Social Sciences Read in english

காதலர் தினம் ஏன் காதலர் தினம் அன்று கொண்டாடப் படுகிறது

By Niroshan Thillainathan on February 14th, 2014

காதலர் தினம் ஏன் காதலர் தினம் அன்று கொண்டாடப் படுகிறதுகாதலர் தினம் அன்று காதலர் தினத்தைப் பற்றி ஆறிவு டோஸ் எழுதாமல் விட்டால், காதலர்கள் என்ன நினைப்பார்கள்? எனவே, காதலர் தினம் ஏன் காதலர் தினம் அன்று கொண்டாடப் படுகிறது என்பதற்கப் பதிலைக் கூறிவிடுறேன்.

வேலன்டைன் நாள் (Valentine’s Day) என்றும் அழைக்கப்படும் இந்தக் காதலர் தினத்தின் வரலாற்றைப் பற்றி எவ்வளவோ கதைகள் இருக்கின்றன. ஆனால், இவற்றுள் மிகவும் பிரபலமான கதை இது தான்: 270ம் ஆண்டில் ரோமப் பேரரசை (Roman Empire) ஆண்டு வந்த அரசன், தனது போர் வீரர்கள் திருமணம் செய்து குடும்பமாக இருந்தால், அவர்கள் போர் தொடுக்க முடியாது என்ற காரணத்தால், அவர்களை கல்யாணம் பண்ண விடவில்லை. ஆனால், பிஷப் வேலன்டைன் (Bishop Valentine) என்பவர் அரசனின் வேண்டுகோலுக்கு எதிராக திருட்டுஎத்தனமாக பல போர் வீரர்களுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த நடவடிக்கை அரசனுக்குத் தெரியவந்ததும், வேலன்டைன் சிறையில் அடைக்கப்பட்டு அவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த போது அவர் அவரது காதலிக்கு இறுதியாக எழுதிய கடிதத்தில் கடைசியில் „அன்புடன் உன் வேலன்டைன்“ („From your Valentine“) என்று எழுதிவிட்டு, February 14ம் திகதி தூக்கில் தொங்கி இறந்தார். இன்று, „From your Valentine“ என்கிற வசனத்தைத் தான் காதலர் தினம் அன்று பெரும்பாலான காதலர்கள் அவர்களின் வாழ்த்து அட்டைகளில் குறித்து விடுவார்கள்.

சரி, வேலன்டைன் நாளின் சரித்திரத்தை அறிந்தது போதும்… இந்தக் காதலர் தினத்தில் மட்டுமே நடைபெறும் சுவாரசியமான சில தகவல்களையும் அறியத் தருகின்றேன்:

 • உலகம் பூராக 35.000.000 இருதயம் வடிவம் கொண்ட சாக்லெட் பெட்டிகள் விற்பனை ஆகின்றன.
 • அமெரிக்காவில் மட்டுமே இதே நாளில் 1.000.000.000 டாலர்களுக்கு சாக்லெட் விற்பனை ஆகின்றது.
 • வேலன்டைன் நாள் அன்று விற்கப்படும் மலர்களில் 73 சதவீதமான மலர்கள் ஆண்களால் வாங்கப் படுகிறது, 27 சதவீதமான மலர்கள் தான் பெண்களால் வாங்கப் படுகிறது.
 • 189.000.000 ரோசாப் பூக்கள் அமெரிக்காவில் மட்டுமே விற்பனை ஆகின்றது.
 • அதே அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தை முன்னிட்டு 145.000.000 வாழ்த்து மடல்கள் அனுப்பப் படுகின்றன.
 • அதிகமான வாழ்த்து மடல்களை யார் பெறுகின்றார்கள் என்று தெரியுமா…? அது வேறு யாரும் இல்லை, ஆசிரியர்கள் தான்!
 • அதை விடுங்கள்! பிராணி வளர்ப்பவர்களில் 3 சதவீதமானோர் அவர்களின் செல்லப் பிராணிக்குக் கூட ஓர் வாழ்த்து மடலைக் கொடுக்கின்றார்கள் என்றால் பாருங்க…

சரி, காதலர் தினத்தின் வரலாறு மற்றும் சில சுவாரசியமான தகவல்களைத் தெரிந்து கொண்டீர்கள் தானே? இப்போ இதைச் செய்யுங்கள். உங்களுக்கு ஓர் காதலன் அல்லது காதலி இருந்தால் இந்த அறிவு டோஸ்கு ஒரு LIKE போட்டுவிடுங்கள். இல்லையா…? சரி, பரவாயில்லை, அப்போ ஓர் காதலன் அல்லது காதலி இருந்தால் நல்லது என்று நீங்கள் நினைத்தால் இந்த அறிவு டோஸை SHARE பண்ணுங்கள். அதுவும் இல்லையா…? சரி, அப்போ „காதலே வேண்டாம், ஆள விடுங்கடா சாமி“ என்று நீங்கள் நினைத்தால் தயவு செய்து கட்டாயம் ஒரு COMMENT எழுதிவிட்டு செல்லுங்கள்!


