Natural Sciences Read in english

தாயின் பாசமும், அறிவியலும்

By Niroshan Thillainathan on May 11th, 2014

தாயின் பாசமும், அறிவியலும்இந்த விசேஷமான நாளில் இன்றைய அறிவு டோஸில் எதைப் பற்றி எழுதப்போகின்றேன் என்பதை நீங்கள் நிச்சயமாகத் தெரிந்து இருப்பீர்கள். அது வேறு ஒன்றும் இல்லை, அம்மா என்னும் கடவுளைப் பற்றி தான். குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நாம் பல தருணங்களில் கண்கூடாகப் பார்த்திருப்போம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் தன்னுடய தாயைப் பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும். பிறந்து சில மாதங்களில் ஆட்களைப் பார்த்து இனம் காணத் தெரியாத பொழுதே தன் தாயினைக் குழந்தை நன்றாக அடையாளம் தெரிந்து வைத்திருப்பதோடு மட்டுமில்லாமல், தாயின் அரவணைப்பிற்குப் பிறகே சமாதானம் அடையும். இல்லாவிட்டால் காரணமே இல்லாமல் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டேயிருக்கும். ஆனால், இதுபோன்ற பாசத்தைத் தந்தையுடன் குழந்தை ஒருபோதும் வெளிப்படுத்துவது கிடையாது.

தாய்-குழந்தைக்கு மட்டும் அப்படி என்ன பிணைப்பிருக்கிறது என்று சில காலமாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். ஒரு வழியாக நியூயார்க்கைச் சேர்ந்த மவுன்ட் சினாய் மருத்துவ மைய ஆய்வாளர்கள் இதற்கானக் காரணத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அது ஆக்சிடாசின் (Oxytocin) என்னும் ஒருவித இயக்குநீரே (hormone) ஆகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இயக்குநீர் தான் தாய்-பிள்ளை பிணைப்பைத் தூண்டுகிறது. அது மட்டுமல்லாமல் வேறு சில பணிகளிலும் இந்த இயக்குநீர் பணியாற்றுகிறது. தாய்க்கு பாலூட்டும் உணர்ச்சியை அதிகமாக்குவது, உடல் உழைப்பைத் தூண்டுவது, குழந்தைகளைத் தாயின் அருகாமையை எதிர்பார்த்துக் காத்திருக்க வைப்பது போன்ற பணிகளில் ஆக்சிடாசின் பங்கேற்கிறது.

தாயின் பாசத்தைப் போல் வேறு ஒன்றுமே இல்லை, அது எனக்கு மட்டும் இல்லை, உங்கள் எல்லோருக்குமே நன்றாகவே தெரிந்த ஒரு உண்மை ஆகும். இன்றைய இந்த அன்னையர் நாளில் இந்த உலகில் வாழும் எல்லா தாய்மார்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும் கீழே உங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுங்கள் நண்பர்களே!


English Version

The science of mother love


You must have known already about what I am going to write in this Arivu Dose on this special day. Yes! – About the God, in the name of “mother”. At many a times, we have witnessed children showing unconditional love to their mothers. Some cry babies do not stop crying for anything or anyone.  But they will stop crying immediately as they see their mother. Though a new born baby is unable to identify individuals, it knows its mother and will get pacified only by its mother. But a baby does not express its love for the dad, like this.

Scientists have been studying this amazing ‘mother – child’ relationship for quite some time now. Finally the researchers of Mount Sinai Medical Center, in New York have found the reason behind it. It is nothing but a hormone called oxytocin. This is the hormone which stimulates the bond between the mother and the child. It also has other important functions. It increases the lactation, physical work of the mother and the longing of the child for its mother.

There is nothing like a mother’s love and is a fact known to the whole world. I wish a “Happy Mothers’ day” to all the mothers in the world. Post your comments and wishes below.


Mark Colomb | Creative Commons by-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

8 Comments

 • Rajesh Rajesh - 05/12/2014, 2:19 PM

  U mather good mather

 • Banu Shree - 05/12/2014, 10:40 AM

  3 ru ezhuthu athanul erangi parthal munnuru kodi thalai eyhuthu……

 • Poomakal Sathiya - 05/12/2014, 8:59 AM

  AMMA endru kupdatha oru jeevanum intha poomyil illai

 • Karuppu Roja - 05/12/2014, 4:47 AM

  amma enra oru vaarthaiku aaeramaaeram arthangal undu

 • Kannan Kannan - 05/11/2014, 5:31 PM

  Realy mom is god

 • Mohamed Haafis - 05/11/2014, 5:23 PM

  mother is not god allaah is god

 • Subash Tharmaraj - 05/11/2014, 3:14 PM

  Unmai theyvam amma

 • Gowtham Rmg - 05/11/2014, 1:34 PM

  Mother is god