Behavioural Sciences Read in english

தொடர்புகள் இல்லாமல் ஏற்படும் ஆபத்து

By Niroshan Thillainathan on February 19th, 2014

தொடர்புகள் இல்லாமல் ஏற்படும் ஆபத்துஉடற் பயிற்சி செய்யாமல் இருந்தால் உடலுக்கு தீங்கு என்பது உங்கள் எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். அதே போன்று தான் உடற் பருமன் கூட நாம் நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கு தடையாக இருக்கின்றது. ஆனால், இது இரண்டையும் விட மிகவும் பயங்கரமானது என்ன தெரியுமா…? வேறு மக்களுடன் பேசிப் பழகாமல் தொடர்பு இல்லாமல் இருப்பது நமது உயிருக்கு மிகவும் ஆபத்தானது என்பதை ஓர் ஆராய்ச்சி சொல்கிறது. நாம் எப்போதும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என்று பலருடன் தொடர்பில் இருந்தால் நீண்ட காலம் உயிர் வாழமுடியும் என்று கூறப்படுகின்றது. ஆக மொத்தத்தில் இப்படிப் பேசிப் பழகி தொடர்பில் இருக்காதவர்களை, ஒரு நாளுக்கு 15 சிகரெட் பிடிப்பவர்களுடன் ஒப்பீடு செய்யலாம் என்று ஆராய்சியாளர்கள் சொல்கிறார்கள். இருவரின் ஆயுள் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்காது!

எனவே, உங்களில் நீண்ட காலம் உயிர் வாழ விரும்புவோர், பலருடன் பேசிப் பழகுங்கள்! ஏன், விருப்பம் என்றால் என்னுடனும் பேசிப் பழகுங்கள். நம்ம வீட்டுக்கு வாங்க, நல்லா பழகுங்க! பிடிச்சா கட்டிக்கிங்க… ஓ மன்னிக்கவும், இது சிவாஜி படத்தில் வரும் அங்கவை, சங்கவை மேட்டர் ஆச்சே :-P?!

சரி சரி, கட்டிக்க வேண்டாம்! ஆனால், வாங்க பேசிப் பழகி நண்பர்களாக ஆயுளைக் கூட்டலாம்…


English Version

The Science of Social Life


We all know that lack of exercise is bad for health. Similarly obesity is dangerous to life.  A recent research says that staying away from people without socializing is more dangerous than being sedentary and obese. It also says that the life expectancy increases for people who are always in contact with their friends, relatives and loved ones. Researchers say that the people, who stay isolated from people, can be compared to smokers who smoke 15 cigarettes a day. These people will have a low life expectancy when compared to their peers who have an active social life. So, if you want to live longer, mingle with people. Speak and laugh out loud with your friends. Come on buddies! Let us all speak with each other and recharge our life time.

Did you enjoy reading this Arivu Dose?  I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


Garry Knight from London, England | Creative Commons by-2.0, via Wikimedia Commons, changes were made.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

17 Comments

 • Amar Nath C - 02/20/2014, 2:40 PM

  palagitah pochu:-):)

 • Magdalene Milan - 02/20/2014, 6:35 AM

  Germanyy ku ticket eduthukudunga varom chumma va sonna enna artham…

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 02/20/2014, 10:35 AM

   ஒரு டிக்கெட் தானே… அதற்கென்ன எடுத்துட்டா போச்சு :P

 • Vigneswary Subramaniam - 02/19/2014, 8:43 PM

  வேணடாம்டா வேண்டாம்டா பயலே

 • Ameen Mahin - 02/19/2014, 7:19 PM

  சொன்னதேபோதும்சார்உங்கவீட்டுக்குவந்தாமாதிறி

 • Ameen Mahin - 02/19/2014, 4:40 PM

  எங்கேவீடு சொல்லவும்

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 02/19/2014, 7:11 PM

   ஜேர்மனியில் சார் :)

 • Ajmal Khan - 02/19/2014, 4:17 PM

  How about Deaf and dump….

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 02/19/2014, 7:13 PM

   It’s not about the “talking” itself brother, it’s about the social interaction. So even deaf and dump people should interact with other people. That’s the main thing :)

 • Gunasekaran Subash Chandra Bose - 02/19/2014, 2:55 PM

  எனக்கு பிரச்சனை இல்லை நான் ஏற்கனவே உங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறேன் பழகியுமிருக்கிறேன்

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 02/19/2014, 6:54 PM

   சரியாகச் சொன்னீங்க :D!!

 • Packi Thillainathan - 02/19/2014, 1:52 PM

  அழகாதானே இருக்காங்க சார்

 • Harihar Balasubramanian - 02/19/2014, 1:42 PM

  ஒரு வேண்டுகோள். இப்பதான் கவனிச்சேன். உங்க அறிவு டோஸ் போட்டோல இருக்க அந்த பொண்ணுங்க போட்டோவ மாத்திடுங்க. கவனம் தடுமாறுது. யப்பா

 • Sivashankari Ramamoorthi - 02/19/2014, 1:38 PM

  Hahaha Packi Thillainathan :-P

 • Packi Thillainathan - 02/19/2014, 1:34 PM

  நீங்க பேசிப்பழகி கட்டிக்கிட்டீங்க என்றால் அவங்க பேசிப் பேசியே உங்க ஆயுளைப் பறிச்சுடுவாங்களே அப்ப என்ன செய்வீங்க என்ன செய்வீங்க.

 • Gopi Nath - 02/19/2014, 1:09 PM

  G VEEDU ENGA ERRUKU

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 02/19/2014, 7:11 PM

   வீடு ஜேர்மனியில் நண்பா :P வருகிறீர்களா…?