This is due the the compressed spinal bones relaxing themselves in weightless ness
  When u return back due to gravity on earth u will be compressed a few centimeters . The compression pain will be horrible . The

 • Senthi Kumar - 07/09/2014, 4:56 AM

  Veri veri nice

 • Yasmin Yas - 07/09/2014, 4:45 AM

  Good but rompa castly tips …..m

 • Praba Karan - 07/09/2014, 4:14 AM

  Thanks frnds

 • Annishaa Ayisha - 07/09/2014, 2:44 AM

  Good

 • Anfaal Anfaal - 07/09/2014, 1:03 AM

  Try my best