Social Sciences Read in english

டைட்டானிக் திரைப்படமும் டைட்டானிக் கப்பலும்

By Niroshan Thillainathan on October 8th, 2014

டைட்டானிக் திரைப்படமும் டைட்டானிக் கப்பலும்டைட்டானிக் திரைப்படத்தைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அசாத்திய வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம், 11 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது. அத்துடன் கேட் வின்ஸ்லெட் மற்றும் லியார்னடோ டிகேபிரியோ ஆகியோர்க்கு சிறந்த எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்தது. இது போன்ற காவியத் திரைப்படங்களுக்கு அதிகப் பணம் செலவிட வேண்டும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்த செலவான பணத்தின் மதிப்பு, உண்மையாக அந்தக் கப்பலை உருவாக்க ஆன செலவை விட அதிகம் என்றால் நம்ப முடிகிறதா?

டைட்டானிக் படத்தினை உருவாக்க சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் செலவானது. ஆனால் உண்மையான டைட்டானிக் கப்பல் 1910-1912 ல் 7.5 மில்லியன் டாலரில் உருவாக்கப்பட்டது. அன்றைய காலத்து டாலரின் மதிப்பினைத் தற்போதுள்ள டாலரின் மதிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும் கூட 120-150 மில்லியன் டாலர் மட்டுமே செலவாகும். இது சுவாரசியமாக இல்லையா?

அது சரி நண்பர்களே, உங்களில் யாரெல்லாம் டைட்டானிக் படத்தைப் பார்த்துள்ளீர்கள்? உங்கள் பதிலையும் மேலும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கண்டிப்பாகக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Titanic movie costs more than Titanic Ship


Every one of us would have seen the Hollywood movie “Titanic”. This blockbuster movie won 11 Oscar awards. This box office hit made the lead actor Leonardo Di Caprio and actress Kate Winslet, world famous overnight.  It’s no wonder that such great movies are made with big budgets. But, is it believable that the budget of this movie is much more than that spent on the actual construction of the ship. About 200 million US dollars were spent on making this movie. The real Titanic ship was built in 1910-1912 with 7.5 million dollars. If the value of the dollar used that time and today is compared, it will amount to just 120-150 million dollars. Isn’t it mind-blowing? Have you watched this movie and felt amazed? Post your comments about it.


Bain News Service | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.