Natural Sciences Read in english

ஒரு நாளுக்கு 40 நிமிடங்கள் நமக்கு கண் தெரிவதில்லை

By Niroshan Thillainathan on October 28th, 2014

ஒரு நாளுக்கு 40 நிமிடங்கள் நமக்கு கண் தெரிவதில்லைஒரு நாளுக்கு நமக்கு 40 நிமிடங்ககளுக்கு கண்கள் தெரிவதில்லை என்று நான் உங்களிடம் கூறினால், அதை நம்புவீர்களா? ஆனால், அது தான் உண்மை! இதற்கு நமக்கு கண்கள் தெரியவில்லை என்று ஒன்றும் அர்த்தம் இல்லை, நண்பர்களே! சரி, நான் என்ன சொல்லவருகிறேன் என்பதைத் தொடர்ந்து படித்துப் பாருங்கள்!

நமது கண்கள் மூளைக்குத் தற்போதைய நிகழ்வுகளைப் படமாகக் காட்டும், ஆனால் மூளை அவற்றினைத் தடுப்பதற்கே முயற்சி செய்யும். நமது கண்கள் அசையும் போது கண்ணின் ரெட்டினாவில் இருந்து வெளிவரும் தடுமாறும் படங்களை மூளை ஏற்றுக்கொள்வதில்லை. இந்த நேர இடைவெளியில் அதாவது நமது கண்கள் அசையும் அந்த கால இடைவெளியினை பூர்த்தி செய்வதற்காக, ஒரு வினாடிக்கும் குறைவான காலகட்டத்தில் மூளை ஒரு மாயத்தோற்றத்தினை ஏற்படுத்தும். இதற்கு “Saccadic masking” என்று பெயர். இதன் மூலம் நமது கண்கள் ஒரு மங்கலான படத்தினைப் பார்ப்பது போல் தோன்றும்.

இந்த மங்கலான படத்திற்குப் பிறகு நாம் காணும் காட்சி எதையாவது ஒன்றை உற்றுநோக்கியது போல் இருக்கும், அதற்குக் காரணம் கண்கள் சிறிது நேரத்திற்கு அதே காட்சியினைக் கொண்டிருப்பதே ஆகும். இதற்கு “stopped-clock illusion“ என்று பெயர். அதாவது ஒரு கடிகாரத்தில் இரண்டாவது நொடியாக மாறிய பிறகும் கூட நமது கண்கள் முதல் நொடியினைக் காட்டும் என்பதே இதன் பொருள். இதனால் தான் நாம் தினமும் 40 நிமிடங்கள் கண் தெரிந்தும், தெரியாமலே இருக்கிறோம்.

இப்பொழுது புரிந்துவிட்டதா, நண்பர்களே? இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

You are blind for 40 minutes everyday


Will you believe me, if I say that we are unable to see for 40 minutes every day? But that is the fact. It doesn’t mean we are blind. You will understand it when you complete reading this Arivu Dose.

Our eyes capture the happenings around us as images to our brain. But our brain always resists it. Our brain rejects the shaky images sent by the retina when our eyes move. To compromise this time gap during eye movements, our brain creates an illusionary image for a fraction of a second. This is known as “Saccadic masking”. Due to this, we have a feel of watching a blurred image.

The image you see after this blurred image looks like that of starring at something. This is because of the retention of that image by our eyes for some time. This is known as “Stopped Clock illusion”. It means that, though the clock hand has moved to the next second, our eyes show us the first second.  This is why we are unable to see for 40 minutes even if we are not blind.

Do you understand it now? Post your comments about this Arivu Dose.


Nikki Tysoe | Creative Commons by-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.