Science & Mystery Read in english

சங்கினுள் கேட்கும் சத்தம் என்ன

By Niroshan Thillainathan on March 27th, 2014

சங்கினுள் கேட்கும் சத்தம் என்னகடற்கரையில் ஒரு சங்கைக் கண்டால் எல்லோரும் அதை எடுத்துக் காதில் வைத்துக் கேட்பார்கள். அப்படி வைப்பதால் கடல் அலைகளின் சத்தம் போல் ஓர் இரைச்சல் கேட்கும் என்று பெரியோர்கள் சொல்வதை நீங்கள் எல்லோரும் அறிந்து இருப்பீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் கேட்கும் அந்த இரைச்சல் கடலில் எழும் ஒலி இல்லை! ஏன் இல்லை என்று கேட்கிறீர்களா? கடற்கரையில் கண்டெடுத்த சங்கை நீங்கள் வீடு எடுத்துச் சென்று அங்கே காதில் வைத்தாலும், அதே கடல் அலையின் இரைச்சல் தான் கேட்கும். எனவே அவ்விரைச்சல் கடல் அலைகளின் சத்தம் இல்லை என்பது தெரிந்துவிடும். அப்படி என்றால் சங்கினுள் என்னதான் கேட்கிறது?

அது வேறு ஒன்றும் இல்லை, நம்மை சுற்றியுள்ள மற்றும் நமக்குள் ஒலிக்கும் சத்தங்கள் தான் நமக்கு அவ்வாறு சங்கினுள் இரைச்சல் போன்று கேட்கின்றது. அது எப்படி என்றால், காதினால் இலகுவாக கேட்க முடியாத நமது சூழலில் உள்ள மிகவும் மெதுவான சத்தங்கள் தூரத்தில் இருந்து வந்து, நாம் கையில் வைத்திருக்கும் சங்கினுள் நுழைந்து, உட்புறம் பல முறைகள் பட்டுத் தெறிப்பதால் அந்த மெதுவான சத்தம் அதிகரிக்கின்றது. அவ்வாறு அதிகரித்து நமது காதினுள் செல்லும் போது, அந்த ஒலி நமக்கு அலைகளின் இரைச்சல் போல் கேட்கின்றது. சங்கின் வடிவம் மற்றும் அளவு பொறுத்து இந்த இரைச்சல் வெவ்வேறு விதங்களில் கேட்கின்றது.

சரி, இந்த விடயம் உங்களுக்கு முன்பே தெரியுமா? உங்கள் பதிலைக் கீழே எழுதி விட்டுச் செல்லுங்கள்.

 


English Version

Why do Shells sound like the Ocean


We all would have picked up a sea shell and put it to our ears during a stroll in a beach. It is said that we will be able to hear a sound like that of the sea waves. Actually, it is not the sound of the sea. Are you confused? Don’t be! It is not the sound of the sea, because the same sound can be heard from the sea shell even if you listen to it at your home. Then where does this sound come from?

The sound we hear from a sea shell is nothing but the sound around us. There are sounds in our surroundings, which are so low that they are almost inaudible to us. These sounds enter the sea shell and get echoed numerous times, which amplifies the loudness of the sounds. It sounds like that of sea waves, when we listen from a sea shell. According to the size and shape of the sea shell, the nature of the sound varies. Isn’t it interesting? Were you aware of it before reading this Arivu Dose? Drop your comments below.


Unknown | Public Domain.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

5 Comments

  • Archunaveera Arjun - 04/07/2014, 11:02 AM

    sngku ethirolikum thanmai udayathu yanru yamaku therindathea

  • Thara Devi - 03/30/2014, 1:59 PM

    mystery solved today….. !! :D

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 03/30/2014, 1:47 PM

    இல்லை நண்பர்களே Kiruba Natpu & Thala Thalabathi. அப்படித் தான் ஆரம்பத்தில் எண்ணினார்கள், ஆனால் இதை காதில் வைக்காமல் ஓர் மின்சார ஒலிபெருக்கி (microphone) வைத்து பரிசோதனை செய்த போதும் அதே சத்தம் தான் கேட்டது. எனவே காரணம் இரத்த செயல்பாடு இல்லை.

  • Kiruba Natpu - 03/29/2014, 4:27 AM

    Athu namma raththin seayal padu

  • Thala Thalabathi - 03/28/2014, 12:33 PM

    andha satham nam kaadhukull irukum miga melliya narambugalil raththam painthu sellum satham agum