Behavioural Sciences Read in english

டேஜா வு எனும் அதிசயம்

By Niroshan Thillainathan on June 7th, 2014

டேஜா வு எனும் அதிசயம்நீங்கள் எப்போதாவது ஒரு இடத்திற்குச் சென்று ஏதாவது ஒரு செயல் ஒன்றைச் செய்து கொண்டிருக்கும் போது, அச்செயலை நீங்கள் ஏற்கனவே செய்தது போன்று உங்களுக்குத் தோன்றி இருக்கின்றதா? இவ்வாறான உணர்வைப் பொதுவாக டேஜா வு (déjà vu) என்று அழைப்பார்கள். இந்த பிரஞ்சு மொழி வார்த்தையின் பொருள் ‘ஏற்கனவே பார்த்தது‘ என்பதைக் குறிக்கும். இந்த உணர்வை அனுபவித்தவர்கள், அதை ஏற்கனவே அனுபவித்த செயல் போன்று தோன்றுகிற ஒரு உணர்வு என்று விவரிக்கின்றனர். இந்தச் செயல்களைச் செய்தே இருக்காவிட்டாலும், செய்தது போலவே தோன்றும்.  

உதாரணத்திற்கு, நீங்கள் முதன் முதலில் இங்கிலாந்துக்கு பயணிக்கிறீர்கள் என்று எண்ணுவோம். அங்கே ஒரு தேவாலயத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, உங்களுக்கு இதை முன்னெப்பொழுதோ பார்த்தது போன்ற ஒரு நினைவு தோன்றுகிறது, ஆனால் நீங்கள் இதைப் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. இன்னுமொரு உதாரணம், இப்பொழுது நீங்கள் உங்களது நண்பர்களுடன் அமர்ந்து ஒரு அரசியல் சம்பவத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, நீங்கள் டேஜா வு வை உணர்கின்றீர்கள். அதாவது இதே போல் முன்பே உங்கள் நண்பர்களுடன் இதைப் பற்றி நீங்கள் பேசியிருப்பதாக ஒரு நினைவு வருகிறது.

இந்த உணர்வு ஒரு சிக்கலான சம்பவம் ஆகும். மேலும், இந்த டேஜா வு ஏன் ஏற்படுகிறது என்பதற்குப் பல கோட்பாடுகள் உள்ளது. சுவிஸ் அறிஞர் ஆர்தர் ஃபன்க்ஹவ்ஸர் (Arthur Funkhouser), இந்த செயல்பாடுகளை நுணுக்கமாக ஆராய, அதிலிருக்கும் சிறு சிறு செயல்களையும் விரிவாகத் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார். மேற்கூறப்பட்ட இரு காட்சிகளில், முதல் உள்ளதை ‘டேஜா விசிட்’ (Deja Visit) அதாவது, முன்பு பயணித்த உணர்வு என்கிறார். இரண்டாவது காட்சியை, ‘டேஜா வேகு (Deja Vecu) அதாவது முன்பே அனுபவித்த அல்லது வாழ்ந்த உணர்வு என்கிறார்.

உளவியல் நிபுணர்கள் டேஜா வு வை கற்பனை அல்லது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு நொடி தான், என்கிறார்கள். சிலர், இது மூளை தவறாகச் சம்பவங்களை நினைவுக் கூறுவதால் ஏற்படுகிறது என்கிறார்கள். மேலும் சிலர் இதை முன் வாழ்க்கை அனுபவம் என்றும் கூறுகின்றனர்.

நான் இவ்வாறான டேஜா வு வை பல தடவைகள் அனுபவித்து இருக்கின்றேன். இனி நீங்கள் கூறுங்கள். எப்பொழுதாவது நீங்களும் இப்படி ஓர் டேஜா வு வை அனுபவித்துள்ளீர்களா? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.


English Version

What is Deja Vu


Have you ever been to some place to do something and have felt that you have been there before doing the same thing? This feeling is called Déjà vu. This is a French word which means “seen already”. Those who have experienced this have said that it is a feeling of re – experiencing something. Even if they haven’t done it, they feel as if they have done it before.

