Earth & Environment

கடல் எங்கிருந்து வந்தது

By Niroshan Thillainathan on August 19th, 2014

கடல் எங்கிருந்து வந்ததுஸ்டீவன் ஜாகப்ஸென் தலைமையில் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் இருந்து சென்ற புவியியலாளர்கள், சமீபத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பினைக் கண்டுபிடித்துள்ளனர். பூமியின் மையப்பகுதி அருகே அதிகளவு தண்ணீர் இருப்பதே அந்தக் கண்டுபிடிப்பு. இதில் என்ன ஆச்சரியம் என்று நினைக்கின்றீர்களா? இந்தத் தண்ணீரின் அளவு புவியின் மேற்பரப்பிலுள்ள எந்தவொரு கடலை விடவும் மூன்று மடங்கு அதிகம்.

புவியியலாளர்கள் நிலஅதிர்வு தொடர்பான அலைகளின் வேகத்தினைக் கொண்டு, புவிக்கடியில் இருப்பதை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது அலைகள் “ரிங்க்வுட்டைட்” எனப்படும் நீலநிற பாறைகளில் பட்டவுடன் அதன் வேகம் குறைந்ததைக் கவனித்தனர். இதன் அர்த்தம் அந்தப்பகுதி நீர் மற்றும் பாறையால் இருப்பதைக் குறிக்கிறது.

புவியின் மெல்லிய அடுக்கிற்குக் கீழ் சுமார் 700 கிலோ மீட்டர் வரை இந்தத் தண்ணீர் பரவியுள்ளது. இந்த மெல்லிய அடுக்கு, புவியின் மேற்பரப்பிற்குக் கீழே வெப்பமான பாறையிலான அடுக்கினால் ஆனது. புவியின் மேற்பரப்பிலுள்ள தண்ணீர் எங்கிருந்து வந்தது என்பதற்கு இதுவே சிறந்த ஆதாரம் என ஜாகப்ஸென் கூறினார். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நீரின் இடம் சரியான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் உள்ளதாகவும், அந்தத் தண்ணீர் புவியின் மேற்பரப்பிற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் ஜாகப்ஸென் கூறியுள்ளார்.

இது பல புவியியலாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தாலும், நீர் புவியின் பிற பகுதிகளில் இருந்து ஊடுருவி இருக்குமா, அல்லது பனிக்கட்டி வால்மீன்கள் பூமியின் மீது மோதியதால் உருவாகியிருக்குமா? இவ்வாறு பல விதமான கேள்விகளை எழுப்புகின்றனர். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் நண்பர்களே? இந்த நீர் எங்கிருந்து வந்திருக்கலாம்? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!

Photo: Andreas Tille, License: Creative Commons by-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

20 Comments

 • parthipan - 02/11/2015, 4:13 PM

  சூப்பர் நண்பா

 • T.kaviyarasan - 12/21/2014, 3:38 PM

  nice sirrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
  give me more

 • abi - 11/13/2014, 6:00 AM

  it already have in the earth.

 • anandbold - 09/19/2014, 8:12 AM

  Yosikka vendiya vesiyam

 • ghss - 09/19/2014, 6:56 AM

  wonderful

 • Neha Gupta - 09/18/2014, 9:58 PM

  Amazing Message

 • jeyamoorthy - 09/16/2014, 7:06 PM

  Fabulous message

 • pavi - 09/08/2014, 4:29 AM

  GOD IS GREAT……………………..

 • Haakimul Hisny - 08/19/2014, 7:31 PM

  Al Quran 11:44. பின்னர்: “பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்” என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது – அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.

 • Narayanan Karu - 08/19/2014, 6:52 PM

  பூமியின் மையப்பகுதியில் இன்றும் நெருப்புகொலம்தான் இருக்கிறது. பூமி முதலில் நெருப்புகொலமாகத்தன் எரிந்து கொண்டிருந்தது நாளடைவில் நீருடன் பெரிய வால்நட்சத்திரம் பூமியின்மேல் விழுந்ததால் பூமி முழுது மேல்பரப்பு நீர் அணைத்து நீரினால் நிரப்பப்பட்டது. அதன் பிறகும், காற்று விண்மீன், பனிக்கட்டி விண்மீன், வாயு விண்மீன்கள் அல்லது கோள்கள் பூமியின் மேல் விழுந்து நாளடைவில் உயிரனம் உருவானது. ஆகவே பூமியின் மையப்பகுது நெருப்புகுலம்பே. அதுதான் அவ்வப்போது எரிமலையாக வெளிய கக்குகிறது. இந்த படத்தில் உள்ள இடம் முதன் முதலில் அந்த நீர் கொள்/நட்சத்திரம் விழுந்த பகுதியாக இருக்கலாம்.

 • Ramesh Ramesh - 08/19/2014, 6:37 PM

  பரம்பொருளான சிவ பெருமானின் கருனையால் உருவானது

 • Msk Mohan - 08/19/2014, 6:36 PM

  You know

 • Madhumitha Mital - 08/19/2014, 5:53 PM

  It may be chilly if i say this example. Let say earth is a gulab jamoon (or தேன் மிட்டாய்) once soaked in syrup and then got dried. We will get dried outer layer and juicy soft inside syrup filled water pockets of jamoon. If we scrap out dried jamoon’s outer layer here and there, we can see liquid syrup accumulating at those scrap pits – just imagine and compare this to oceans on the outer layer of earth surface. What we can come up with the an idea based on this is.. Earth’s inner core is not only a solid layers of dust,gases n rocks. Also, it is made of water. Answer to yr question: Whenever the earth got formed into this shape as an earth, The water has to be there at the beginning stage itself.

 • Neela Pookkal Madurai - 08/19/2014, 5:47 PM

  allahu akbar

 • Raja Rajan - 08/19/2014, 5:44 PM

  ஈர்ப்பு விசை காரணமாக மேலிருந்து கீழ் நோக்கி செல்லவே சாத்தியம்

 • Mrvinoth Pranav - 08/19/2014, 5:38 PM

  nice

 • James Rajs - 08/19/2014, 5:26 PM

  iyarkai

 • Gánésh Jaï - 08/19/2014, 5:15 PM

  Nice

 • Samsu Raj - 08/19/2014, 5:11 PM

  இயற்கையாக உருவாக்கிருக்கலம்

 • Arun Vikram - 08/19/2014, 5:09 PM

  incredible