Science & Mystery Read in english

பூச்சி ஏன் விளக்கினை சுற்றுகின்றது?

By Niroshan Thillainathan on December 9th, 2014

Why do insects buzz around my light?இரவு நேரங்களில் நமது வீட்டிலுள்ள விளக்குகளைச் சுற்றி, குறிப்பாக சமையலறை விளக்குகளைச் சுற்றி பூச்சிகள் சத்தமிட்டுக் கொண்டே சுற்றிக்கொண்டிருக்கும். இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் அவற்றில் பெரும்பாலானவை யூகித்ததாகவும், நிரூபிக்க முடியாததாகவும் உள்ளது.

சில பூச்சிகள் நிலவினை கருத்தில் கொண்டு பயணிக்கின்றன. அவை விளக்கினை நிலவு எனத் தவறாக எண்ணுவதால் இவ்வாறு செய்கின்றன என்ற கருத்து அதிகமாக நிலவுகிறது. அரை மைல் தூரத்தில் இருக்கும் விளக்கின் வெளிச்சத்தினால் கூட பூச்சிகளுக்குத் தலை சுற்றல் ஏற்படலாம் அதனால் அவை விளக்கின் பக்கம் ஈர்க்கப்படுகின்றன என்ற மற்றொரு கருத்தும் நிலவுகிறது. ஆண் பூச்சிகளைக் கவருவதற்காகப் பெண் பூச்சிகள் சில வெளிச்சத்தினை ஏற்படுத்தும் தன்மையுடையது. இந்த வெளிச்சத்தினை நினைத்துக் கொண்டு ஆண் பூச்சிகள் விளக்கினை நோக்கி செல்கின்றன என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் பெண் பூச்சிகளும் விளக்கினை சுற்றுகின்றன, அது ஏன் என்பது தெரியவில்லை.

நாம் பாரம்பரியமாகப் பயன்படுத்தும் சோடியம் விளக்குகளைக் காட்டிலும், தெருவிளக்குகளில் பயன்படுத்தப்படும் வெள்ளை அல்லது வெள்ளை-நீலம் நிறங்கள், பூச்சிகளை அதிகம் கவருகின்றன. இது கூட காரணமாக இருக்கலாம். ஒரு இருட்டில் சந்தோஷத்துடன் பறந்து திரியும் பூச்சிகள் அதே இடத்தில் ஒரு பிரகாசமான ஒளி ஏற்படும்போது அதனை நோக்கி கவரப்படுகின்றன என்ற கருத்தும் பரவலாக உள்ளது. ஆனால் இதற்கான துல்லியமான காரணம் என்னவென்று, இது வரை யாருக்குமே தெரியவில்லை.

சரி மற்றவர்களுக்குத் தான் தெரியவில்லை, எனது அறிவு டோஸ் நண்பர்களுக்கும் கூடத் தெரியவில்லையா? பூச்சிகள் ஏன் விளக்கினை சுற்றுகிறது என்பதற்குக் காரணம் உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!


English Version

Why do insects buzz around my light?


During the night time, insects buzz around the lights in our home, especially the kitchen lights. Although many reasons are said, most of them are speculative and unproved.

Some insects fly with the thoughts of the moon. It has been believed by most people that they misidentify the lamps as moon. Another belief is that a bright light at a distance of half a mile can cause dizziness to the insects and attract them towards it. Some of the female insects have the ability to glow to attract the male insects. Some people believe that the male insects get attracted to the lamps thinking of that glow. But it is not known, why the female insects buzz around the lights.

Insects are attracted more towards the white or bluish white street lights than the traditional sodium lamps which we use in our homes. It is also believed that the insects which fly around happily in darkness get attracted towards a bright light which appear in the same place. But no one knows the correct reason for it.

Do you know the reason behind this bizarre nature? Share your thoughts below.


Nevit Dilmen | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.