For example, let us consider that you are travelling to England for the first time. When you see a church there, you get a feel that you have already visited it, which is impossible. Another example is that when you are speaking about politics with your friend, you may feel Déjà vu, that is, you may feel that you have spoken to your friend about the same thing before.

This feeling is a complicated occurrence. There are so many theories explaining why this happens. Swiss philosopher Arthur Funkhouser says that to analyze it in detail, one has to know every small detail in it. He says that the first example is known as Déjà Visit and the second example as Déjà Vecu.

Psychiatrists say that Déjà vu is an imaginary moment of fulfilling some desires. Some say that, it happens due to faulty recollection of events by our brain. Some say that, they are the experiences from a previous life.

I have experienced Déjà vu many times. Have you ever experienced it? Post your comments below.


Photo: Mark Norman Francis, License: Creative Commons by-nc-2.0.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

97 Comments

  • Singaravalli Seeman - 06/09/2014, 7:18 AM

    s . naanu adikkadi anupavithullen

  • Nimal Chandru - 06/09/2014, 6:57 AM

    Thts true.adikadi nadaluthu

  • Kick John - 06/09/2014, 6:37 AM

    nan en kanavil sunami varuvathu pol parthan anal enaku apothum ondrum theriya vilai. . .penbu sunami varum bothu kanavi parthathai thondriyathu

  • Rasarathinam Nitharsan - 06/09/2014, 6:33 AM

    True…….

  • Rajiv Kumar - 06/09/2014, 5:49 AM

    Even yesterday I felt while working in my office

  • Tamil Kumar - 06/09/2014, 5:25 AM

    Naan déjà visit ithai athikam anupavithtullen

  • வெற்றிமணி டேவிட் - 06/09/2014, 4:18 AM

    இதைதான் முன்பிறப்பில் நடந்தது என்று தவறாக புரிந்து கொள்கிறார்களோ?

  • Ðulal Stẽprīẽst - 06/08/2014, 8:54 PM

    நான் அனுபவித்திருக்கிறேன்,
    நான் நினைத்தேன் நான் ஏற்கனவே கண்ட மறந்து போன கனவை என்னுடைய வாழ்வில் நனவாக அனுபவிக்கும் போது இப்படியான எண்ணம் என் மனதில் எழுகின்றது என.

  • Hen Raj - 06/08/2014, 2:04 PM

    A

  • சிவக்குமார் குமார் - 06/08/2014, 1:55 PM

    S

  • Jai Ajith - 06/08/2014, 1:52 PM

    ok bro

  • Nym Syed - 06/08/2014, 1:51 PM

    s…felt that deja vu

  • Sandel Ganesh - 06/08/2014, 1:20 PM

    S..

  • Kavin Kumar - 06/08/2014, 9:32 AM

    hm enakum iruku

  • Shakir Ahmed - 06/08/2014, 6:27 AM

    Yes Bossss Usual a Ellarukkum déjà vu irukku

  • Jack Frank - 06/08/2014, 12:20 AM

    Yes

  • Mohamed Naatheer - 06/07/2014, 8:24 PM

    Yes yes I feel

  • Vinitha Vinu - 06/07/2014, 6:48 PM

    Mm…many times

  • Uma Kanth - 06/07/2014, 6:01 PM

    Yes boos

  • Danushan Kumar - 06/07/2014, 5:52 PM

    Ya enaku adikadi varum appo naa aduthu enna nadakum nu brain aala aalama yosippan athu onnu sollum naa vera mathiri seivan adane athu poidum.

  • Dheena Thayalan - 06/07/2014, 5:49 PM

    S..me too

  • Bala Yogi - 06/07/2014, 5:12 PM

    yes

  • Lesly Niroshan - 06/07/2014, 5:11 PM

    unma

  • Seetha Lakshmi - 06/07/2014, 5:09 PM

    ya i feel it many times

  • Poncavetrivel Poncavetrivel - 06/07/2014, 5:05 PM

    Yes

    • Thiyaga Sivam - 06/07/2014, 6:19 PM

      yes machi