Behavioural Sciences Read in english

சோம்பேறித் தனத்திற்குக் காரணம்

By Niroshan Thillainathan on May 6th, 2014

சோம்பேறித் தனத்திற்குக் காரணம்நம்மில் பலருக்கு ஒரு காரியத்தை ஆறப் போடும் குணம் இருக்கும். ஒரு விதத்தில் இக்குணம் மனிதனின் இயல்பு என்று கூட நாம் சொல்லலாம். உதாரணத்திற்கு இந்த அறிவு டோஸை வாசிக்க வேண்டும் என்று சிலர் ஆவலாக உட்காரும் பொழுது, இதை விட சுவாரசியமானதைக் கண்டால், செய்ய வந்த வேலையைப் பிறகு செய்யலாம் என்று எண்ணி, புது வேலையில் மும்முரமாகி விடுவர். இப்படியாகப் பல தருணங்களில் ஆறப் போடும் குணம் சோம்பேறித் தனத்தாலும், சுற்றுச் சூழலாலுமே ஏற்படுகின்றது என்று பலர் கூறக் கேட்டிருப்போம். ஆனால், அது உண்மையே இல்லை நண்பர்களே! உண்மையாக இவ்வாறான குணம் ஒருத்தருக்குள் உருவாக, அவர் தம் பெற்றோர்களையே குற்றம் சாட்ட வேண்டும் என்று உளவியல் அறிவியலாளர்கள் மேற்கொண்ட ஒரு புதிய ஆய்வின் முடிவுகள் குறிப்பிடுகின்றன. வளர்ப்பு முறையோ, அல்லது சுற்றுச் சூழலோ இக்குணம் ஒருவருடையே ஏற்படக் காரணம் இல்லை! அதற்கு மாறாகப் பரம்பரை வழி வரும் மரபுரிமையே இதன் காரணம் என இவர்கள் கூறுகின்றனர்.

இது எப்படி நண்பர்களே? இதை எதிர் பார்த்து இருப்பீர்களா? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.


English Version

What causes the feeling of boredom


Most of us have the bad habit of procrastination. It can be considered as an inborn human trait. For example, when some people find something else interesting while they sit down to read the Arivu Dose, they procrastinate it to a later day and get engrossed in the new thing. We have heard that such procrastination happens only because of one’s laziness and the environment they are in. But that is not true! A recent research conducted by a team of Psychiatrist has led to the fact that the parents of the people who procrastinate are the ones to be blamed. The reason behind such a trait is not where you are raised or how you are raised. But it is because of the genetic material passed on to you through generations.

Isn’t it a surprising fact? What do you think about it? Post your comments here


Michael Ströck | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

4 Comments

  • M. Siva - 11/06/2014, 2:40 AM

    இதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! பரம்பரை வழி வருவதை சில சதவீதம் ஏற்றுக்கொள்ளலாம், அனால் சுற்று சூழல் தாக்கம் தான் மிக அதிகம் என கருதுகிறேன்.

  • Mahendraselvan D. - 11/05/2014, 5:49 PM

    உண்மைதான். இது போன்று நிறைய குணங்களை/பண்புகளை மனிதன் மரபுவழியாக பெறுகிறான்.

  • Ganesh Karthi - 11/05/2014, 1:10 PM

    ok sir then what’s the solution for this problem sir

  • Karthi Paiya - 05/06/2014, 4:26 PM

    puriyavillai thelivaga koorungal