Science & Mystery Read in english

விரல் சொடுக்கும்போது சத்தம் ஏற்படுவது எதனால்?

By Niroshan Thillainathan on April 9th, 2014

விரல் சொடுக்கும்போது சத்தம் ஏற்படுவது எதனால்?உங்களில் நிச்சயமாகப் பலர் விரல் சொடுக்குவதை (நெட்டி முறிப்பதை) வழக்கமாகக் கொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு விரல்களின் முனையை நீட்டி இழுத்து சிலர் சொடுக்கு எடுக்கிறார்கள், இன்னும் சிலர் தங்கள் முட்டியை இறுக்கமாக மூடி அல்லது ஐந்து விரல்களையும் பின்னோக்கி வளைத்தோ நெட்டி முறிக்கிறார்கள். ஏன், இதை விடச் சிலர் மனக்கலக்கம் அல்லது அமைதியின்றி இருக்கும் பொழுது சொடுக்குவதை அதிகமாக செய்து, இதனால் அவர்களுக்கு அமைதி ஏற்படுகின்றது என்று கூறுகின்றார்கள். 25 முதல் 54 சதவீத மக்கள், இதிலிம் குறிப்பாக பெண்களை விட ஆண்களே அதிகமாக நெட்டி முறிக்கின்றார்கள். சரி, இது எல்லாம் இருக்கட்டும், ஆனால் இந்தச் சத்தம் எதனால் ஏற்படுகின்றது என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கின்றீர்களா? இந்த அறிவு டோளைப் படித்து அதன் காரணத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

எந்த முறையை பயன்படுத்தினாலும், சொடுக்குதலின் போது ஏற்படும் அந்த நொறுங்குதல் போன்ற சத்தம் ஒரே முறையில் தான் உருவாகின்றது. விரல்களை மடக்கியோ, அல்லது இழுத்தோ சொடுக்கும் பொழுது, மூட்டு இணைப்புகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளி அதிகரிக்கிறது. இதன் காரணாமாக முட்டிகளில் உருவாகும் synovial fluid எனப்படும் மூட்டுறை திரவத்தில் கரைந்திருக்கும் வாயுக்களில் நுண்ணிய குமிழிகள் (bubbles) உருவாகும்.  இந்த நுண்ணிய குமிழிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து பெரிய குமிழிகள் உருவாக, இதன் காரணமாக ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப வெளியிலிருந்து கூடுதல் மூட்டுறை திரவம் விரைந்து வரும். இந்தக் கூடுதலாக வரும் திரவம், இடத்தை நிரப்பும் முன்னர் உருவான குமிழிகள் அனைத்தையும் உடைத்து விடுகின்றது. அப்படி உடையும் போது ஏற்படும் அந்தச் சத்தம் தான் உங்களுக்கு விரல்கள் சொடுக்குதலின் பொழுது கேட்கிறது.

ஒருமுறை உங்கள் விரல்களை சொடுக்கியதும், ஏறத்தாழ அடுத்த பதினைந்து நிமிடத்திற்கு மீண்டும் சொடுக்க முடியாது. இது, விரல் முட்டிகள் மீண்டும் அதன் முந்திய சீரான அளவுக்கு மூட்டுறை திரவ வாயுக்களில் குமிழி உருவாகவும் வழி செய்கிறது. பதினைந்து நிமிடங்கள் கழிந்ததும் மறுபடி சொடுக்கி, மீண்டும் குமிழி உடையும் சத்தத்தைக் கேட்கலாம். இது தான் நெட்டி முறிக்கும் போது ஏற்படும் சத்தத்தின் இரகசியம், வேறு ஒன்றுமே இல்லை!

அது சரி, உங்களில் யாரெல்லாம் இப்படி நெட்டி முறிப்பீர்கள்? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள், நண்பர்களே!


English Version

What causes the noise when you crack a joint?


