Behavioural Sciences Read in english

குழந்தைப்பருவத்தில் நடந்தவற்றை நினைவில் கொள்ள முடியுமா?

By Niroshan Thillainathan on July 26th, 2014

குழந்தைப்பருவத்தில் நடந்தவற்றை நினைவில் கொள்ள முடியுமா?நண்பர்களே, உங்களுடைய குழந்தை வயது நினைவுகளை நினைத்துப் பாருங்கள். என்ன எல்லாம் நினைவிற்கு வருகிறது…? பிறந்தநாளில் நீங்கள் கொண்டாடிய விதம், நீங்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்றது போன்றவை ஞாபகத்திற்கு வரலாம். ஆனால், உங்களது நினைவுகள் ஒரு போதும் உங்களது மூன்று வயதிற்கு முன்னால் இருந்த நினைவுகளாக இருக்காது. அதாவது உங்களின் குழந்தைப்பருவ நினைவுகள் அனைத்தும் 3 முதல் 7 வயதுக்குள்ளதாகவே இருக்கும். குடும்ப புகைப்படங்கள் போன்ற சிலவித பொருட்களால் இந்த நினைவுகள் மேம்பட்டு இருக்கலாம். இவ்வாறு சிறு வயதில் நினைவுகளை மறப்பதற்கு “குழந்தைப்பருவ மறதியே” காரணம் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த இருபது வருடங்களில் இது பற்றி செய்த ஆராய்ச்சியின் முடிவில் குழந்தைகளின் நினைவுத்திறன் பற்றிய பலவிதமான நுணுக்கங்களும், கேள்விகளும் தோன்றியுள்ளன.

குழந்தைப்பருவ மறதிக்கு, குழந்தைகளின் நினைவகப் பகுதி வளார்ச்சியடையாமல் இருக்கலாம் என உளவியல் நிபுணர்கள் ஊகித்துள்ளனர். குழந்தைகள் மூன்று வயதினை அடையும் கால கட்டத்தில் அவர்களது மூளையின் நினைவகத் திறன் வேகமாக வளர்வதாகவும் கண்டறிந்துள்ளனர். எவ்வாறு இருந்தாலும், மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரையுள்ள குழந்தைகள் அதிகபட்ச நினைவுகளைச் சேகரிக்க முடியும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், இவற்றுள் எவை அவர்களின் நினைவில் பதியும் என்பது அவர்களின் நினைவகத்திறனைப் பொறுத்தது. அதே நேரத்தில், அவர்களது முக்கிய நிகழ்வுகளைக்கூட, நினைவகம் பதிவு செய்யாமல் போகலாம். இதனால் தான் அவர்களுக்குக் குழந்தைப்பருவத்தில் நடந்தது நினைவுக்கு வருவதில்லை என்கின்றனர்.

என்ன நண்பர்களே, நாம் குழந்தையாக இருக்கும் போது நடந்த சம்பவங்கள் ஒன்றும் ஏன் நினைவில் இல்லை என்பதற்கான காரணத்தை புரிந்துகொண்டீர்களா? இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Why do we forget our childhood


Hi friends! Think about your childhood memories. What comes to your mind? You may remember your birthdays, family picnics etc. But your memories will be never those before 3 years of age. All your childhood memories will be of 3 to 7 years of your age. These memories may be topped with that of family photos. Psychiatrists say that forgetting such childhood memories is due to “childhood amnesia”. The research conducted for the past 20 years have lead to many intricate information and questions.

Psychiatrists speculate that the failure of development of the part responsible for the memory of children may be responsible for the childhood amnesia. They have discovered that the memory skill develop rapidly as the children reach 3 years of age. However, they say that the children of 3 months to 6 months of age have the ability to store more memories. But what gets saved in their permanent memory depends on their memory skill. Similarly, their memory may fail to store even the important events. This is the reason why they fail to recall their childhood memories.

Did you understand why we are unable to recall our childhood events? Post your comments about it here.


Loadmaster (David R. Tribble) | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

11 Comments

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 08/01/2014, 1:56 PM

    உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி, நண்பர்களே Elliah Karthick Bala Chandran Magudi Eswar Sathish Kumar Ganesan Manickam A.r. Mari Selvam Stalin Moraes Karthik Kdktk Praveen Kumar Sri Srinivas

  • Magudi Eswar - 07/28/2014, 10:08 AM

    Good arivudos

  • Sathish Kumar - 07/28/2014, 10:02 AM

    Super thozharea

  • Ganesan Manickam - 07/28/2014, 9:15 AM

    Very very correct

  • Sri Srinivas - 07/28/2014, 8:47 AM

    Enakku avaluvu chinna vayasula nadandhadhu nyabagathil illai.. 10 -15vayasil nadandhadhu nyabagathil irukku oraluvuku…

  • Solai Muthu - 07/28/2014, 6:51 AM

    Super makka

  • A.r. Mari Selvam - 07/28/2014, 6:08 AM

    Nice

  • Stalin Moraes - 07/28/2014, 5:03 AM

    Nice

  • Karthik Kdktk - 07/27/2014, 7:56 PM

    ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்

  • Praveen Kumar - 07/27/2014, 6:54 PM

    mee too frnd

  • Bala Chandran - 07/26/2014, 5:36 PM

    I’m having some memories of 1 1/2 to 2 1/2 also. I jzt explained those incidents to mom. she is telling, that is correct…………