Natural Sciences Read in english

இசையின் அறிவியல் என்ன

By Niroshan Thillainathan on February 13th, 2014

இசையின் அறிவியல் என்னஉங்களுக்குப் பிடித்த பாடல் என்ன? அம்மம்மாவைக் கேட்டால் „பச்சைக் கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ“ பிடிக்கும் என்பார். அப்பாவிடம் கேட்டால் „வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே“ என்பார். அதுவே ஓர் இளைஞனிடம் கேட்டால் „விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே“ என்பான். தமிழர்களிடம் மட்டும் இல்லை, இந்த உலகில் யாரைக் கேட்டாலும் சரி, இசையைப் பிடிக்காதவர்கள் இல்லவே இல்லை! அனைவருக்கும் பிடித்த பாடல்கள், பிடித்த பாடகர், பிடித்த இசையமைப்பாளர் என இருக்கத்தான் செய்யும். ஆனால், ஏன் எல்லோருக்கும் இசை என்றால் பிடிக்கிறது? சிலருக்கு இசை ஒரு போதை போன்று மகிழ்ச்சியைக் கொடுக்கிறதே! இசையில் அறிவியல் ரீதியாக அப்படி என்னதான் இருக்கிறது?

இசை எல்லோருக்குமே புரிகின்ற ஒரு மொழி என்றே கூறலாம். வார்த்தைகளால் நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை விட இசையால் வெளிப்படுத்துவது மிகவும் இலகுவாக இருக்கும். அடிப்படையில் இசை என்பது வேறு ஒன்றும் இல்லை: பல ஒலி அதிர்வெண்கள் (audio frequency) கலந்து விதம் விதமான வடிவங்களில் காற்றில் மிதந்து நமது செவிகளை அடைவது தான் இசை என்று கூறுகின்றோம். நமது கண்கள் ஒளியை எவ்வாறு செயலாக்கம் செய்கின்றனவோ, அதே போன்று தான் நமது காதுகளும் ஒலியை செயலாக்கம் செய்கின்றன. உண்மை சொல்லப்போனால் நாம் பிறப்பதற்கு முன்பே இசையைக் கேட்க ஆரம்பித்து விடுகின்றோம். என்ன புரியவில்லையா…? நாம் நமது தாயின் கருப்பையில் இருந்த போது, நமது கண்களால் ஒன்றுமே பார்க்கமுடியாமல் இருந்தோம். ஆனால், நாம் நமது காதுகளால் எப்போதுமே இசையைக் ரசித்துக்கொண்டு இருந்தோம். அது வேறு ஒன்றுமே இல்லை, நமது தாயின் இதயத்துடிப்பு தான். எப்போதுமே நமக்கு தாலாட்டுப் போல் அந்த இதயத் துடிப்பின் இசையில் நாம் உறங்கிக்கொண்டு இருந்திருக்கிறோம். (அம்மா… அம்மா தான்!!!)

மனித உடலில் இருக்கும் ஓர் சுவாரசியமான குணம் என்னவென்று தெரியுமா? உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான சம்பவங்கள் நமது உடலுக்குள் நடைபெறும்போது நமது மூளை மகிழ்ச்சி மற்றும் திருப்தி போன்ற உணர்ச்சிகளை தூண்டிவிடுகிறது. உதாரணத்திற்கு பசிக்கும் போது நாம் தேவைக்கு ஏற்ற மாதிரி உணவு அருந்திவிட்டதும் நமது பசி தீர்ந்துவிட்டு, உடனடியாக சந்தோஷமும் திருப்தியும் அடைந்து விடுகின்றோம். ஆனால், உண்மையில் அந்நேரம் என்ன நடைபெறுகிறது என்றால் டோபமைன் (dopamine) எனப்படும் வேதியியல் பொருள் நமது மூளைக்குள் வெளியிடப்படுகிறது. இது நரம்புக்கடத்தியாக (neurotransmitter) பணிபுரிந்து இந்த சந்தோஷமும் திருப்தியும் கலந்த உடல்நிலைக்குக் காரணமாக இருக்கிறது. இதேபோன்று தான் போதைப்பொருட்கள் பாவிக்கும் வேளையில் டோபாமைன் வெளியிடப்பட்டு நாம் வானத்தில் மிதப்பது போல் இருக்கிறது. நமது உடலில் அந்த போதைப்பொருள் குறையும்போது டோபாமைன் வெளியிடுவதும் நிறுத்தப்படுகிறது. எனவே, தொடர்ந்து மகிழ்ச்சி நிலையை அடைவதற்காக மேலும் அந்த போதைப்பொருளை உள்வாங்க வேண்டியதாகிவிடும். அத்துடன் நமது உடலும் அந்த போதைப்பொருளுக்கு அடிமை ஆகி விடுகிறது.

