Science & Mystery Read in english

முதலில் கோழியா முட்டையா வந்தது

By Niroshan Thillainathan on February 13th, 2014

முதலில் கோழியா முட்டையா வந்ததுஇந்த உலகில் நாம் எவ்வளவோ கேள்விகளுக்கு இன்னும் பதில்களே கிடைக்காமல் இருக்கின்றோம். உதாரணத்திற்கு: விண்வெளியில் எங்கேயாவது அன்னிய உயிரினங்கள் (ஏலியன்) இருக்கின்றனவா? இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? பூமியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின? இப்படி அளவுக்கும் அதிகமான கேள்விகளுக்கு இன்று வரை பதில்கள் கிடைக்கவில்லை. இப்படித் தான் என்னையும் கொஞ்ச நாளாக ஒரு கேள்வி போட்டு உறுத்திக் கொண்டே இருந்தது. உண்மை சொல்லப்போனால் அந்தக் கேள்வி என்னை மட்டும் இல்லை, இந்த உலகில் பலரை ஆட்டி வைத்த கேள்வி ஆகும்! இப்போ அந்த கேள்வியையும் அதன் பதிலையும் இந்த அறிவு டோஸ் ஊடாகத் தருகிறேன். அது வேறு ஒன்றுமே இல்லை, நண்பர்களே…

முதலில் கோழியா அல்லது முட்டையா வந்தது?

இது என்னடா கேள்வி என்று என்னிடம் கேட்பவர்களுக்கு, இந்த கேள்வியில் இருக்கும் சிக்கல் புரியவில்லை என்று தான் சொல்லலாம்! அது என்ன சிக்கல் என்றால்: ஒரு கோழிமுட்டை ஒரு கோழியில் இருந்து வருகின்றது என்று எடுத்துகொள்வோம். அப்படி என்றால், அந்த கோழிமுட்டை இட்ட கோழி எதில் இருந்து வந்தது? அதுவும் ஒரு கோழிமுட்டையில் இருந்து தானே வந்திருக்கவேண்டும்? அப்போ அந்தக் கோழி இருந்த கோழிமுட்டை எதில் இருந்து வந்திருக்கும்…? இப்படியே தொடர்ந்து கேட்டுக்கொண்டே போகலாம். எனவே, முதலில் எது வந்தது? கோழியா இல்லை கோழிமுட்டையா? இதற்கு அறிவியல் ரீதியான பதில் என்ன?

சரி, கோழி தான் முதலில் வந்தது என்று எடுத்துக்கொள்வோம். ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தது என்னவென்றால் கோழிமுட்டையின் கோது உருவாக்குவதற்குத் தேவைப்படும் OV-17 எனும் புரதம் கோழியில் மட்டும் தான் கிடைக்கிறது என்று. எனவே ஒரு கோழி இருந்தால் மட்டும் தான் அது OV-17 ஊடாக முட்டைக் கோதும் அத்துடன் கோழிமுட்டையையும் இட முடியும். எனவே, கோழி தானே முதலில் வந்து முட்டையை இட்டது? ஹ்ம்ம்ம்ம்…

சரி, இதே விடயத்தை வேறு மாதிரி சிந்தித்துப் பார்ப்போம். முட்டை தான் முதலில் வந்தது என்று எடுத்துக்கொள்வோம்.  பொதுவாக இனப்பெருக்கத்தின் போது இரு உயிரினங்களின் டி.என்.ஏ (DNA) மூலக்கூறுகள் இரட்டித்துப் பெருகி சந்ததிகளுக்குக் கடத்தப்படுகிறது. இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால், அப்படி இரட்டித்துப் பெருகும் போது, அந்த டீ.என்.ஏ. சில சமயங்களில் முழுவதும் இரட்டிப்பதில்லை. அது சிறிய மாற்றங்களுடன் இரட்டிப்பதைக் காணலாம். இப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஒரு உயிரினத்தின் டீ.என்.ஏ. மாறுபட்டுத் தான் புதிய புதிய உயிரினங்கள் உருவாகின்றன. எனவே, முன்னொரு காலத்தில் வாழ்ந்த கோழி போன்ற ஓர் உயிரினத்தின் டீ.என்.ஏ. மாற்றமடைந்து தான் இன்று நமக்கு தெரிந்த கோழியினம் உருவாகியிருக்கிறது. சரி, அந்த முன்னொரு காலத்தில் வாழ்ந்த கோழி போன்ற உயிரினத்திற்கு ஒரு பெயர் வைக்கலாம். அதை முற்கோழி என்று அழைப்போம். எனவே, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முற்கோழிகள் இடும் முட்டைகளில் டீ.என்.ஏ. மாற்றம் அடைந்து, கடைசியில் அந்த முட்டையில் இருந்து நாம் இன்று காணும் கோழி வெளியே வந்து விட்டது. அப்படிப் பார்த்தால், முதலில் வந்தது முட்டை தானே?

