Astronomy Read in english

வெகு தூரம் சென்றுவிட்ட விண்கலம்

By Niroshan Thillainathan on February 13th, 2014

வெகு தூரம் சென்றுவிட்ட விண்கலம்மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைப் பொருட்களில் இன்று வரை விண்வெளியில் வெகு தூரம் சென்றுவிட்ட விண்கலம் வொயேஜர் 1 (Voyager 1) ஆகும். அமெரிக்க நாசாவால் (NASA) கட்டப்பட்ட இந்த ஆளில்லா விண்ணுளவி (space probe) சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக 05.09.1977இல் ஏவப்பட்டது. 30.01.2014 அன்று வொயேஜர் 1 ஏறத்தாழ 19,200,000,000 (19.20 பில்லியன்) km சென்றுவிட்டது. 61,000 km/h வேகத்தில் பயணிக்கும் இந்த விண்ணுளவியின் தூரம் ஒவ்வொரு வருடத்திற்கும் ஏறத்தாழ 540 மில்லியன் kmகு அதிகரித்துக் கொண்டு போகின்றது. இன்றும் கூட இந்த விண்கலம் செய்திகள் மற்றும் படங்களைப் பெற்று, பூமிக்கு அனுப்பிக் கொண்டு இருக்கின்றது. வொயேஜர் 1 ஆல் அனுப்பப்படும் இந்த செய்திகள் ஒளியின் வேகத்தில் சென்றாலும் புவியை வந்தடைய ஏறத்தாழ 17 மணி நேரம் எடுக்கின்றது.

இதில் சுவாரசியமான விடயம் என்னவென்று தெரியுமா…? இவ்வளவு தூரம் சென்ற இந்த விண்ணுளவி நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் உயர் தொழில்நுட்பமே (high technology) இல்லை!

அந்நேரம் இந்த விண்ணுளவி கணினியின் உதவியுடன் உருவாக்கப்படவில்லை. பென்சில், காகிதம், சாக்போர்டு (chalkboard/blackboard) மற்றும் மனிதனின் மூளையின் அடிப்படையில் மட்டுமே இந்த வொயேஜர் 1 உருவாக்கப்பட்டது. நம்பவே முடியவில்லை அல்லவா? இன்றைய தொழினுட்பம் வளர்ந்த வளர்ச்சிக்கு வொயேஜர் 1ஐ விட கம்ப்யூட்டிங்கில் (computing/calculating) நமது காற்சட்டை பையில் காணப்படும் தொலைபேசி மற்றும் நுண்ணறிபேசி (smartphone) பல மடங்கு வேகம் கூடியதாக இருக்கின்றன. உதாரணத்திற்கு, 40KB கும் குறைவான நினைவகம் (memory) கொண்ட வொயேஜர் 1 உடன் ஒப்பீட்டுப் பார்க்கும் போது, இன்று வாங்கக்கூடிய 16GB iPhone 5S இல் 240,000 மடங்கிற்கும் அதிகமான நினைவகம் பொருத்தப் பட்டுள்ளது. இப்படி இருந்தும் வொயேஜர் 1 தான் நாசாவின் அனைத்துத் திட்டங்களிலும் மிகவும் வெற்றிகரமானது ஆகும்.

நண்பர்களே, உயர் தொழில்நுட்பம் இல்லாத காலத்திலே இவ்வளவு அதிசயமான திட்டங்கள் நடாத்தப் பட்டுள்ளன. இன்றைய மற்றும் எதிர்கால உயர் தொழில்நுட்பத்துடன் இன்னும் என்னவெல்லாம் செய்யப்படப் போகின்றது என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போமா…? இந்த அறிவு டோஸ் பிடித்ததா? உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள், நண்பர்களே!


English Version

Where are the Voyagers


The manmade satellite, which has travelled the longest distance, is the Voyager 1. It was an unmanned space probe created by NASA to research about the outer surface of the solar system and was launched on 05.09.1977. On 30.01.2014 Voyager 1 has travelled a distance of 19,200,000,000,000 (19.20 billion) km.  It travels at a speed of 61,000km/h and reaches a distance of more than 540 million km in a year. Even today this space probe sends information and photos about the outer space to Earth. Though the information relayed by Voyager 1 travels in light speed, it takes 17 hours to reach the Earth.

The surprising issue is that this space probe is not high technology at all. This space probe was not created using a computer. It was created only by pencil, paper, blackboard and the genius of human brain. Unbelievable isn’t it? Compared to Voyager 1, our cell phones and smart phones are more advanced in computing and calculating. When compared to the 40 KB memory of Voyager 1, we can store 240,000 times more data in a 16GB iPhone 5S. It is to be hightlighted, that Voyager 1 is the most successful mission of NASA.

Such wonderful missions have been undertaken in olden days when the technology was not advanced. Let’s wait and watch what awaits us in this high tech present and future.

Did you enjoy reading this Arivu Dose? Share your thoughts and opinions with me by dropping a comment below.


NASA | Public Domain

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

118 Comments

 • parthipan - 11/18/2014, 3:41 PM

  என்னவென்று சொல்ல ஆசார்யமாக இருக்கிறது

 • Prakash kumar - 09/24/2014, 2:21 PM

  Power

 • Rehana Begum - 08/19/2014, 11:07 AM

  Super

 • Nzmr Ali - 08/19/2014, 10:25 AM

  Nambure madari ille

 • Praveena Chozhan - 08/19/2014, 6:46 AM

  Thanks for information

 • Panner Selvam - 08/18/2014, 7:06 PM

  Vry Usefull NEWS

 • Vel Ips - 08/18/2014, 6:53 PM

  Fantastic

 • Mohamed Mansoor Ameer Sukri - 08/18/2014, 4:15 PM

  super O super

 • Jonam Manoj - 08/18/2014, 3:49 PM

  Superrrr

 • Master Guru - 08/18/2014, 3:41 PM

  realy goood

 • சிவ. சி.மாணிக்கம் - 08/18/2014, 2:50 PM

  நல்ல தகவல் நண்பரே

 • Harish Raina - 08/18/2014, 2:45 PM

  Fantastic voyager1.thank you friend&arivu dose

 • Partha R Sarathy - 08/18/2014, 2:32 PM

  Super

 • Selva Manigandan - 08/18/2014, 2:23 PM

  Welcome.

 • Fathima Faseeha - 08/18/2014, 2:22 PM

  Gud

 • Ranga Rajan - 08/18/2014, 2:10 PM

  Super

 • Murugan Samu - 08/18/2014, 1:53 PM

  Word keenness

 • Karthik Vijay - 08/18/2014, 1:12 PM

  super

 • Love PuvanIce - 08/18/2014, 1:06 PM

  Unga arivuku engaiyo povinga .keep it up.

 • Guru Sarma - 08/18/2014, 1:04 PM

  Very thanks

 • Rk Elango - 08/18/2014, 12:42 PM

  super

 • Kalees MJ - 08/18/2014, 12:25 PM

  Use ful news

 • Susima Prabha - 08/18/2014, 12:20 PM

  super

 • Yasar Arafath Yasar Arafath - 08/18/2014, 12:20 PM

  supper power..

 • Pathivu Raja - 08/18/2014, 11:30 AM

  Excellent