இதில் சுவாரசியமான விடயம் என்ன தெரியுமா…? நாம் இசையை ரசிக்கும் போது நமது உடலில் பல செயல்கள் நடைபெறுகின்றன. இரத்த அழுத்தம் அதிகரித்து நமது மூளையில் உள்ள பல்வேறு பகுதிகள் இயங்கத் தொடங்கிவிடுகின்றன. இசை, நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானது இல்லை என்றாலும், அதை ரசிக்கும் போது நமது மூளையில் டோபாமைன் வெளியிடப்படுகிறது. அதன் விளைவு என்னவென்று உங்களுக்கு இப்போ தெரியும். நாம் மகிழ்ச்சி கலந்த திருப்தி நிலையை அடைந்து விடுகின்றோம். இன்று வரை அதன் காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துவிடவில்லை. போதைப்பொருட்கள் நம்மை அடிமை ஆக்குவது போல் இசையும் ஒரு விதமாக நம்மை அடிமை ஆக்கிவிடுகிறது. ஒவ்வொரு மனிதனின் இசை சுவை வித்தியாசமாக இருந்தாலும் அதன் விளைவு எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கிறது.

டோபாமைன் வெளியிடுவது மட்டும் அல்லாமல் இசை கேட்கும் போது நமது உடலில் மேலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக நமது உடலில் எல்லாமே ஒரு தாளத்திற்கு அடங்கியதாகத் தான் இருக்கிறது. நமது இருதயம் துடிப்பது ஓர் தாளத்தில். நாம் சுவாசிக்கும் போது பிராணவாயு உள்வாங்கி கரியமிலவாயு வெளியேற்றுவது இன்னும் ஓர் தாளம். கடினமான வேலை செய்யும் போது இருதய துடிப்பு மற்றும் சுவாசத்தின் தாளம் அதிகரித்துவிடுகிறது. அதே போன்று தான் நாம் இசை கேட்கும் போதும் இந்த தாளங்கள் மாறிவிடுகின்றன. அதன் விளைவாக இரத்த அழுத்தம் மற்றும் மூளையின் செயல்பாடும் மாறிவிடுகின்றது. பொதுவாக நமது இருதயம் ஒரு நிமிடத்தில் 72 தடவைகள் துடிக்கின்றது. இந்த துடிப்பை 72 Beats per Minute (BPM) என்று சொல்வர். அதே போன்று தான் இசையின் தாளத்தையும் BPM ஊடாக அளப்பர். ஆராய்ச்சியாளர்கள் அறிந்தது என்னவென்றால் இசையின் தாளம் பொறுத்து நமது உடல் வெவ்வேறு உணர்ச்சிகளை உணர்கின்றது என்பது தான். 72 BPMகு அதிகமாக இருக்கும் இசை கேட்கும் போது நாம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறோம், அதுவே 72 BPMகு குறைவாக இருக்கும் இசை கேட்கும் போது நாம் அமைதி ஆகி விடுகிறோம். உதாரணத்திற்கு மேலே குறிப்பிட்ட பாடல்களில் அம்மம்மாவின் „பச்சைக் கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ“ ஏறத்தாழ 200 BPM, அப்பாவின் „வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே“ 80 BPM, மற்றும் இளைஞனின் „விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே“ ஏறத்தாழ 91 BPM கொண்ட பாடல்களாக அமைந்து உள்ளன.

இசையில் இன்னும் ஓர் மிக முக்கியமான விசேஷம் இருக்கிறது! சிறுவர்களின் வளர்ச்சி நேரம் இசை அவர்களின் மூளை விருத்தியை தூண்டுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளார்கள். அதுவும் அவர்களின் நுண்ணறிவு எண் எனப்படும் Intelligence Quotient (IQ) அதிகரிப்பதற்கு இசை கேட்டாலே போதும் என்று கூறுகின்றார்கள். எனவே, பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை சிறு வயதினிலேயே சங்கீதம், பியானோ, புல்லாங்குழல், மிருதங்கம் போன்ற ஏதாவது ஒன்றை கற்றுகொள்ள விடுங்கள்! அவர்கள் மேலும் புத்திசாலிகள் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன!

உண்மை சொல்லப்போனால் இப்படி அடுத்து அடுத்தாக இசையினால் நாம் பெறும் பயன்களைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம்… இருந்தாலும் இத்துடன் நிறுத்தி விடுகின்றேன்!

ஆனால் ஒன்று: சும்மா „மன்மத ராசா“ பாடலை மட்டுமே கேட்டுக் கேட்டு ஐன்ஸ்டைன் ஆகிடலாம் என்று எல்லாம் நினைத்து விட வேண்டாம்பா…!  புத்திசாலியாகவும் இருக்கத்தான் வேணும். என்ன தான் கஷ்டப் பட்டு டீ ஆத்தினாலும்… ஆளே இல்லாத டீ கடைல டீ ஆத்தி என்ன பிரியோசனம்?! என்ன புரியுதா :-P?

