Behavioural Sciences Read in english

பொய் பேசினால் மூக்குச் சுடும்

By Niroshan Thillainathan on May 31st, 2014

பொய் பேசினால் மூக்குச் சுடும் நண்பர்களே, ஒருவர் பொய் சொல்கிறார் என்பதை எப்படிக் கண்டுபிடிக்கலாம் தெரியுமா? அதை மிகவும் இலகுவாக அவர்களின் மூக்கைத் தொட்டுப் பார்த்துக் கண்டுபிடித்துவிடலாம். பொய் பேசினால் அதை உங்கள் மூக்குக் காட்டிக் கொடுத்துவிடும். அதற்குக் காரணம் என்னவெண்றால் நீங்கள் பொய் பேசும் நேரம் உங்கள் மூக்கு சூடாகும், என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஸ்பெயினில் உள்ள க்ரெநடா (Granada) பல்கலைக்கழகத்தின் உளவியல் ஆராய்ச்சியாளர்கள், வெப்பவரைப்படத்தைப் (Thermograph) பயன்படுத்தி, மக்களின் முக வெப்ப அளவை ஆய்வு செய்தனர். இந்த ஆராய்ச்சியின் முடிவில், மனிதர்கள் பொய் பேசும் பொழுது அவர்களது மூக்கு மற்றும் கண்களின் ஓரத்தில் இருக்கும் சுற்றுப்பாதைத் தசை ஆகியவற்றின் வெப்பம் சட்டென்று உயர்வதாகத் தெரிவிக்கின்றது. மேலும், நாம் ஒரு கடினமான மனப் பணியை மேற்கொள்ளும் பொழுது, நமது உடலின் வெப்பநிலை குறைகிறது எனவும், பதட்டமான சூழ்நிலையில் வெப்பநிலை அதிகரிக்கிறது எனவும் கண்டறிந்துள்ளனர்.

இந்த விளைவுகள் மூளையின் இன்சுலா என்ற பகுதியால் நிகழ்கிறது. இந்த இன்சுலா, உணர்வு மற்றும் உடலின் வெப்பத்தைக் கண்டறிந்து கட்டுப்படுத்தும் செயல்பாடு கொண்டது. பொய் கூறுவது, இந்தப் பகுதியின் செயல் திறனை உயர்த்துகிறது, என்று இந்தக் குழு தெரிவிக்கிறது.

எனவே, அடுத்த முறை உங்கள் நண்பர் ஒருவர் உங்களுக்குப் பொய் சொல்கிறார் என்கின்ற சந்தேகம் உங்களுக்கு வந்தால், அவரிடம் „நீ உண்மை சொல்கிறாயா“ என்று கேட்பதற்குப் பதிலாக „உன் மூக்கைத் தொடலாமா“ என்று கேட்டுவிடுங்கள் :P.

இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

When you lie your nose temperature rises


Hi friends! Do you know how to find if someone is lying to you? You can find it easily by touching their nose. Your nose will show that you are lying. Researchers have found that your nose gets warmer when you lie.

The psychology researchers of the University of Granada in Spain have studied the temperature of people’s face, using a thermograph. This studies show that there is a rise in temperature around the nose and corners of eyes, when someone tells a lie. They have also found that our body temperature decreases when we undertake mentally stressful job and it increases when we are in an anxious situation.

These effects happen in the Insula of our brain. The Insula is responsible for the sense and control of the temperature of our body. The research team says that telling a lie increases the function of the Insula.

Next time, when you have a doubt that if someone is lying to you, instead of asking if he is saying the truth, ask if you can touch his nose :P


Lourdes S. | Creative Commons by-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

10 Comments

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 06/09/2014, 12:55 PM

    Yalu Siva haha… அதுவே தான்! :D!!

  • Yalu Siva - 06/05/2014, 11:30 PM

    hahaha… appo ithuvaa antha ‘Pinocchio effect’ ?? :p :p

  • Mikdad Micky - 06/05/2014, 11:23 PM

    What is the answer fr me?

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 06/05/2014, 11:21 PM

    உங்கள் கருத்தைத் தெரிவித்து இந்த அறிவு டோஸை சிறப்பித்ததற்கு மிக்க நன்றி நண்பர்களே Karuppu Roja Best Nithun Vinoth Nadesanp Thiyagu Suresh Mikdad Micky

  • Vinoth Nadesanp - 06/01/2014, 8:27 PM

    இதை முற்றிலும் மறுக்கிறேன்

  • Thiyagu Suresh - 06/01/2014, 11:41 AM

    Nega solluga papam,

  • Hydraulic Hari - 06/01/2014, 7:26 AM

    mudhala maturadu naan ahh dan irukum! :-P

  • Best Nithun - 06/01/2014, 4:33 AM

    Super

  • Mikdad Micky - 05/31/2014, 8:20 PM

    Wenumende poi sennaaluma mooku soodaahum? For example enazu naattin janaathipathiyin mahalai tan nan thirumanam mudika pohiren endu sollum pozum mooku soodahuma?

  • Karuppu Roja - 05/31/2014, 4:21 PM

    ha ha ha kandipa sek panran master