அழும் குழந்தையை ஏன் அலட்சியம்செய்ய முடிவதில்லை?
By Niroshan Thillainathan on May 21st, 2014
ஒரு குழந்தை அழும் பொழுது, அதைப் பொருட்படுத்தாமல் இருப்பது ஏன் கடினமாக இருக்கிறது என்று எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்திருக்கின்றீர்களா? அதற்குக் காரணம், குழந்தைகள் அழும் சப்தத்தைக் கேட்கும் போதெல்லாம் விரைவாக செயலாற்றிட நமது மூளை இயற்கையாகவே அமைக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனால் தான், குழந்தை அழும் பொழுது நாம் அதைச் சமாதானப் படுத்த வேண்டும் என விரும்புகிறோம். ஏன், அது நாம் குழந்தையின் பெற்றோராக இல்லாவிட்டாலும் கூட அப்படித் தான் தோன்றும்.
சுற்றுப்புறத்தில் கேட்கும் மற்ற அனைத்து ஒலிகளையும் விட, ஒரு குழந்தை அழும் சப்தம் அதிகமாக நம் கவனத்தைக் கைப்பற்றுகிறது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கேட்டி யங் கூறுகின்றார். இவர் மற்றும் கிறிஸ்டின் பார்சன்ஸ் குழந்தைகளின் அழுகை சப்தம் கேட்டால் நம் மூளை எப்படி செயலாற்றுகிறது என்பதைப் பற்றி ஆய்வு செய்தனர். 28 நபர்களை, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அழுகை சப்தம், மற்றும் விலங்குகள் வலியில் எழுப்பும் சப்தம் ஆகியவற்றைக் கேட்கச் செய்து, அவர்களது மூளையை நுட்பமாகப் பரிசோதனை செய்தார்கள். இந்த ஆராய்ச்சியின் படி, குழந்தைகளின் அழுகையைக் கேட்ட உடன் நமது மூளை குறித்த காலத்திற்கு முன்னரே செயல்படுகிறது என்றும், அதைத் தொடர்ந்து 100 மில்லி விநாடிகளிலேயே மிக ஆழமான எதிர்வினை உருவாகிறது என்றும் கேட்டி யங் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற ஒலிகள் கேட்பதால் ஏற்படும் எதிர்வினை இவ்வளவு தீவிரமாய் இல்லாமல் இருந்தது.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் யாருமே பெற்றோர் இல்லை. மேலும், அவர்களுக்கு குழந்தைகளைப் பற்றிய எந்த அனுபவமும் இல்லை. இருந்தும், அவர்கள் அனைவரும் குழந்தை அழுதவுடன், 100 மில்லி விநாடிகளுக்குப் பின்னர், பொதுவாகப் பெற்றோர்கள் செயலாற்றும் அதே வழியில் செயலாற்றினர். எனவே, இது நம் அனைவரிடமும் இருக்கும் ஒரு அடிப்படை எதிர்வினையாக இருக்கலாம் என்று விஞ்ஞானம் கூறுகின்றது.
சுவாரசியமாக இல்லையா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!
Why it is impossible to ignore crying babies
Have you ever thought how difficult it is to ignore a crying child? Researchers have found that our brain has been wired naturally to function rapidly on listening to the cry of a baby. This is the reason why we naturally intend to pacify a crying child. This feel is universal, even if it is not our own baby.
Dr.Katy Young of Oxford University says that a baby’s cry gets our attention more than any other noise in the surrounding. Along with her, Dr.Christian Parson studied the way our brain functions while listening to a baby’s cry. They studied the brain activities of 28 volunteers while they listened to the cry of babies, adults and animals in pain. In this research, Dr.Katy young has found that our brain functions earlier than predicted, on hearing a baby’s cry and creates a reaction within 100 milliseconds. The reactions created to other noises are never so intense.
No one volunteered in this research is a parent. Also, they lacked any experience with children. But, within 100 milliseconds of hearing a baby’s cry, they reacted in the same way, as a parent would. Thus, Science says that this could be an inherent character in all of us.
Isn’t it interesting? Post your comments below.
Kyle Flood | Creative Commons by-sa-2.0, via Wikimedia Commons.
Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்