என்ன… குழப்பமாக இருக்கிறதா? இருக்கட்டும்…!

முட்டை பற்றி இவ்வளவு சொல்கிறேனே, ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. உண்மையில் கோழிமுட்டை என்பது என்ன? ஒரு கோழி இடும் முட்டையையா கோழிமுட்டை என்கிறோம், அல்லது ஒரு முட்டைக்குள் கோழி இருந்தால் தானா அதைக் கோழிமுட்டை என்கிறோம்? என்ன புரியவில்லையா? சரி, இப்படிப் பார்ப்போம். ஒரு குரங்கு முட்டை இடுகிறது என்று எடுத்துகொள்வோம். அந்த முட்டையில் இருந்து ஒரு யானை வெளியே வந்தால், அந்த முட்டையைக் குரங்குமுட்டை என்று அழைப்போமா, அல்லது யானைமுட்டை என்று அழைப்போமா? இப்போ வித்தியாசம் புரிகிறதா…?

சரி, நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு சரியான பதில் கிடைப்பதற்கு இந்தப் பிரச்சனையை இரு பார்வையில் பார்க்கவேண்டும்:

முதலாவது பார்வை: முன்னொரு காலத்தில் முற்கோழிகள், முற்கோழிமுட்டைகளை இட்டன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் டீ.என்.ஏ. மாற்றம் அடைந்து முற்கோழிகள் இட்ட முற்கோழிமுட்டையில் இருந்து ஒரு கோழி வெளியே வந்து விட்டது. அப்படி வந்த கோழி கோழிமுட்டையை இட்டது. எனவே, அந்தக் கோழி, முற்கோழிமுட்டையில் இருந்து வெளியே வந்த காரணத்தால், கோழி தான் கோழிமுட்டைக்கு முதலில் வந்தது.

இரண்டாவது பார்வை: முன்னொரு காலத்தில் முற்கோழிமுட்டை இட்ட முற்கோழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர் கோழிமுட்டை இட்டு அதில் இருந்து கோழி வெளியே வந்து விட்டது. எனவே, அந்தக் கோழி கோழிமுட்டையில் இருந்து வெளியே வந்த காரணத்தால் கோழிமுட்டை தான் முதலில் வந்தது.

இந்த இரு பார்வைகளையும் மிக அவதானமாகக் கவனித்தீர்கள் என்றால் இதில் இருக்கும் ஒற்றுமை புரிந்துவிடும்! கடைசியில் வருவது கோழி தான்! அதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை! முதலாவது பார்வையில் முற்கோழிமுட்டையில் இருந்து கோழி வருகிறது. இரண்டாவது பார்வையில் கோழிமுட்டையில் இருந்து கோழி வருகிறது. இரண்டிலுமே முட்டையில் இருந்து தான் கோழி வந்திருக்கிறது! எனவே நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு அறிவியல் ரீதியான பதில் இது தான்:

கோழிக்கு முதல் முட்டை தான் வந்தது!!!

பதில் தெரிந்துவிட்டது தானே? வாங்க எல்லோரும் போய் இப்போ ஒரு ஆம்லெட் சாப்பிடலாம்! இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள், நண்பர்களே!


English Version

What came First - The Chicken or the Egg?