English Version

Why is Valentine's Day celebrated on February 14


Let me tell you why the Valentine’s Day is celebrated all over the world as Lovers’ day.  There are so many interesting stories behind the origin of this Lovers’ day which is popularly known as Valentine’s Day. One of the famous versions is as follows. In the year 270, the Roman Emperor thought that his soldiers won’t be efficient in battlefield if they get married and have a family life. So he banned them from getting married! But Bishop Valentine acted against the Emperor’s rule and got the soldiers married secretly. He was imprisoned and was punished with death sentence when the Emperor came to know about his plot. His last letter to his girlfriend from the prison was signed as “from your Valentine”. Sadly, he was hanged on February 14. Thus Valentine’s Day is celebrated on February 14th and “from your Valentine” is the most often used phrase in the greeting cards by the lovers on this day. Such a tragic tale that led to the origin of a beautiful tradition! Don’t you accept it, friends?

Let us know about some more interesting facts about Valentine’s Day

 • About 35,000,000 Heart shaped chocolate boxes are sold on Valentine’s Day.
 • 1,000,000,000 $ worth chocolate is being sold in the United States of America on Valentine’s Day.
 • While 73% of flowers sold on Valentine’s Day are brought by men, the rest 27% are brought by women on Valentine’s Day.
 • 189,000,000 roses are sold in the United States of America on Valentine’s Day.
 • 145,000,000 letters are mailed in the United States of America on Valentine’s Day. Do you know who receives most of the letters? Surprisingly, it is the teachers. Isn’t it lovely to know?
 • It is amazing that about 3% of animal lovers send letters and greeting cards to their pets on Valentine’s Day.

Hope you have learnt few interesting facts about Valentine’s Day. If you have a boyfriend or a girlfriend hit like to this Arivu Dose. If you wish to have a lover, share this Arivu Dose. If you don’t want to be in love at all, drop your comments here.


Amanda | Creative Commons by-2.0, via Wikimedia Commons

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

14 Comments

 • Pon Santhosh - 02/14/2014, 3:42 PM

  ஆம்!! இது அடுத்து அடுத்து வரும் வருடங்களில் அதிகமாகும் என்பது என் கணிப்பு.!!Niroshan Thillainathan

 • Nimmi Siva - 02/14/2014, 3:38 PM

  சொல்லிட்டாங்களே அவங்க காதலை ….
  வேறு ஒருத்தியிடம் ..
  (இதுக்கு ஏதாவது கார்ட் இருக்கா சார் ?????? )

 • Nimmi Siva - 02/14/2014, 3:12 PM

  ஏற்கனவே காதலிச்சு இப்போ வேண்டாம் என்று சொல்ல நினைக்கிறவங்க இப்போ என்ன சார் செய்ய ???? :p

  • Niroshan Thillainathan
   Arivu Dose – அறிவு டோஸ் - 02/14/2014, 3:35 PM

   Hahaha :D!! நிங்க வேண்டாம் என்று சொன்னீங்களா.. இல்லை உங்களை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களா… :P? உங்களைப் போய் யாரும் வேண்டாம் என்று சொல்வார்களா…?

 • Pon Santhosh - 02/14/2014, 1:10 PM

  காதலர் தினம் இப்பொழுதெல்லாம் வியாபார தினம்….(என்னா வியாபாரம்)!!!!!Niroshan Thillainathan

  • Niroshan Thillainathan
   Arivu Dose – அறிவு டோஸ் - 02/14/2014, 3:38 PM

   நண்பா… நீங்கள் சொல்வது 100% உண்மை… 2013 இல் காதலர் தினம் அன்று மட்டுமே 13,19 பில்லியன் டாலர்களுக்கு வியாபரம் நடந்து இருக்கிறது! அந்த வியாபரத்தை தானே சொல்றீங்க :P?

 • Rathy Srikantha - 02/14/2014, 12:52 PM

  Nirosh v. exellent

  • Niroshan Thillainathan
   Arivu Dose – அறிவு டோஸ் - 02/14/2014, 3:28 PM

   மிக்க நன்றி :)

 • Harihar Balasubramanian - 02/14/2014, 9:43 AM

  ada poda

 • Prasad Krishnan - 02/14/2014, 9:38 AM

  Pass agura varaikkum yeluthitte irrukka vendiyathu than..machi

  • Niroshan Thillainathan
   Arivu Dose – அறிவு டோஸ் - 02/14/2014, 3:28 PM

   நண்பா! படிக்கும் பாடம் கஷ்டமாக இருந்தால், வேறு பாடத்தைப் படித்து பாஸ் ஆகிடுங்கப்பா… :P

 • Harihar Balasubramanian - 02/14/2014, 9:30 AM

  லவ் பெய்லியர் என்ன பண்ணனும்?

  • Harihar Balasubramanian - 02/14/2014, 9:42 AM

   ஆல்ரெடி ரொம்ப வெயிட் பண்ணியாச்சுங்க. குட் ஒன்னும் சாரி சொல்லிட்டாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு.

  • Sivashankari Ramamoorthi - 02/14/2014, 9:33 AM

   should keep calm, and wait for a good one :-)