Behavioural Sciences Read in english

அலுவலகத்தில் இருக்கும்போது ஏன் அடிக்கடி சோர்வடைகின்றோம்?

By Niroshan Thillainathan on December 23rd, 2014

Why do I feel tired and bored in the officeஇது நமது அன்றாட வாழ்கையில் நடக்கும் ஒரு செயல் தான். நாம் விடுமுறையிலோ அல்லது விழாக்களிலோ இருக்கும்போது நமக்கு உடல் சோர்வு அல்லது மனச்சோர்வு தோன்றுவதில்லை. ஆனால் அலுவலகத்தில் இருக்கும்போது குறிப்பாக விடுமுறை முடிந்த அடுத்த நாள் என்பது நமக்கு மிகவும் சிரமம் தரும் ஒன்றாகவே இருக்கிறது.

இதற்குரிய காரணம் என்னவென்றும் உங்களுக்குத் தெரியுமா? அது வேறு ஒன்றும் இல்லை, நமது ‘மனநிலை’ தான் காரணம். நாம் மன மகிழ்வுடன் செய்யாத எந்தவொரு செயலும் நமக்கு ஆர்வமாக இருப்பதில்லை. அதேதான் அலுவலகத்திலும் நடக்கிறது. எந்த செயலில் ஆர்வமும், கவனமும் அதிகம் இருக்குமோ அங்குதான் நமது மனமும் செல்லத் துடிக்கிறது.

உதாரணமாக டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளை எடுத்துக்கொள்ளலாம். பெரும்பாலானோர் காண விரும்புவது டி20 போட்டிகளை மட்டுமே, ஏனெனில் அதில் தான் சுவாரசியம் அதிகம் என்பதால். அதேபோலத்தான் நமது வேலைகளும், விடுமுறைக் காலங்களில் நாம் நமது மனதிற்கு பிடித்த வேலைகளை மட்டுமே செய்கிறோம். ஆனால், அலுவலகத்தில் எந்த வேலையானாலும் செய்தே ஆக வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது!

எனவே, எந்த வேலையானாலும் கிடைத்ததைச் செய்யாமல், பிடித்ததை செய்தால் வெற்றி தான், நண்பர்களே! இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? அதைக் கட்டாயம் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Why do I feel tired and bored in the office


This happens routinely in our life. We don’t feel tired or stressed when we are in vacations or celebrations. We always feel tired and irritated when we are in the office especially after a vacation or weekend. Do you know why? It is because of our mood. We don’t find something interesting when we do it without joy. The same thing happens in office. Our mind gets distracted to the things which are interesting. For example, consider Test match and T20 in cricket. We like T20 more than Test matches because it is more interesting. Similarly, when we are in vacation, we do only the things which make us happy. But in office, we are compelled to do the job immediately. Whatever the job is, if you do it with interest, you can feel the joy. Post your comments about this Arivu Dose below.


Simon Law | Creative Commons by-sa-2.0, via Flickr.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.