We have not found the answers for so many questions in this world. For example, are there Aliens existing in the outer space? How did the universe come into existence? How was life formed on the Earth? Such numerous questions have not been answered so far. One such question has made me think recently. To be correct, that question has made lot of people to ponder. Let me present you the question and its answer in this Arivu Dose. It is nothing but the question of which came into existence first, the chicken or the egg?

If you wonder about what is there in this question, you probably did not understand the complication in it. Let us consider that the egg comes from a chicken. If so, where did this chicken come from? Probably from another egg. Then where did this egg come from? This series of question goes on and on and on. So, what is the scientific explanation to this question? Let us consider that chicken came into existence first. Researchers have found that the shell of a chicken’s egg need a protein called OV-17 which is obtained only from a chicken. So, only when there is a chicken, OV-17 will be available to form the egg shell and thus an egg can be laid. Isn’t it right that chicken came into existence first?

Now, let us view this issue in a different way. Consider that egg came into existence first. Generally, the DNA from two organisms double and are passed to the offspring in reproduction. Sometimes, the doubling of the DNA is not complete or gets doubled with minor changes. Changes in the DNA that happens over centuries result in the creation of new organisms. So, changes in the DNA of chicken like creature which existed long before have led to the creation of the present day chicken. Let us name this chicken like creature as pre-chicken. If we consider that the cumulative changes in the DNA of this pre-chicken have led to the present day chicken, it means that egg came into existence first, isn’t it? You are still confused aren’t you?

Ok, before we go on, let us answer, what is a chicken’s egg actually is. Is it something which is laid by a chicken or is it something which contains a chicken inside it? Let us consider that a monkey lays an egg and the egg hatches to a baby elephant, do you call it monkey egg or elephant egg? Is it clear now? So, to find an answer for our primary question we need to view this issue in two ways. First view:  In ancient times, pre-chickens laid pre-chicken eggs. After numerous changes in the DNA, a chicken came out of a pre-chicken egg. So, it is obvious that Chicken came into existence first. Second view: In ancient times, the pre-chickens which laid pre-chicken eggs, laid a chicken’s egg, centuries later. Thus chicken’s egg came into existence first.

You will find the similarity in both these views when you think about them patiently. Undoubtedly, chicken came at last. In the first view, chicken comes from a pre-chicken egg. In the second view chicken comes from a chicken’s egg. So, in both views, chicken comes from an egg. So the scientific answer to our primary question is that egg came into existence first.

Won’t this be your first thought, when you have an omelet in future? Did you enjoy reading this Arivu Dose? Share your thoughts and opinions with me by dropping a comment below.


Ruben Alexander | Creative Commons by-sa-3.0, changes were made.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

70 Comments

  • mani - 10/04/2014, 2:26 PM

    Apppo murkozi eppti vanthuchi

  • முருகா - 08/16/2014, 1:16 AM

    எனக்கு இன்ன ஒன்றும் தோன்றுகின்றது ராசனயனக்கலவையில் உயிர்ப்பித்ததுதான் எல்லா உயிரணுக்களுக்கும் மூலகாரணமாக இருக்கமுடியும்.. இவை கோழியான உருவக அமைப்பில் ஓரிடத்தில் ராசாயனக்கலவைகள் குவிந்து அவை நாளடைவில் பூஞ்சையாக உருமாறி காய்ந்தகூடுவாக அமைந்து அது பின்னொருநாளில் கூட்டிலிருந்த உயிரணுக்கள் சூரியக்கதிர்களினால் முதிர்ச்சியடைந்து வெப்பசலனத்தால் அந்தக்கூடு பிளவுபட்டு கோழியாக உருவெடுக்க சாத்தியமுண்டு மொத்தத்தில் பூஞ்சையான கூடு வடிவம்தான் முட்டை ஆக மொத்தத்தில் ஆரம்பத்தில் முட்டைஎன்பதுதான் தெளிவாகிறது

  • முருகா - 08/16/2014, 12:47 AM

    எல்லாம் கவனித்தாகிவிட்டது முட்டைபோடும் இனத்தை சேர்ந்த முற்க்கோழி எங்கிருந்துவந்தது

  • பச்ச மொளகாய் பாரதிகுமரன் - 08/06/2014, 6:36 PM

    கோழி முதலா முட்டை முதலா என்பது போல மனிதன் முதலா குழந்தை முதலா என்ற குழப்பம் ஏன் வரவில்லை???? ஆதாம் ஏவாள் கதைகள் பொய் எனத் தெரிந்தும் எதற்கு இந்த விஞ்ஞானிகள் மௌனம் காக்கின்றனர்?