பி.கு.: என்னை சிறு வயதிலேயே டிரம்ஸ் கற்றுகொள்ள அனுப்பிய எனது பெற்றோர்களுக்கு இந்த இடத்தில் நான் நன்றி சொல்லியே ஆகனும் !


English Version

The Science of Music


What is your favorite song? Your mom would say,”Pachai Kili Muthu Charam”, dad would say,”Vaa Vennila Unnai Thaanae” and a young man would say, “ Vizhi Moodi Yosithaal”. Not only Tamil people, there is no one in this world who says that they hate music. Everyone has their favorite song, music director and singer. But why does everyone like music? Some people feel pleasure in music like an addictive drug. So, what is the science behind this?

Music is a language understood by everyone. It is easier to express our feelings through music than words. Music is nothing but a soothing mixture of various audio frequencies that reach our ears in various forms. Our ears process the music in same way as our eyes process the light. The fascinating fact is that we begin to hear sound even before we are born. When we were in our mother’s womb, we were unable to see. But we were constantly listening to music – our mother’s heart beat. We were sleeping to this beautiful lullaby (mothers are always great!).

What is amazing about human body is that the process necessary for the survival, happening in our body stimulates the brain centers for pleasure and satiety. For example when we eat food while feeling hungry, we feel happy and content. But what actually happens is the release of a chemical mediator called Dopamine in the brain. It acts as a neurotransmitter and causes stimulation of the pleasure and satiety center. The same thing happens when one takes addictive drugs and feels like flying in the air. When the Dopamine level decreases the pleasure decreases and one is compelled to take the drug again. In this way, the body gets dependent on the drug.

Lot of things happen in our body, when we listen to music. Blood pressure increases and parts of our brain get stimulated. Though music is not necessary for the survival, it causes release of dopamine in the brain. So it makes us to feel happy and content. But the reason behind it is not known. Similar to drug addiction, music makes us addicted to it. Though the choice of music differs from person to person, the effect is always the same. Music also causes many things other than Dopamine release. Our body functions in a rhythm. Our heart beats in a rhythm. This rhythm increases when we do heavy physical work. Similarly the rhythm gets altered while we listen to music. Due to this, the blood pressure and brain function gets altered. Normally our heart beats at a rate of 72 beats per minute (BPM). The rhythm of music is also counted as BPM. Researchers have found that we feel different emotions, when we listen to different rhythms.

When we listen to music of more than 72 BPM we feel excited. We feel calm when we listen to music with rhythm less than 72 BPM. For example, the above said “Pachaikili Muthu Charam” song is about 200BPM and “Vaa Vennila Unnai Thaanae” is about 80BPM and the young man’s “Vizhi Moodi Yosithaal” is about 91 BPM. There is an important fact about music. Researchers have found that music stimulates brain development in children. It is found that Intelligence Quotient (IQ) can be increased by just listening to music. So, parents should make sure that their kids learn musical instruments like the Piano, the Flute or the Tablas in their childhood days. This will make them more intelligent and smart. We can discuss the uses of music all day long. So let me finish with this.

Did you enjoy reading this Arivu Dose? Share your thoughts and opinions with me by dropping a comment below.


James.mcd.nz | Creative Commons by-sa-3.0 de, via Wikimedia Commons

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

13 Comments

  • Rama Moorthi - 03/19/2014, 4:17 PM

    Good

    • Rama Moorthi - 03/21/2014, 1:23 PM

      nallathu niroshan… ungal muyarchiku en saarbilum en kudumbatharin sarbilum vazhuthugal

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 03/21/2014, 1:19 PM

      மிக்க நன்றி Rama Moorthi அவர்களே :)

  • Srini Vasan - 03/19/2014, 12:52 PM

    தேங்க்ஸ்

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 03/21/2014, 1:20 PM

      நன்றி நண்பா Srini Vasan

  • Mahendra Selvan D - 03/18/2014, 6:02 PM

    நன்று.

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 03/21/2014, 5:18 PM

      நன்றி Mahendra Selvan D :)

  • Vigneswary Subramaniam - 03/18/2014, 3:31 PM

    அட அட அட பெற்றோரை இந்த சைக்கிள் gab இல் நினைத்து நன்றி சொல்கிறாயே அதுதான் இந்த அறிவு டோஸின் high light.

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 03/21/2014, 1:18 PM

      Hehe நன்றி நன்றி Vigneswary Subramaniam

  • Mass Ananth - 03/18/2014, 3:15 PM

    spr ji

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 03/21/2014, 1:20 PM

      நன்றி நண்பா Mass Ananth

  • Samsu Raj - 03/18/2014, 2:43 PM

    supar

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 03/21/2014, 1:19 PM

      நன்றி Samsu Raj!