Natural Sciences Read in english

உடற்பயிற்சி செய்வதால் மூளைக்கு என்ன பயன்?

By Niroshan Thillainathan on December 7th, 2014

What does exercise do to the brain?நமது உடல்நிலை சரியாக இயங்குவதற்காக நாம் உடற்பயிற்சி செய்கிறோம். இந்த உடற்பயிற்சியால் நமது உடலுக்கு மட்டும் தான் நன்மையா? இதனால் நமது மூளையில் ஏதேனும் நன்மை ஏற்படுமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் அறிய விரும்பினால், கண்டிப்பாக இந்த அறிவு டோஸைத் தொடர்ந்து படியுங்கள்!

இதற்கு முதன்மையான பதில் நமது ‘மனநிலை’ மட்டுமே. ஏனெனில் நாம் மற்றவற்றைப் பார்ப்பது நமது மனநிலையில் தான் உள்ளது. அது மட்டுமின்றி நீங்கள் சோகமாக இருக்கும்போதோ அல்லது வேண்டாத எண்ணங்கள் வரும்போதோ ஏதேனும் ஒரு பயிற்சியினை செய்துபாருங்கள், உங்களுக்கு அது புத்துணர்வினையும், மனமாற்றத்தினையும் ஏற்படுத்தும். இந்தப் பயிற்சி நடப்பது, சைக்கிள் மிதிப்பது என எதுவாகவும் இருக்கலாம்.

உடற்பயிற்சியின் போது மூளைக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் செல்வதால், நரம்பு செல்களின் இயக்கங்களை அதிகப்படுத்த அது உதவுகிறது. மூளையினால் பெறக்கூடிய நரம்பியல் காரணிகளின் செயல்பாடு, மன அழுத்தத்திற்குக் காரணமான ‘கார்டிசோல்’ எனப்படும் ஹார்மோன்களின் தாக்கத்தினைக் குறைக்கிறது.

அதிகமான மன அழுத்தத்துடன் இருப்பவர்களை ‘ஜாகிங்க்’ எனப்படும் மெதுவாக ஓடும் முறை அமைதியான மனநிலைக்குக் கொண்டுவர உதவுவதாகப் பலர் கூறியுள்ளனர். இன்னும் பட்டியலிடப்படாத பயன்கள் பல உள்ளன. அத்துடன் தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் மற்றும் மூளையினை புத்துணர்வுடன் வைக்க இயலும்.

எனவே நண்பர்களே, உங்கள் பயிற்சியினை இன்றே தொடங்குங்கள்! உங்களில் யாரெல்லாம் உடற்பயிற்சி செய்வதுண்டு? உங்கள் பதிலையும் மேலும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

What does exercise do to the brain?


We do exercise to make our body function properly. Does that mean that exercise benefits only the body? Is there any benefit to the brain? Read this Arivu Dose to find answers to these questions.

The primary answer is only our ‘mental state’ because we perceive other things only based on our mental state. If you do exercise when you are sad or with negative emotions, you will feel refreshed. You will have a change of mind. The exercise could be anything like walking, cycling etc.

As exercise causes more oxygen to reach the brain, the functional ability of neurons is improved. The neurotransmitters of the brain reduce the effects of the hormone ‘cortisol’ which causes mental stress and anxiety.

Many of them say that, ‘, Jogging’, a type of slow running helps to calm down people with stress. There are so many advantages which have not been listed. Doing exercise daily for 10 to 15 minutes is sufficient to keep our body and mind refreshed.

So friends, let us start doing exercise from today! Do you exercise regularly? Post your answer and comments about this Arivu Dose below.


U.S. Navy photo by Mass Communication Specialist 2nd Class Nardel Gervacio | Public Domain, via Wikimedia Commons

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.