Science & Mystery Read in english

விசித்திரமான பாலைவனத்தில் கிடைத்த வித்தியாசமான எலும்புக்கூடு

By Niroshan Thillainathan on December 13th, 2014

 Weird skeleton from atacama desertஆஸ்கார் முனோஸ் அவர்கள் 2003 ஆம் ஆண்டு, “லா நொரியா” என்றழைக்கப்படும் அடகாமா பாலைவனப் பகுதியில் ஒரு எலும்புக்கூடினைக் கண்டுபிடித்தார். 15 செ.மீ க்கும் குறைவாக இருக்கும் இந்த எலும்புக்கூடு கடினமான பற்களையும், பெரிய தலைப்பகுதியையும் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

10 ஆண்டுகளாக இந்த எலும்புக்கூடு வேற்றுகிரக வாசிகள் இருப்பதற்கு ஒரு உதாரணமாகவே கருதப்பட்டு வந்தது. இந்த எலும்புக்கூடு பற்றி பல கருத்துக்கள் வலம் வந்த வண்ணம் இருந்தன. இது ஒரு குரங்கு இனமாகவோ அல்லது வேற்று கிரக வாசியாகவோ இருக்கலாம் என கற்பனை செய்யப்பட்டன. ஆனால் இதுவும் மனித இனம் தான் என தற்போதைய ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.

இது பற்றி டி.என்.ஏ. மற்றும் பிற ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட டாக்டர் ஸ்டீவன் க்ரீர் தலைமையிலான குழு “இந்த உயிரினம் கண்டிப்பாக மனித இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும்” என்று உறுதிபடக் கூறுகிறது. அத்துடன் இவரின் கருத்துக்களை ஸ்டான்ஃபோர்டில் உள்ள டாக்டர் நோலன் மற்றும் டாக்டர் லாக்மான் ஆகியோரும் ஒப்புக்கொள்கின்றனர்.

உருவத்தில் சிறியதாக இருக்கும் இதுவும் மனித இனம் தான் என்றால் நமது முற்காலத் தலைமுறை எப்படி இருந்திருக்கும் என்ற கேள்வி உங்களுக்குள்ளும் தோன்றுகிறதா? இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Weird skeleton from atacama desert


Mr.Oscar Munos discovered a skeleton in 2003 in the Atacama Desert which is also known as “La Noria”. He said that the skeleton which was less than 15 cm in length had hard teeth and a large head. For the past 10 years this skeleton was believed to be the evidence of existence of alien life forms. There were different opinions existing regarding this skeleton. It was imagined to be that of a form of primate or alien. But a recent research has found that this skeleton also belongs to a human race.

The research team which performed DNA analysis and other scientific studies under the guidance of Dr.Steven Crethe assures, “This creature must have been a form of human race”.  Dr.Nolan of Stanford and Dr.Locman has also accepted his opinion.

If this skeleton of small stature belongs to a human race, can you imagine the physical appearance of our ancestors? Post your comments about this Arivu Dose below.


Herostratus | via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.