Behavioural Sciences Read in english

தும்மலில் எத்தனை வகை உள்ளது

By Niroshan Thillainathan on November 13th, 2014

What your sneeze says about your personalityஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தும்முவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இதற்குக் காரணம் என்ன என்று என்றாவது யோசித்திருப்பீர்களா, நண்பர்களே? யோசித்திருந்தாலும், யோசிக்கவில்லை என்றாலும், இன்று இந்த அறிவு டோஸ் ஊடாக அதனது காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்.

நமது நுரையீரலில் இருந்து திடீரென வெளிவரும் காற்றானது வாய் மற்றும் மூக்கு வழியாக வெளிவருவது தும்மல் ஆகும். தும்மல் ஏற்படும் போது நமது முகம், தொண்டை மற்றும் மார்புப் பகுதிகளில் தீவிர தசைச் சுருக்கங்கள் தோன்றும். பிரகாசமான வெளிச்சத்தினால் கூட தும்மல் ஏற்படும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் பிரகாசமான வெளிச்சத்தினால் கூட தும்மல் ஏற்படும், அதற்குப் ‘போட்டிக் ஸ்னீஸிங்க்’ என்று பெயர். இத்தகைய தும்மல் ஐந்தில் ஒருவருக்கு இருக்கிறது.

ஒவ்வொருவரின் சரீர அமைப்பினைப் பொறுத்தும், அவர்களின் தும்மல் விதம் வேறுபடும். இதில் நுரையீரல், காற்றுக்குழல் ஆகியவற்றின் அளவுகள் மற்றும் தொண்டை, மார்பினை சுற்றியுள்ள தசைப்பகுதி முக்கியப்பங்கு வகிக்கின்றன. தும்மல் வரும்போது அதனைத் தடுக்கும் வகையில் மூக்கிற்கு அழுத்தம் கொடுக்காதீர்கள், அது உங்களின் செவிப்பறையில் பாதிப்பினை ஏற்படுத்தும். ஒரு சில வேளைகளில் இது கட்டுப்படுத்த முடியாத சிறுநீர் வெளியேற்றத்தையும் ஏற்படுத்தும்.

வித்தியாசமான தும்மல் பற்றி 18,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக சத்தத்துடன் தும்மல் போடுபவர்கள் தன்னம்பிக்கை மற்றும் ஆக்கிரமிப்பு கொண்டவர்களாக இருப்பர். குறைந்த சத்தத்துடன் தும்மல் போடுபவர்கள் குறைந்த தன்னம்பிக்கை, வெட்கம் மற்றும் உள்முகச்சிந்தனை கொண்டவர்களாக இருப்பர்.

சாதாரணத் தும்மலுக்குப் பின்னால் இத்தனை விஷயங்கள் உள்ளதா எனத் நிச்சயமாக உங்களுக்குத் தோன்றும். நீங்கள் எப்படித் தும்முவீர்கள்? அதிக சத்தத்துடனா, குறைந்த சத்தத்துடனா? உங்கள் பதிலையும் மேலும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

What your sneeze says about your personality


You would have seen different people sneezing differently. Have you ever thought about the reason behind it? Even if you have not, learn about it in this Arivu Dose.

The sudden expulsion of the air from the lungs through the nose and mouth is called sneezing. When we sneeze, the muscles in our face, throat and chest undergoes severe contractions. Can you believe that even bright light could make you sneeze? Yeah! Sneezing caused by bright light is called Photic sneezing and it is seen in one in five people.

Depending on the physical characteristic of the person, the sneezing differs. The important factors are the size of lungs and trachea and the muscles around the chest. Don’t apply pressure to your nose in order to stop sneezing as it may damage the ear drum. Sometimes it leads to uncontrolled urination.

A research conducted about difference in sneezing among 18000 people has found that people who sneeze loudly are confident and dominating personality while those who sneeze slowly are with low confidence, shy and introvert.

Isn’t it surprising to know this information about sneezing? How do you sneeze? Loudly or quietly? Post your reply and your comments about this Arivu Dose.


James Gathany | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

1 Comments

  • Kannan - 11/14/2014, 2:32 PM

    good news. but nam udambil dust iruntha than thummal varuma nu enaku confirm a theriyala.. yenna yenna reason ku thummal varum brother.