Behavioural Sciences Read in english

நாம் நகம் கடிப்பது ஏன்?

By Niroshan Thillainathan on April 26th, 2014

நாம் நகம் கடிப்பது ஏன்?நண்பர்களே, நம்மில் பலர் தேவையில்லாமல் நகத்தைக் கடிக்கும் பழக்கத்தைக் கொண்டு இருப்போம். ஆனால், ஒன்று தெரியுமா? இப்படி ஏன் அவசியமின்றி நகங்களைக் கடிக்கிறோம் என்பதைப் பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு இந்நிகழ்வு வளர்ந்திருக்கின்றது. சமீபத்தில் நடாத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் படி, வயது வரம்பின்றி அனைவரும் நகம் கடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதில் வியப்பூட்டும் விடயம் என்னவென்றால், நடுத்தர வயதுடையவர்களில், 20 சதவீதத்தினர் நகங்களையோ அல்லது பென்சில் போன்ற ஏதாவது பொருள்களைக்  கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள். இந்த ஆராய்ச்சி மேலும் கண்டுபிடித்த விடயம் என்னவென்றால், பெரும்பாலும் தங்களது செயல்களில் வெற்றியடையும் மனிதர்களே நகங்களைக் கடிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்கள் என்பது தான். 109 நபர்களைக் கொண்டு மேற்கொண்ட மற்றுமொரு ஆராய்ச்சியில், நகம் கடிப்பவர்களில் 89 சதவீத நபர்கள் தங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம் கலந்த தாழ்வு மனப்பான்மை உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பது தெரிய வந்துள்ளது.மேலும் இவர்கள் தங்களுக்குப் பாதகமான சூழ்நிலைகளில் அதிகமாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையும், அதே நேரம் தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளில் குறைவாக அல்லது நகங்களைக் கடிக்காமலேயே கூட இருக்கும் தன்மையையும் கொண்டிருந்தார்கள். தங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத ஒரு நிலையில் தங்கள் நகங்கள் மீது கோபங்களைக் காட்டி விடுபவர்களும் உண்டு. ஆராய்ச்சியாளர்களின் தகவல்களின்படி நகம் கடிப்பவர்களே அதிகமாகப் புகைப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். நகம் கடிக்கும் பெண்கள் மென்மையாக இருக்கிறார்கள். அதே வேளையில் நகம் கடிக்கும் ஆண்களோ முரட்டுத்தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

சரி, இனி நீங்கள் கூறுங்கள் நண்பர்களே. உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டா? இந்த அறிவு டோஸில் கூறிய ஏதாவது வேறு குணங்களுடன் உங்கள் நகம் கடிக்கும் பழக்கம் தொடர்பில் உள்ளதா? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Why do we bite our nails


Some of us have the bad habit of biting nails. Guess what? This silly habit has led to a number of researches to find the reason behind it. Recent researches have proved that irrespective of the age, everyone has this habit. It is surprising that 20 % of the middle aged people have the habit of biting nails or other objects like pencils etc. It further states that people who are successful in their jobs are most likely to have this habit. Another research conducted among 109 volunteers found that 89% of them had inferiority complex and fear that they are not being respected by others. It is also found that their nail biting increased in unfavorable situations while it decreased or was completely absent in favorable situations. When people are unable to express their anger on others, they showed it on their nails. According to researchers, people who bite nails intensely are intense smokers as well. While nail biting women are soft in nature, nail biting men are more aggressive.

Do you have the habit of biting nails? Is your nail biting associated with any of the personalities mentioned in this Arivu Dose? Post your comments below.


Felipe Micaroni Lalli | Creative Commons by-sa-2.5, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

16 Comments

  • Gomathi - 10/28/2014, 11:07 AM

    Very nice

  • jemy - 10/28/2014, 10:36 AM

    I  control my habit

  • jaganathan - 10/28/2014, 6:46 AM

    தங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம் கலந்த தாழ்வு மனப்பான்மை உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பது தெரிய வந்துள்ளது.மேலும் இவர்கள் தங்களுக்குப் பாதகமான சூழ்நிலைகளில் அதிகமாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையும், அதே நேரம் தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளில் குறைவாக அல்லது நகங்களைக் கடிக்காமலேயே கூட இருக்கும் தன்மையையும் கொண்டிருந்தார்கள் … Thanks this is my behavior…

  • praveen mithran - 10/27/2014, 3:33 PM

    ஆம் எனக்கும் இருக்கிறது.எதற்காக கடிக்கிறேன் என்று எனக்கே தெரியாது…

  • seemadhavan - 10/27/2014, 9:32 AM

    yes

  • nayagam - 10/27/2014, 7:13 AM

    ஆம், உண்மை

  • sivaranjani - 10/27/2014, 7:04 AM

    hello,
    nail biting habit is truly becoz of our hormonal effects nd imbalanced hormonal problem… the people who having thyroid problem mostly bite their nails…

  • az6 - 10/26/2014, 9:39 PM

    Boss exam hall irukkum pothu kadipañ. Ithukunu exam ku one week munnadi irunthu negatha kadikkama iruppan

  • Krish Krishna - 05/11/2014, 6:07 PM

    thank u sir i control my habit

  • நௌஸாத் ருஸ்தி காவத்தமுனை - 05/04/2014, 9:22 AM

    ya… iruku… but timepass aahalenna kadikka thonum..

  • Karuppu Roja - 05/03/2014, 6:31 PM

    Maaster semma supera eruku master padikum pothey oru einampuriyatha santhosam master eithu namaku matum erukkenra oru Gunam innu thonichi put gereat super super super

  • Deepa - 04/27/2014, 11:26 AM

    Tv Parkkum podu kadipen

  • Guru Raj - 04/27/2014, 5:44 AM

    தங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத ஒரு நிலையில்

  • Gobi Kannan - 04/26/2014, 8:49 PM

    s

  • Anand Kumar - 04/26/2014, 5:38 PM

    Ya.

  • Mohan Raj - 04/26/2014, 5:05 PM

    My Friend Has that habit..