Social Sciences Read in english

OK என்றால் என்ன?

By Niroshan Thillainathan on October 14th, 2014

OK என்றால் என்ன?உலகில் வாழும் எல்லோருக்குமே புரிகின்ற ஒரு வார்த்தை இருக்கிறது. அது வேறு ஒன்றுமே இல்லை, “OK” என்று நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தை தான். ஆனால், உண்மை சொல்லப் போனால், இந்த வார்த்தைக்குப் பின்னால் ஓர் வரலாறே இருக்கிறது நண்பர்களே! அதை அறிய விரும்பினால், கட்டாயமாக இந்த அறிவு டோஸைப் படியுங்கள்!

எரிக் பார்ட்ரிட்ஜ் என்பவர் “Old Kinderhook” என்ற வார்த்தையிலிருந்து வந்திருக்க வேண்டும் என்கிறார். ஆனால் வில்லியம் மற்றும் மேரி மோரிஸ் என்போர் அவர்களின் மோரிஸ் அகராதியில் (1977 ல்) “Aux Cayes” என்ற வார்த்தையிலிருந்து வந்திருக்க வேண்டும் என்கிறார்கள். இந்த வார்த்தை பற்றிய விளக்கத்தினைக் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஆலன் வால்கர் ஏற்கனவே விளக்கியுள்ளார்.

ஆனால், இவர்கள் கூறுவது ஒருபுறம் இருந்தாலும், அநேக மக்கள் நம்புவது “all correct” எனும் விரிவாக்கத்தினைத் தான். இது ஒரு பொருளற்ற ஆர்வக் கோளாறினால் 1830-1834 ஆண்டுகளில் பயன் படுத்தப் பட்டிருக்கலாம் எனவும் கூறுகின்றனர். இன்னும் ஒரு சிலர் இந்திய மொழிகளில் “okeh” என்று கூறுவது “ஆமாம்” என்று பொருள்படும் அதனால் தான் அவ்வாறு வைத்துள்ளனர் என்று கூட கூறுகின்றனர்.

எப்படியிருந்தாலும் நாம் அந்த வார்த்தையை அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்க ஆரம்பித்து விட்டோம், இனி அதனைப் பிரிப்பது கடினமான ஒரு செயல் என்பது மட்டும் உறுதி. இந்த அறிவு டோஸ் பிடித்ததா? இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள், நண்பர்களே!


English Version

Where did the expression OK come from


There is a word which can be understood by everyone in this world. Do you know what it is? “OK”! – The commonly used word in our conversations. There is an amazing history behind the origin of this word. Read this Arivu Dose to know about it.

Erik Patridge says that it might have originated from the word “Old Kinderhook”. But William and Mary Morris say in their Morris Dictionary (in 1977) that it should have originated from the word “Aux Cayes”. It has been explained by Alan Walker of The Columbia University. Though their claims are true, most people believe that it means “All Correct”. Some people say that it might have been used in the 1830 – 1834 without any obvious reason and just as a wacky word.

It is also said that “Okeh” in Indian languages means “yes” and this word would have originated from it. Whatever its origin is, we have started using it frequently in our conversations and it is very difficult to stop using it now.

Did you enjoy reading this Arivu Dose?  I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


Maximilian Schönherr | Creative Commons by-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

1 Comments

  • Abubaker - 10/30/2014, 1:48 PM

    உலகப்போர்களின் போது அன்றாட சண்டை ஓய்ந்ததும் தத்தமது வீரர்களை எண்ணி கணக்கிட்டு தலைமை கேந்திரத்துக்கு ‘ஒருவர் கூட சாகவில்லை எல்லோரும் உயிருடனிருக்கிறோம்’ என்ற பொருள்பட ‘ஜீரோ கில்ட்'[zero killed] என்பதனை சுருக்கமாக 0K என்று தந்தி அனுப்புவார்களாம். அதுவே பின்னாளில் ஜீரோ என்பது ஓ-வாகி ஓகே ஆகிவிட்டது.