Most of you would have the habit of cracking knuckles. Some people pull out the finger tips while others make a tight fist and crack knuckles. Some of them bend their fingers backwards and do it. It is interesting that some people say that cracking knuckles help them to get relieved from anxiety. 25 to 54% populations have this habit and it is found that men indulge in this habit more than women. Have you ever thought, how the sound is produced on cracking knuckles? Read this Arivu Dose to understand it.

Though one uses various techniques, the cracking sound is produced by a single mechanism. When the fingers are pulled out or bent, the space between the joints increases. This result in the formation of fine bubbles from the gases dissolved in the synovial fluid in the joint space. These fine bubbles join to form a bigger bubble and the synovial fluid rushes to fill the space produced by it. As the synovial fluid tries to fill the space, the bubbles get broken down. The sound produced by this bubble breaking is heard as cracking of knuckles.

Once you crack your knuckles, you can’t crack them again within the next 15 minutes. This time is needed for the formation of the fine bubbles in the synovial fluid as before. You can listen to the cracking sound when the bubbles get broken again, after 15 minutes. Do you have this habit? Post your comments here.


orijinal | Creative Commons by-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

55 Comments

 • Veronica Francis - 09/14/2014, 2:57 PM

  super.thanx

 • Mani Raj - 09/14/2014, 11:32 AM

  oru research`il 1,70,000 murai our nalaiku sodukinalum onrum aakahu,silar kuuruvathu pol muuthu palaveenamo,pakkavathamo earpadathu……..avargal reserch,a ithai admin post` apotrukapla…….aanal tamilla potrukapla Thx Admin

 • Narasimman Ammu - 09/13/2014, 5:56 AM

  I do frd

 • Bala Murugan - 09/13/2014, 4:26 AM

  Enaku thodarnthu netti mvrikum pothu sound vanthu2 eruku.

 • Gunasekaram Suganthi - 09/13/2014, 4:08 AM

  Payam vantha u sonna avalaum i do

 • Ayyanar Thangavelu Alagramam - 09/12/2014, 7:37 PM

  Neeati muripathu nallatha ? kettata ?

 • Boopathi Nivas - 09/12/2014, 4:42 PM

  bos ithanala any problem varuma

 • Chandrakala Kala - 09/12/2014, 2:17 PM

  sup arivudose. give more

 • Manikandan Don - 09/12/2014, 1:57 PM

  Neati muripathu nallatha

 • Suresh Parasuraman - 09/12/2014, 12:12 PM

  nice

 • Mohan Kumar - 09/12/2014, 9:45 AM

  Na dailium seiven

 • Priya Sugan - 09/12/2014, 8:29 AM

  na seiven but yepavm seiya maten ana apadi seirathu nallatha kettatha

 • Subhiksh Balakrishnan - 09/12/2014, 8:15 AM

  Yes frds netti muripadhala synovial fluid ilama aagi joint pain varum.. plzz dnt do tat. nd Nenga venuna check pani parunga dinamum thodarchiya yoga panravangaluku nettai varadhu.. because their body is fit.

 • Sikkandher Bathusha - 09/12/2014, 7:51 AM

  Super infermation

 • Sandle Belarmine - 09/12/2014, 7:31 AM

  Disadvantage yatha thu iruka.

 • Îhjås Çóòl - 09/12/2014, 6:33 AM

  meeee

 • Venugopal Vijay - 09/12/2014, 5:15 AM

  Im yes

 • Kandasamy Muthukrishnan - 09/12/2014, 3:32 AM

  Illai eppothawathu

 • Sathiyaak Sathi - 09/12/2014, 3:14 AM

  mokka

 • Dhoni Suresh - 09/12/2014, 3:01 AM

  yes

 • Gowtham Selva - 09/12/2014, 2:55 AM

  Ivlo sonneenga appudiye ithu nallatha kettathanum sonneenganna nalla irukkum

 • Chitra Manohar - 09/12/2014, 2:22 AM

  I do

 • Sheik Adham - 09/11/2014, 8:58 PM

  Yeah iam also

 • Prasanth Mc Rezzy - 09/11/2014, 8:41 PM

  me too

 • Boobalan Mohan - 09/11/2014, 7:46 PM

  yes.i am weakly 4days