Science & Mystery Read in english

கணினி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் என்ன நடக்கும்

By Niroshan Thillainathan on November 19th, 2014

What happens when you don't have a computerநாளுக்கு நாள் நாம் கணினியைப் பயன்படுத்துவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு வேளை ஏதேனும் வைரஸ் அல்லது சூரியப் புயல் என புதிதாக ஏதாவது நடந்து நாம் கணினி பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டால் எப்படியிருக்கும்?

கணினியை முதன்மையாகக் கொண்டு செயல்படக்கூடிய தொலைபேசிச் சேவைகள், தொலைக்காட்சி, போக்குவரத்து தானியங்கி விளக்குகள் என ஆரம்பித்து பெரும்பாலான மின்னணு சாதனங்கள் செயலிழந்துவிடும். மற்றொரு அபாயகரமான விஷயம் என்னவென்றால் மருத்துவத் துறையில் இது பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

பங்குச்சந்தை மற்றும் அதனைச் சார்ந்த உலக வர்த்தக நிகழ்வுகள் அனைத்தும் கணினியை அடிப்படையாகக் கொண்டு தான் செயல்படுகின்றன. கணினியின் செயல்பாடுகள் பாதிக்கும் போது உலகப் பொருளாதாரத்தில் கூட கண்டிப்பாக மாற்றம் வரும்.

மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடத்துடன் தற்போது கணினி, மின்சாரம், தொலைபேசி போன்றவையும் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்ட காலத்தில் நாம் இருப்பதால், அவை இல்லாமல் நாம் வாழ்வது கடினமே.

இப்படி எவ்வளவோ நமது வாழ்க்கையில் கணினியை அடிப்படையாக நம்பி இருக்கின்றது. இதைப் போன்று கணினியை அடிப்படையாகக் கொண்ட வேறு ஏதும் விடயம் உங்களுக்குத் தெரியுமா? அதை எங்களுடன் பகிர்ந்துவிட்டு மேலும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

What happens when you don't have a computer?


The computer usage is rising day by day. What will happen if we stop using the computers due to some virus or a solar storm?

Most of the electronic devices and services like telecommunication, television, transportation and automatic lights which function primarily with the help of computers will fail. Another danger is that it will cause serious effect in the field of medicine.

Share market and other international business events depending on it, are based on computers.  When the computer functions are affected, there will be unavoidable changes in the world economy.

In addition to food, clothes and a house, computer, electricity and telephone have become a necessity in the present day. So it is very difficult to live without them.

So many things in our life are dependent on computers. Do you know any other issue in our life, which is totally dependent on computer? Share it here and post your comment about this Arivu Dose.


Toffelginkgo | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.