Behavioural Sciences Read in english

ஒரு பொருள் வாங்கக் காரணம் என்ன?

By Niroshan Thillainathan on May 8th, 2014

ஒரு பொறுள் வாங்கக் காரணம் என்ன?நாம் ஓர் பொருளைக் கடையில் வாங்குவதற்குப் பல்வெறு காரணங்கள் இருக்கலாம், இருந்தாலும் அதில் மிக முக்கியப் பங்காக எது வகிக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு பொருளின் வண்ணம் தான்! சில நாட்கள், தேவைப்படாத பொருள்களையும் வீட்டிற்கு எடுத்து வந்திருப்பீர்கள், அல்லவா? அதன் வண்ணங்களையும், வெளித் தோற்றத்தையும் மீண்டும் ஒரு முறை ஆராயுங்கள்,  ஏனென்றால், ஒரு புதிய தயாரிப்பை வெளியிடுமுன், நுகர்வோரை அதன் வெளிப்புறத் தோற்றம், அதன் ஈர்க்கக் கூடிய நிறம், இவை இரண்டும் ஒருவரை அதிகம் கவரும் படியே தயாரிக்கிறார்கள். இந்தப் பார்வை சார்ந்த விளைவுகளை ஒப்பிடும் பொழுது, அந்தப் பொருளின் அமைப்பு, வாசனை மற்றும் ஒலி நம்மைக் குறைவாகவே பாதிக்கின்றன.

புள்ளி விவரங்களின்படி, 85 சதவீத மக்கள் வண்ணங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். உண்மை சொல்லப்போனால், ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு தனிப்பட்டப் பொருள் உண்டு:

 1. மஞ்சள் நிறம் உங்கள் கவனத்தை ஈர்க்க உதவுகிறது. மேலும், மஞ்சள் நிறப் பொருளை வாங்குபவர்களின் நம்பிக்கை, மற்றும் இளமையை இது வெளிப்படுத்துகிறது.
 2. சிவப்பு நிறம் ஆற்றலைப் பிரதிபலிக்கிறது. இது இதயத் துடிப்பை அதிகரித்து, ஒரு அவசர உணர்வை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் தள்ளுபடி விற்பனை குறிகள் சிவப்பிலேயே இருக்கின்றன.
 3. நீல நிறம் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது. இது வங்கிகள், மற்றும் வியாபார நிறுவனங்களில் உபயோகிக்கப் படுகிறது.
 4. பச்சை நிறம் செழிப்பை குறிக்கிறது. இது அழுத்தத்தைத் தளர்த்த உபயோகிக்கப் படுகிறது.
 5. இளம் சிவப்பு நிறம் பெண்களைக் கவர உபயோகிக்கப் படுகிறது.
 6. கரு நிறம் சக்தி வாய்ந்தது. இது விலை அதிகம் உள்ள, ஆடம்பரப் பொருட்களில் பயன் படுத்தப் படுகிறது.
 7. ஊதா நிறம் அமைதி ஏற்படுத்த உதவும். இது அழகு சாதனப் பொருட்கள், மற்றும் வயதைக் குறைக்கும் பொருட்களில் உபயோகிக்கப் படுகிறது.

நம்மை அறியாமலே இலகுவாக நிறத்தை மற்றும் வடிவத்தை வைத்து நாம் ஓர் பொருளை வாங்கத் தூண்டுகிறது. என்ன நண்பர்களே, நீங்களும் எப்போழுதாவது உங்களுக்குத் தேவையற்ற ஓர் பொருளை வாங்கியுள்ளீர்களா? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.


English Version

The science of supermarket psychology to make us spend more money


There may be so many reasons behind every purchase we make. Have you ever thought about the deciding factor that made you buy something? The color of that thing! It is not surprising that you might have bought some useless stuff at times. Analyze its color and outlook because every new product is manufactured with an outlook and color that is sure to attract consumers. We are affected a little less by the smell, sound or form of the object when compared to its visual impact.

Statistics state that 85% of people give importance to the colors. There is a meaning behind every color:

 1. Yellow color helps to grab your attention. It expresses the faith and youthfulness of the person who buys the yellow object.
 2. Red color reflects energy. It increases the heart beat and creates an urge. Most of the discount signs are in red color.
 3. Blue color gives hope and a secured feel. It helps to relax the pressure
 4. Orange color is used to attract women
 5. Black color is powerful. It is used in expensive luxury goods.
 6. Violet color helps to calm oneself down. It is used in beauty products and in anti aging products

Thus, without our knowledge we are easily pushed to buy something based on its color and form. Have you ever bought something unnecessarily? Post your comments below.


Diliff | Creative Commons by-sa-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

5 Comments

 • J.BOOBALAN - 11/08/2014, 2:28 AM

  நீங்கள் சொல்வது உண்மைதான்

 • Ramdas Rdx Nadar - 05/12/2014, 6:33 PM

  Never!

 • Murali Tharan Murali - 05/09/2014, 4:16 AM

  நீங்கள் சொன்னது உண்மைதான்.்

 • Madhumitha Mital - 05/08/2014, 2:53 PM

  excellent

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 05/08/2014, 3:10 PM

   நன்றி Madhumitha Mital :)