Technology Read in english

60 நொடிகளில் இணையத்தில் என்ன நடக்கிறது

By Niroshan Thillainathan on February 12th, 2014

60 நொடிகளில் இணையத்தில் என்ன நடக்கிறது60 நொடிகளில் உங்களால் என்ன எல்லாம் செய்யமுடியும்? சராசரியாக 100 மீட்டர் நடக்க முடியும். ஒரு வாழைப்பழத்தை உரித்து சாப்பிட முடியும். சரி தானே…? ஆனால், இதே 60 நொடிகளில் இணையத்தில் (Internet) என்னவெல்லாம் நடக்கிறது தெரியுமா…?

தற்போது இணையத்தில் கிட்டத்தட்ட 2.700.000.000 பேர்கள் இணைக்கப் பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு நிமிடமும் 150 பேர்களால் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் எல்லோருமே Skype ஊடாக உங்கள் உறவுகளுடன் பேசியிருப்பீர்கள். இதில் 60 நொடிகளில் மட்டும் 1.400.000 உரையாடல்கள் நடைபெறுகின்றன. இதுவே ஜெர்மனியில் இருக்கும் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான மியூனிக்கில் வாழும் அனைவருமே, ஒரே நெரத்தில் பேசுவது போல் இருக்கும்.

மேலும் 60 நொடிகளில் 204.000.000 மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு அஞ்சலையும் தனித்தனியாக ஒவ்வொரு தாளில் (0,1 mm மொத்தம்) அச்சடித்து ஒரு புத்தகமாகக் கோர்த்தால், அந்தப் புத்தகம் 20.4 km உயரத்தைக் கொண்டதாக இருக்கும். Twitter எடுத்துக்கொண்டால் ஒரே ஒரு நிமிடத்தில் மட்டுமே 280.000 செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஆச்சரியமாக இல்லையா…?

சரி, மேலும் பார்ப்போம்! Amazon எனப்படும் ஆன்லைன் வர்த்தகத் தளத்தில் ஒரு நிமிடத்தில் 130.000 டாலர்களுக்கு வியாபாரம் நடைபெறுகிறது. இதே நிமிடத்தில் இணையத்தில் 120.000 புகைப்படங்கள் பதிவேற்றி பகிர்ந்துகொள்ளப் படுகின்றன. Flickrஇல் மட்டுமே 20.000.000 புகைப்படங்கள் பார்க்கப்படுகின்றன. Facebookஇல் இதே நேரத்தில் 1.800.000 தடவை Like Button கிளிக் பண்ணப்பட்டு அதைவிட 41.000 comments எழுதப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய வீடியோ தளமான YouTube இல் மட்டும் ஒரே நிமிடத்தில் 100 மணிநேர வீடியோ பதிவேற்றப் படுகின்றது.

இதைவிட, 60 நொடிகளில் எல்லாத் தனிப்பட்ட இணையப் பயனர்களாலும் 1.000 TeraByte பதிவிறக்கி, பதிவேற்றப் படுகின்றது. இதுவே 550.000.000 புத்தகங்களுக்கு சமாமக உள்ளது. இது போதாது என்று ஒரு நிமிடத்தில் 2.000.000 தடவை Google ஊடாக இணையத்தளங்கள் தேடப்படுகின்றன.

இது எல்லாமே ஒரே ஒரு நிமிடத்தில் மட்டுமே நடக்கிறது, நண்பர்களே! நம்பவே முடியவில்லை அல்லவா…? ஏன், யோசித்துப்பார்த்தால் நீங்கள் இந்த அறிவு டோஸ் வாசித்த நேரத்தில் கூட மேலே குறிப்பிடப்பட்ட அனைத்துமே நடந்துவிட்டது! இது ஆச்சரியம் தானே?

என்ன நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச்செல்லுங்கள்!


English Version

What happens on the Internet in 60 seconds?


What are the things that you can do in 60 seconds? You can walk about 100m or you can peel a banana and eat. But do you know the stuff happening in the internet in the same 60 seconds? At the moment, about 2,700,000,000 people are connected to each other in web. 150 more get added to this group in each minute. Everyone has used Skype to chat with our friends. About 1,400,000 conversations happen in it in 60 seconds. It’s similar to people of Munich in Germany chatting with each other at the same time.

