Earth & Environment Read in english

மனித இனம் அழிய எவ்வளவு காலமாகும்

By Niroshan Thillainathan on November 27th, 2014

What would happen if humans became extinct?நண்பர்களே, இன்று சற்று வித்தியாசமான ஓர் சிந்தனையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், படிக்கின்றீர்களா? அது என்னவென்றால், நமது மனித இனம் முழுமையும் அழியும் நிலை வந்தால், நாம் இருந்த சுவடே இல்லாமல் அழிய எத்தனை காலமாகும்?

தொல்பொருள் அளவீடுகளின் படி பார்த்தால்: நாளைக்கே நாம் அழிவதாக இருந்தால், பல நூறு ஆண்டுகளாக நாம் வாழ்ந்து வந்த கட்டிடங்கள் சிதையத் தொடங்கும். இதில் கடின உழைப்பால் உருவான கிரேக்க கோவில்கள், எகிப்து பிரமிடுகள் போன்றவை எஞ்சியிருக்கலாம். ஏனெனில் அவை இன்றும் நம்முடன் இருக்கின்றன.

புவியியல் அளவீடுகளின் படி பார்த்தால்: ஐரோப்பா நாடுகள் நிலப்பகுதியாக இருந்ததை விட நீர்ப்பகுதியாக இருந்ததற்கு அதிகப்படியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதன்படி பார்த்தால் மறுபடியும் ஒரு நாள் அனைத்து நிலப்பரப்பும் கடலால் மூழ்கடிக்கப்படும். அந்தக் காலகட்டத்தில் நமது சுவடுகள் மற்ற பாறைகள் அல்லது மண் சிதைவுகளுக்கிடையே பதிக்கப்பட்டிருக்கும். இப்படித் தான் நாம் டைனோசரின் சுவடுகளைப் பாறை படிநிலைகளில் இருந்து எடுத்தோம்.

இதுவரை கண்டறியப்பட்டதில் ஒரு செல் பாக்டீரியாவின் படிமங்கள் தான் மிகவும் பழமையானது. கணிப்பின் படி அவை சுமார் 3.5 மில்லியன் ஆண்டுகள் வயதுடையவை. அதே அளவீடுகள் தான் நம் இனத்திற்கும். நம்மில் சிலர் படிமங்களாகலாம் அல்லது பாறை படிநிலைகளாகலாம்.

எப்படியிருந்தாலும் நமது உலகம் அழியாத வரை கண்டிப்பாக உயிரினங்கள் தோன்றிக் கொண்டே தான் இருக்கும். இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன நண்பர்களே? அதைக் கண்டிப்பாகக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

What would happen if humans became extinct?


Hi friends! Let me share some interesting information about a different thought. If there comes a time for the end of human race, how long will it take for the extinction of humans?

According to archaeological estimations, if the human race comes to an end tomorrow, the buildings in which we lived for hundreds of years will begin to deteriorate. The buildings like Greek temples and Egyptian pyramids may remain, as they were built by very hard work and they have survived till now.

According to geological estimations, there is evidence suggesting that most of the land areas in the Europe would have been covered by water in the past. If this is true, these land areas will be submerged under water, someday. At that time our remains will get fossilised or as sedimentary rocks. This is how we excavated the remains of dinosaurs from the fossils.

The fossil of the unicellular bacteria is the oldest excavated remains so far. They are approximately 3.5 million years old. It will take the same time for us. Some of us may become fossils or sediments on rocks. Whatever happens, new life forms will keep on emerging till our world exists. Post your comments about this Arivu Dose.


NASA | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.