Natural Sciences Read in english

மலைப்பிரதேசத்தில் ஏன் குளிர் அதிகம்

By Niroshan Thillainathan on April 8th, 2014

மலைப்பிரதேசத்தில் ஏன் குளிர் அதிகம்நெருப்பின் அருகே நமது விரலைக் கொண்டு சென்றால், நம்மால் அவ்வெப்பத்தை உணர முடிகின்றது, இதுவே அந்த நெருப்பில் இருந்து நமது விரலை கொஞ்சம் கொஞ்சமாக விலத்தும் போது, அந்த வெப்பம் குறைந்துகொண்டு போகின்றது. இது இலகுவான இயற்பியல் ரீதியான லாஜிக். ஆனால், ஒன்று கவனித்து இருக்கின்றீர்களா? சூரியனும் ஒரு விதமான பெரும் நெருப்புத் தானே? நாம் மலைப்பிரதேசத்தில், அதாவது சூரியனுக்குக் கொஞ்சம் அண்மையில் இருக்கும் போது, நமக்குக் குளிராக இருக்கும், ஆனால் மலைப்பிரதேசத்தை விட்டுக் கீழ் நோக்கி செல்லும்போது, அதாவது சூரியனை விட்டு விலகும் போது, வெப்பம் அதிகரிக்கின்றதே, அது மட்டும் எப்படி? முதல் குறித்த உதாரணம் போல், நாம் மலைப் பிரதேசத்தில் இருந்து கீழ் நோக்கிச் செல்லும் போது குளிர் அதிகரிக்கத் தானே வேண்டும்?

இதற்குக் காரணத்தை நான் அறியத்தர முன்பு, வெப்பநிலை என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். நம்மை சுற்றி இருக்கும் காற்று, எண்ணற்ற துகள்களைக் கொண்டது. இந்தத் துகள்கள் அசைந்து ஒன்றுடன் ஒன்று உரசி, மோதி செயல்பாடு நடைபெறுவதால் தான் வெப்பம் ஏற்படுகின்றது. எனவே, இந்தத் துகள்கள் ஒன்றுடன் ஒன்று உரசுவதன் வேகம் அதிகரிக்கும் போது வெப்பநிலையும் அதிகரிக்கின்றது. இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், காற்றின் அழுத்தத்தைப் பொறுத்து இந்தத் துகள்களின் வேகம் அதிகரிக்கின்றது. அழுத்தம் கூடினால், துகள்களின் வேகமும் அதிகரித்து, அத்துடன் வெப்பநிலையும் அதிகரிக்கின்றது. காற்றின் அழுத்தம் குறையும் போது, துகள்களின் வேகம் குறைந்து வெப்பநிலையும் குறைகின்றது.

இது எல்லாம் இப்போ புரிந்த உங்களுக்கு, இனி ஏன் மலைப் பிரதேசத்தில் வெப்பநிலை குறைவாக இருக்கின்றது என்பது நன்றாகவே புரியும். அதற்குக் காரணம் நாம் மலை ஒன்றில் ஏறி மேலே செல்லச் செல்ல காற்றின் அழுத்தமும் குறைந்துகொண்டே போகின்றது. ஆகவே வெப்பநிலையும் குறைந்துகொண்டே போகும். இதுவே நாம் மலையில் இருந்து கீழே செல்லும் போது மறுபடியும் காற்றின் அழுத்தம் அதிகரித்து அத்துடன் வெப்பநிலையும் அதிகரிக்கின்றது. எனவே மலை பிரதேசத்தில் வெப்பநிலை குறைவாக இருப்பதற்கு சூரியன் காரணம் அல்ல, அங்கே காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பது தான் காரணமாக இருக்கின்றது.

என்ன நண்பர்களே, புரிந்து விட்டதா? இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Why is the Temperature on the Top of a Mountain colder than that on the Ground


When we move our finger towards the fire, we feel the heat. Similarly, when we move our finger away from the fire, we feel that the heat reduces. This is an easy logic to understand, based on Physics. Let us consider that the Sun is a huge ball of fire. But, when we are closer to the Sun, in mountain regions, we feel cold. When we move down a mountain i.e. away from the sun we feel hot. How does this happen? If our first statement is true, we should be feeling cold when we get down a mountain. Isn’t it right?

Let me tell about temperature before explaining the reason. The air around us contains innumerable particles. When these particles move around and hit each other, heat is produced. Thus the temperature increases when the speed of the particles increases. The speed of the particle increases with the atmospheric pressure. When the atmospheric pressure drops down, the speed of the particles decreases and thus reduces the temperature.

As you understand this Physics, you will find it easy to understand why it’s cold in mountain regions. As we go up in a mountain, the atmospheric pressure keeps on decreasing. Similarly, the atmospheric pressure increases as we go down and thus the temperature increases. Thus the reason behind the low temperature in mountains is because of the low atmospheric pressure and not because of the Sun.

Did you enjoy reading this Arivu Dose? I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


Planomenos | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

10 Comments

  • Samsu Raj - 04/09/2014, 10:04 AM

    எனக்கு தெரிஞ்சது கடல் மட்டத்தில் காற்று அழுத்தம் அதிகமாக இருக்கும் அதனால் சூரியாஒளி அதிகமாக எதிரெளிக்கப்படுவதல் வெப்பம் அதிகமாகவும் மலைகளில் காற்று அழுத்தம் குறைவாக இருப்பதால் எதிரெளிப்பு குறைவாக இருக்கும் வெப்பம் குறைவாக இருக்கும் அதனால் மலைப்பகுதியில் குளிர்ச்சியாக இருக்கிறது இது எனக்கு தெரிந்தது

  • Thala Thalabathi - 04/09/2014, 9:10 AM

    but enaku therinjadha na soldren nammudaya boomiku veppaththai gragithu kollum thanmai undu adhavathu sooriyanilirunthu varum veppathai nam boomi ull vangi kollum adhanal dhan nam boomiyin maiya pagudhi innum neruppu kuzhambagave ullathu. nam boomi veppathai ul vangi kolvadhal nam boomiyin tharaimattathilirunthu vilagi malai pradhesangaluku sellum bothu nam veppathai unarvathu illai ean endral boomi sooriyanilirunthu veppathai ul vangi kolvadhal athu malai paguthi pondra uyaramana paguthiyil veppam therivathillai

  • Kali Muthu - 04/08/2014, 5:15 PM

    Super nanpa

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 04/08/2014, 6:15 PM

      நன்றி நண்பா Kali Muthu :)!

  • R Vijay Mani - 04/08/2014, 3:28 PM

    Thanks

  • Smile Prabu Trichy - 04/08/2014, 3:24 PM

    Thodarnthu kealvigal keatpane..

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 04/08/2014, 3:36 PM

      தாராளமாகக் கேளுங்கள் நண்பா Smile Prabu Trichy :)!

  • Smile Prabu Trichy - 04/08/2014, 3:24 PM

    Arumaiyana vilakkam.. mikka nandri nanba :)

  • Ramaraj Raj - 04/08/2014, 2:20 PM

    good news thanks

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 04/08/2014, 3:37 PM

      நன்றி Ramaraj Raj