Astronomy Read in english

1977 ல் விண்வெளியில் இருந்து கிடைத்த 72 வினாடி சிக்னல்

By Niroshan Thillainathan on July 6th, 2014

1977 ல் விண்வெளியில் இருந்து கிடைத்த 72 வினாடி சிக்னல்நண்பர்களே, விண்வெளியைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. அதில் பெரும்பாலானவை புரியாத புதிர்களாகவே உள்ளன. அந்த வகையில் தான் இந்த அறிவு டோஸில் நான் தரும் விடயமும் கூட அமைந்துள்ளது. ஆகஸ்ட் 14, 1977 ல் பிக் இயர் ரேடியோ டெலெஸ்கோப் எனும் கருவியின் ஊடாக ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ ஸ்டேட் பல்கலைக் கழகம் 1420 மெகாஹெர்ட்ஸ் அளவுடைய ஒரு வித்தியாசமான சிக்னலை விண்வெளியில் இருந்து பெற்றது. 72 வினாடிகள் நீடித்த இந்த சிக்னல் தனுசு (Sagittarius constellation) விண்மீன் கூட்டத்தின் திசையிலிருந்து வந்துள்ளது. விண்வெளியிலுள்ள வித்தியாசமான பின்புற சத்தங்களுக்கு அப்பாலும் இந்த ஒலியால் வர முடிந்ததற்கு இதன் அதிக அளவு ஆற்றலே காரணமாக இருந்தது.

இந்தத் திசையில் அருகில் உள்ள நட்சத்திரம் 220 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. அதனால் இந்த சிக்னல் விண்வெளியின் வெற்றிடப் பகுதியில் இருந்து தொடங்கி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த சிக்னல் பதிவு செய்யப்பட்ட போது அங்கு பணிபுரிந்த டாக்டர். ஜெர்ரி ஆர். எஹ்மன், இந்த சிக்னல் முடிவுகளைப் பார்த்து ஆச்சரியமடைந்து எழுதியது “Wow!” என்பது தான். அதனால் இது “வாவ் சிக்னல்” என்ற பெயராகவே மாறிவிட்டது. அதன்பின்பு பலமுறை தேடியும் இது போன்ற எந்தவிதமான சிக்னலும் கிடைக்கவேயில்லை.

என்ன நண்பர்களே, ஒருவேளை உண்மையிலே ஏலியன் எனப்படும் வேற்றுலக உயிரினங்களிடம் இருந்து இந்த சிக்னல் வந்திருக்குமோ? உங்கள் கருத்தைக் கீழே எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


English Version

Wow signal the strange radio signal from space is still a mystery


Hi friends! There are many interesting information to know about the outer space. Most of them are still unsolved mysteries. This Arivu Dose will tell you about one such thing. On August 14, 1977, the Ohio University in the United States of America received a weird signal of 1420 Hz through the Big Ear Radio Telescope. The signal which lasted for 72 seconds came from the direction of the Sagittarius constellation. The ability of this sound to reach the Earth overriding the different background noises in the outer space was due to its high energy.

The nearest star in this direction is at a distance of 220 million light years. So, it is believed that the signal would have originated from the vacuum area in the outer space. When this signal was recorded, Dr.Jerry R.Ehman who was working there was surprised on seeing the result and wrote “Wow”! This has led to the name of this signal as “Wow Signal”. But no other similar weird signal has been ever received even after many explorations.

Did you enjoy reading this Arivu Dose? Share your comments here.


The Ohio State University Radio Observatory and the North American AstroPhysical Observatory (NAAPO) | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

14 Comments

 • Selva Kumar - 07/08/2014, 3:35 PM

  Super akka super news good news akka

 • Niroshan Thillainathan
  Niroshan Thillainathan - 07/08/2014, 11:15 AM

  உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி, நண்பர்களே Mahendra Selvan D NG Brannavan Dilsath Abdul Hai Ameer Momamed Mani Mkm Billa Prabu Madhumitha Mital Arun Vikram Prakash Vivek Gánésh Jaï Vignalal Lalv

 • Dilsath Abdul Hai - 07/08/2014, 7:44 AM

  idha naanga appave padichitam

 • Ameer Momamed - 07/08/2014, 7:34 AM

  I no

 • NG Brannavan - 07/08/2014, 4:52 AM

  yess வேற்றுலக உயிரினங்களிடம் இருந்து இந்த சிக்னல் வந்திருக்கும் ……

 • Mani Mkm - 07/07/2014, 12:05 PM

  Parra guna epaila erundhu scientist ku marana

 • Billa Prabu - 07/07/2014, 11:53 AM

  super wow

 • Mahendra Selvan D - 07/06/2014, 7:52 PM

  அற்புதமான செய்தி.

 • Madhumitha Mital - 07/06/2014, 2:37 PM

  wow!

 • Arun Vikram - 07/06/2014, 2:29 PM

  i had already know this news

 • Vignalal Lalv - 07/06/2014, 2:00 PM

  may be coz 220 light years kadandu kidache . So inda signl 1970 galil kidaikudnu. 1970 la irundu 220 light years ku mudala anupi irukanum. And mai b 1970ku mudala idu pondra signls vandu irukum namalala resv pana tech nology pathala. And badiluku naga anupura signl poi sera 220 light years edukum so aliens irundalum kandu pudiche comunict pana kastam

 • Prakash Vivek - 07/06/2014, 1:18 PM

  May be irukkalam

 • Gánésh Jaï - 07/06/2014, 1:06 PM

  Woow