Future Sciences Read in english

நாம் மிதக்கும் நகரங்களில் வசிப்போம்

By Niroshan Thillainathan on April 4th, 2014

நாம் மிதக்கும் நகரங்களில் வசிப்போம்எதிர்காலத்தில் நாம் மிதக்கும் நகரங்களில் வசிப்போம்! என்ன நம்ப முடியவில்லையா…? இதோ இந்த அறிவு டோஸைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பாரிஸ் நாட்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2070 ஆம் ஆண்டுகளில் கடலின் நீர் மட்டம் உயர்ந்து காணப்படும் எனப்படுகின்றது. இதன் விளைவாக வானிலை மாற்றங்கள் மற்றும் உலகில் உள்ள கடலோர நகரங்களில் வெள்ளப்பெருக்கு எற்படும் என்றும் கூறப்படுகின்றது. இப்படி நடப்பதால் ஏறத்தாழ 150,000,000 மக்களின் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம் உள்ளது. இது எல்லாம் போதாது என்று 35,000,000,000,000 டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. எனவே, கடல் மட்டத்தில் வாழும் மக்கள் வேறு வழியே இல்லாமல் மேல் மட்டத்திற்குக் குடிபெயர்ந்து செல்ல வேண்டும்.

ஆனால் வின்செண்ட் கேலிபட் (Vincent Callebaut) என்னும் பெல்ஜியத்தைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் ஒரு புதுவித யோசனையை முன்வைத்துள்ளார். கடல் மட்டத்திற்க்குக் கீழ் வாழும் மக்களை இடம்பெயர்ப்பதற்குப் பதிலாக, நீரில் மிதக்கும் நகரங்களை வடிவமைத்தால் என்ன என்பது தான் அவரது புதுமையான யோசனை ஆகும். 2008 ஆம் ஆண்டு கேலிபட் இந்தத் திட்டத்தை தனது இணையத்தளத்தில் லில்லிபட் (Lilypad) என்னும் பெயரில் வெளியிட்டார். இந்த மிதக்கும் நகரத்தில் சுமார் 50,000 மக்கள் வாழக் கூடியதற்கு இடம் உண்டு. மேலும், லில்லிபட்டில் உணவு மற்றும் குடிநீர் உற்பத்திக்கு விசேஷமாக அமைக்கப்பட்ட நீர் பூங்காக்கள் உள்ளன. இதை விட மின்சக்தி பெறுவதற்கு சூரிய ஒளி ஆற்றல் மற்றும் காற்றுத் திறண் பயன்படுத்துவதே அந்தத் திட்டத்தில் உள்ள சிறப்பு. இப்படிப் பொதுவான நகரங்களில் என்னவெல்லாம் உள்ளதோ, அதை அனைத்தும் லில்லிபட்டிலும் அமைப்பதே அவரின் நோக்கமாகும்.

என்ன நண்பர்களே, கேட்கவே அதிசயமாக இல்லையா? இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

We are going to live on floating Cities in Future


In near future, we will live in floating cities! Isn’t it awesome? The Financial growth and Development department of Paris reports that the sea level will rise considerably in 2070. Due to the rise in sea level, there will be drastic climatic change and frequent floods in the coastal regions. If this happens, about 150,000,000 houses will float in these floods. Unfortunately, there is a high probability of losing properties of worth 35, 000, 000,000,000 dollars in the floods. There is no other way for the people in the coastal region than to get shifted to some place high above the sea level.

But, Vincent Callebaut, a Belgian Architect has proposed a new plan. Why not construct a floating city instead of shifting the people? He posted this new plan in the Internet in 2008 under the name Lilypad. This floating city has living space for 50,000 people. In Lilypad there are special water parks which help in the production of food and water. The interesting fact about Lilypad is that it uses electricity produced from solar energy and wind energy. His aim is to construct the Lilypad with all the amenities which are available in a normal city. Isn’t it unbelievable?

Did you enjoy reading this Arivu Dose?  I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


JackDayton | Creative Commons by-3.0 de, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

6 Comments

 • Natarajan Vickram - 04/06/2014, 2:52 PM

  Super furure plan

 • Rukmani Ruku - 04/05/2014, 7:37 AM

  evvalavu selavu agum oru veedu katta

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 04/06/2014, 11:44 AM

   Rukmani Ruku அது பற்றிய விபரங்கள் எனக்குக் கிடைக்கவில்லை. கிடைத்தால் நிச்சயமாக உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

 • Kandiah Moorthy - 04/05/2014, 6:23 AM

  super

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 04/06/2014, 11:44 AM

   நன்றி Kandiah Moorthy :)

 • Vèñkãtësh - 04/04/2014, 3:40 PM

  Nice Epo Kooda nama nilam kadal mela than eruku. Nam epoluthu kadal mela than valnthu kondu erukirom