Natural Sciences Read in english

சிறுநீரிலிருந்து தங்கம் தயாரிக்கும் முயற்சி

By Niroshan Thillainathan on May 13th, 2014

சிறுநீரிலிருந்து தங்கம் தயாரிக்கும் முயற்சி1669ம் ஆண்டில், ஹெனிக் பிராண்ட் என்கின்ற ஜெர்மன் இரசவாதி, மலிவான பொருட்களைக் கொண்டு தங்கம் தயாரிக்க முயற்சி செய்து வந்தார். இவர், மனித உடல் மற்றும் அது தொடர்புடைய பொருட்களை விட உன்னதமாக வேறு எதுவும் இருக்க முடியாது என்று கருதினார். எனவே, ஒருவேளை, மனித உடல் சம்பந்தப்பட்ட ஏதோ ஒன்றை, உன்னத உலோகமாகிய தங்கமாக மாற்ற முடியுமோ என்று அவருக்குத் தோன்றியது. இவ்வாறு யோசித்த பிராண்ட், மனித சிறுநீருடன் சிறு மணல் கலந்து, ஒரு அடுப்பில் கொதிக்க வைத்தார். அவர் இதில் மணலை ஏன் தேர்வு செய்தார் என்பதற்குக் காரணம் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இரசவாதிகளுக்குத் தங்கள் மனதில் தோன்றிய பொருட்களை ஒன்றோடொன்று சேர்த்துக் கொதிக்க வைப்பது ஒன்றும் புதிதல்ல. அந்த அடுப்பு குளிர்ந்த பின் எடுக்கப்பட்ட, பிராண்ட்டின் கலவையோ இருட்டில் பிரகாசமாக ஒளிர்ந்தது. எனவே, பிராண்ட் நிச்சயமாக தங்கம் தயாரிக்கவில்லை என்பது அவருக்கு நன்றாகவே தெரியவந்தது. அதற்குப் பதிலாக அவர் மென்மையான, வெள்ளையான, மெழுகு போன்ற பொருள் ஒன்றைத் தயாரித்திருந்தார்.

பிராண்ட்டிற்குத் தெரியாதது என்னவென்றால், சிறுநீரில் கரைந்திருக்கும் கலவையிலே தான் இந்தப் பொருள் இருந்திருக்கிறது. அவர் அந்த ஒளிரும் பொருளைப் பாஸ்பரஸ் (Phosphorus) என்று பெயரிட்டார். கிரேக்கத்தில் அதன் பொருள், ‘நான் ஒளி தாங்குகிறேன்’ என்பதாகும்.

பார்த்தீர்களா நண்பர்களே, சிறுநீரிலிருந்து தங்கம் தயாரிக்க முயன்ற போது, கடைசியில் பாஸ்பரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இது சுவாரசியமாக இல்லையா? இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.


English Version

Turn urine into gold


In 1669, Heinich Brant, a German Chemist tried to produce Gold from various cheap substances. He thought that, there was nothing as pure as the human body. So he felt that, one of the parts of human body can be used to produce a pure metal like gold. He thought about it and then boiled a mixture of human urine and sand. There is no clear reason why he has chosen sand to mix with urine. But it is not new to any chemist to mix and heat anything that comes to their mind. When he looked at the boiled mixture after cooling it, it was glowing in the dark. So he realized that he had not produced any gold. Instead of gold, he had produced a white waxy substance.

What Brant didn’t know was that it was a substance present in the urine itself. He named it ‘Phosphorus’ which means “I hold the light” in Greek.

Isn’t it wonderful how Phosphorus was discovered from the efforts to produce gold from urine? Post your comments below.


Shrout, Bill | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

10 Comments

  • p.gunasekaran - 11/10/2014, 1:12 PM

    ariya tahavai therivithatharlu mika naneri

  • Jeevan Mathan - 05/14/2014, 9:11 PM

    nice …ya keep it up….

  • Sinu Vasan - 05/14/2014, 5:06 AM

    ஹெனிக் பிராண்ட் அப்போவே சிறுநீரைக் கொண்டு சின்ன பிள்ளை மாதிரி ஒரு விளையாட்டு விளையாடி இருக்கிறார்.

  • Mohamed Fais - 05/14/2014, 4:55 AM

    very nice

  • Ganesh Kumar - 05/13/2014, 10:20 PM

    Thanks,good night

  • Ganesh Kumar - 05/13/2014, 10:20 PM

    Muyarchi illaiyenil munedram illai.

  • Gánésh Jaï - 05/13/2014, 4:52 PM

    Super news bro …….i like u

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 05/13/2014, 9:56 PM

      நன்றி Gánésh Jaï!

  • Uthayakumar Nirukshan - 05/13/2014, 1:33 PM

    Supet ge

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 05/13/2014, 2:26 PM

      நன்றி நண்பா Uthayakumar Nirukshan :)