  • Sksathish Sksathish - 08/04/2014, 5:10 PM

    Eadho nama sarakku ahdikkea sidesh ah vandhuchea ahthuvea podhu

  • Krishnananthan Vijayaretnam - 08/03/2014, 8:43 PM

    மிக புத்திசாலித்தனமாக விளக்கம் கூறினீர்கள். ஆனால் உங்கள் விளக்கம் தவறு என்று நினைக்கிறேன்.

    நீங்கள் கூறியபடி நடக்க வாய்ப்பே இல்லை. ஒரு உயிரினத்தின் முட்டையிலிருந்து இன்னொரு உயிரினம் வரும் என்பது மிக வேடிக்கையாக உள்ளது. இங்கே சிக்கல் முதலில் வந்தது முட்டையா உயிரினமா என்பதே அன்றி வேறெதுவும் இல்லை. உங்கள் வாதத்துக்கே வருகிறேன். நாம் அறிய வேண்டியது முன்கோழி முதலில் வந்ததா அல்லது முன்கோழி முட்டை முதலில் வந்ததா என்பதே. அடிப்படையில் ஒருபோதும் கோழி அடை காக்காமல் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவராது. ஆக முதலில் வந்தது கோழியாக இருக்குமேயன்றி முட்டையல்ல.

  • Abimannan Abi - 08/03/2014, 12:48 PM

    Unga mulaiku neenga inga iruka vendiya aalilla

  • Thusir Naydu - 08/03/2014, 12:47 PM

    Sari nampuravan. Mutkoli muthalil vanthatha or Mutkoli muddai muthalil vanthatha

  • Suren Stallone - 08/03/2014, 12:40 PM

    Na solura first koletha vathurukum apudena muitaila eruthu kole varathu kole kunchetha varum

  • Eswaran Shanmugavel - 08/03/2014, 12:33 PM

    Rommba theleewa cholli kulappurathu ipdithano!!

  • Sasikaran Sasi - 08/03/2014, 12:19 PM

    நீங்கள் கூறுவது

  • ManiKandan Mech - 08/03/2014, 11:36 AM

    Neraya muttai saptuvingalo..!

  • Fana Fara - 08/03/2014, 11:13 AM

    Rommba theleewa cholli kulappurathu ipdithano!!

  • Sathis Kumar - 08/03/2014, 11:05 AM

    Mapola padichavanu nerupicheda suppar da

  • Pm Fredo - 08/03/2014, 10:31 AM

    Aaniye pudungavena

  • Sivasu Siva - 08/03/2014, 10:01 AM

    Super

  • Manikannan Rajaram - 08/03/2014, 9:29 AM

    Neenga nalla varuvinga varanum boss

  • Sivashankari Ramamoorthi - 08/03/2014, 9:20 AM

    Mindblowing explanation for a complicated question…..

  • Sarath Kumar - 08/03/2014, 9:08 AM

    Murkozhi enga irunthu vanthathu

  • Arun Pandiyan - 08/03/2014, 8:44 AM

    Poda mutaal mutail irunthu koli kunchu than varum

  • Kannan Kannan - 08/03/2014, 8:23 AM

    motti saivama aasaivama

  • Suresh Thirumalaisamy - 08/03/2014, 8:16 AM

    Ettanavtu round

  • Vignesh Kumar - 08/03/2014, 7:57 AM

    intha karutha yaethukiralam sir..

  • Sri Rmohan - 08/03/2014, 7:50 AM

    Kandippa evaru padipula muttaithan vangieruparu

  • Sad Hussain - 08/03/2014, 7:32 AM

    onnum………