Social Sciences Read in english

மனிதனின் மிகவும் பழமை வாய்ந்த பெயர்கள் எவை

By Niroshan Thillainathan on November 7th, 2014

What is the oldest recorded human nameஇந்தப் புவியில் மிகவும் பழமை வாய்ந்த பெயர்கள் எவை என்று உங்களிடம் கேட்டால், அதற்குப் பதில் கூறுவீர்களா? அறிவியல் ரீதியாக இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும் என்றால், இந்த அறிவு டோஸைக் கண்டிப்பாகப் படியுங்கள்!

சீனாவை எடுத்துக்கொண்டால் கி.மு. 6600 மற்றும் 6200 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட குறியீடுகள் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையான அடையாளத்தைக் கொடுக்கின்றன. இதற்கு ‘ஜியஹு’ என்று பெயர். இவர்கள் தங்களது பெயர்களை மட்பாண்டங்களில் கீற்றுவது மூலம் வெளிப்படுத்தினர்.

சுமேரியாவில் முதன் முதலாக கி.மு. 3200 மற்றும் 3101 ஆண்டுகளான ஜாம்டெட் நாசர் காலத்தில் பெயர்களை கிட்டத்தட்ட எழுத்து வடிவில் களிமண்ணில் எழுதினர்.

எகிப்தில் கி.மு 3200 ஆண்டுகளில் எழுதப்பட்ட ‘ஐரி-ஹார்’ என்ற பெயர்தான் இங்கு எழுதப்பட்ட முதல் பெயராக இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மனிதர் தான் மேல்-எகிப்து, கீழ்-எகிப்து என இரண்டாக இருந்த எகிப்து நாட்டினை இணைத்ததாகக் கூறப்படுகிறது. இவர் கி.மு 3150 முதல் 3125 வாழ்ந்திருக்கலாம் என்று கணித்துள்ளனர்.

மத்தியத் தரைக்கடல் பகுதியில் ‘அனிட்டா’ என்ற பெயர் தான் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களில் மிகவும் பழமையான பெயர். இதற்கு அர்த்தம் என்னவென்று தெரியாவிட்டாலும், இந்தப் பெயருக்குச் சொந்தமான மனிதர் குசாரா நகரத்தின் ஹிட்டி என்ற பகுதியை ஆண்ட அரசர் என்பது மட்டும் தெரியவந்துள்ளது. இவர் கி.மு. 1700 காலகட்டத்தில் வாழ்ந்துள்ளார்.

மாயன் வாழ்ந்த காலகட்டத்தில் இவர்களில் கண்டறியப்பட்ட பெயர்களில் “ஜாக்ஸ் ஏப் சூக்” என்ற பெயர் தான் மிகவும் பழமையான பெயர். மாயன்கள் வாழ்ந்த நகரத்தினை, இவர் கி.பி. 63 முதல் 90 வரை ஆண்டுள்ளார்.

இது போன்று வேறு உங்களுக்குத் தெரிந்த பழமையான பெயர்கள் இருக்கின்றனவா? அறிவியல் ரீதியாக பழமை வாய்ந்த தமிழ்ப் பெயர் எதுவாக இருக்கக்கூடும்? உங்கள் பதிலையும், இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

What is the oldest recorded human name


If you were asked about the oldest names on the Earth, would you be able to answer it? If you need to answer it scientifically, read this Arivu Dose!

If we consider China, the symbols written in B.C 6600 and 6200 gives a unique identification to each and everyone. This is known as “ Jiahu”. They expressed their names by scratching it on the earthen pots.

During the reign of Jemdet Nasr in B.C 3200 and 3101, in Sumeria, the names were nearly written as letters on the clay.

In Egypt, during B.C 3200, “Iry-Hor” was the first written name to be discovered. It is believed to be the name of the person who united the Upper Egypt and the Lower Egypt. It is estimated that he might have lived from B.C 3150 to 3125.

In the Central Mediterranean region, ‘Anitta’ is the oldest name discovered. Though the meaning of the word is not known, it is found to be the name of the king who ruled the Hittite region of the Kussara town. He lived around B.C 1700.

The oldest name discovered in the Mayan period is Yax Ehb’ Xook. He had ruled the city of Mayans from A.D 63 to 90.

Are there any other oldest names that you know of? Scientifically, what will be the oldest Tamil name? Post your answers and your comments about this Arivu Dose.


Sporki | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.