Also, 204, 000,000 emails are being sent in 60 seconds. If each email is printed out on a paper of 0.1mm thickness and arranged as a book, this book will reach a height of 20.4 km. In Twitter 280,000 tweets get released in a minute. Isn’t it fascinating? When we look further, in 60 seconds, a business transaction worth 130,000$ happens on Amazon. In the same time 120,000 photos get uploaded and shared in the internet. Furthermore, 20,000,000 photos are viewed in flicker, followed by Facebook, where 1,800,000 likes are hit in each minute. More than that, 41,000 comments get posted and videos of 100 hour length get uploaded in the world’s largest video portal YouTube.

In 60 seconds, internet users download and upload 1,000 Terabyte information, which is equivalent to 550,000,000 books. Google’s search engine is browsed for 2,000,000 times within one minute. Isn’t it unbelievable to know what happens in just 60 seconds?

You know what? All the above mentioned things just happend again by the time you have completed reading this Arivu Dose. What do you think about this? Did you enjoy reading this Arivu Dose? Share your thoughts and opinions with me by dropping a comment below.


Photo: Rock1997, License: Creative Commons Attribution 3.0 Unported license, via Wikimedia Commons, changes were made.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

277 Comments

 • parthipan - 12/21/2014, 5:11 AM

  அருமை நண்பா

 • parthipan - 09/27/2014, 5:44 PM

  தலை சுற்றுகிறது நண்பா அருமை

 • R.Ashok kumar - 08/14/2014, 6:48 AM

  Dear Niroshan,
  Greetings and Good Day.
  I am a geologist and a coastal engineer based at Chennai and 54 years old.
  Your contribution and the effort in posting variety of topics is very interesting and my appreciation for you, in this regard. In 60 seconds, let me know how many births and deaths are taking place in our mother earth? What is the importance of Chidambaram Natarajar? Hope you will explore or would have any interesting article. Can you cite what is the scientific significance of Chidambaram Natarajar?
  Best Wishes and Warm Regards,
  R.Ashok kumar

 • Rasi Vignesh Dhavi - 07/25/2014, 4:47 AM

  Thanks for information

 • Anish Sree - 07/24/2014, 8:26 PM

  Kollam nalla mgs

 • Chitra Kavi - 07/24/2014, 7:37 PM

  Fact fact .:)

 • Rko Ganeshpandiyan - 07/24/2014, 7:35 PM

  Nice

 • Shanmugam Venu - 07/24/2014, 6:59 PM

  Nice

 • Sultanul Aribeen - 07/24/2014, 6:27 PM

  Real

 • Sekar Sekar - 07/24/2014, 6:03 PM

  Holloa brother manithanal 60 nodikalil seiya mudiyatha veli.google.twiter.gmail.face book. Pondaravi seikindarana. Anal ivikali uruvakuvathu oru manithani muli than karanam nam illai endral ivikal illai. Ulagathil ula anithum vinana karuvikalum namaku pin than

 • Kalai Arasan - 07/24/2014, 5:29 PM

  super pa a

 • Sujin Suku - 07/24/2014, 5:06 PM

  unmaiya va

 • Kalyani Renganathan - 07/24/2014, 3:49 PM

  Yappa kanaikattude

 • Sasi Sasi - 07/24/2014, 3:01 PM

  like

 • Defy Dhana - 07/24/2014, 2:30 PM

  Tnkz

 • Vijaya Lakhsmi - 07/24/2014, 1:45 PM

  https://www.facebook.com/tamiledhal ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பக்கம்! இன்றே இணையுங்கள்

 • Irfan Mohamed - 07/24/2014, 12:04 PM

  பணமும் அது போன்று தாராலமாகக் கொட்டுமே.

 • Sa Sri Devi - 07/24/2014, 11:13 AM

  Ayyo

 • Mohamed Sulthan - 07/24/2014, 9:57 AM

  Ariyub bssi arumai

 • Fathima Rifa - 07/24/2014, 9:37 AM

  Ithu unmayo….! poiyyo…!

 • Selvam Raj - 07/24/2014, 8:05 AM

  Sapas nanba

 • Kovan Kovan - 07/24/2014, 8:04 AM

  Super

 • Selva Raja - 07/24/2014, 7:18 AM

  O god

 • Babu Anand - 07/24/2014, 4:46 AM

  Nice.. be regular
  ..

 • Ra Ja - 07/24/2014, 4:46 AM

  Sathiyama