Behavioural Sciences

பொய் பேசும் அறிவியல்

By Niroshan Thillainathan on March 3rd, 2014

பொய் பேசும் அறிவியல்உங்களிடம் ஒன்று கேட்கிறேன், ஒரு மாதத்தில் நீங்கள் எத்தனை பொய்கள் சொல்வீர்கள்? ஒன்று, இரண்டு, ஐந்து, பத்து? நானே கூறிவிடுகின்றேன்… ஒவ்வொருவரும் பேசும் போது பல பொய்கள் சொல்வார்கள், அதுவே ஒரு தெரியாதவருடன் பேசும் போது, 10 நிமிடங்களில் மட்டுமே சராசரியாக 3 பொய்கள் சொல்வார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். என்ன நம்ப முடியவில்லையா? அடுத்த முறை நீங்கள் யாரும் தெரியாதவர்களுடன் பேசும் போது, இதை அவதானித்துப் பாருங்கள்.

சரி, அது இருக்கட்டும், ஆனால் நாம் ஏன் பொய் சொல்கிறோம் என்று தெரியுமா? காரணம் இது தான்: மனிதன் என்றாலே ஓர் சமூகத்தில் வாழ்ந்து வேறு மனிதர்களுடன் தொடர்பில் இருக்கும் ஓர் உயிரினம் ஆகும். ஒன்று, இந்த சமூகத்தில் ஒரு பிரச்சினையும் இல்லாமல் அமைதியாகவும், சமாதானமாகவும் வாழ்வதற்கு, அல்லது இந்த சமூகத்தில் இருந்து ஏதாவது நன்மையைப் பெறுவதற்கும் நம்மை மற்றவர்களிடம் இருந்து உயர்த்திக்கொள்ளவும் பொய்களைச் சொல்கிறோம். எனவே, சிறு வயதிலேயே பொய் சொல்வதையும், பிறர் பொய் சொல்வதை கண்டுபிடிப்பதையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்து விடுகின்றோம்.

சிறு வயதில் ஆரம்பிக்கின்றோம் என்றால் எந்த வயதில் தெரியுமா? பிறந்து ஆறு மாதங்களில் நாம் பொய் சொல்லத் தொடங்கி விடுகின்றோம்! நீங்கள் நிச்சயமாக சிறு குழந்தைகள் காரணம் இல்லாமல் பெற்றோர்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவதற்காக அழுவதைக் கவனித்து இருப்பீர்கள். இப்படி அழும் போது திடீரென்று அழுகையை நிறுத்திவிட்டு யாராவது தன்னை கவனிக்கின்றார்களா என்று பார்த்து, மறுபடியும் அழுவது கூட ஓர் விதமான பொய் தான்! இதுவே பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் அவர்களின் பெற்றோர்களுடன் பேசும் போது சராசரியாக ஒவ்வொரு ஐந்தாவது வசனத்திலும் ஒரு பொய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

பொய் சொல்வது என்பது நமது மூளைக்கு ஒரு கடினமான விடயம் ஆகும். எனவே பொய் சொல்பவர்களை இலகுவாகக் கண்டு பிடித்து விடலாம், ஏனென்றால் பொய் சொல்லும் போது அவர்கள் ஒரு விதமான மன அழுத்தம் கொண்ட நிலையுடன், இருதயம் வேகமாகத் துடித்து, வியர்த்து, பேச்சில் தடுமாற ஆரம்பித்து விடுவார்கள். மேலும் அவர்களின் உடலின் நிலை, சைகைகள், கண்ணின் அசைவுகள் மற்றும் அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகளை வைத்து பொய் சொல்வதை கண்டுபிடிக்கலாம்.

சரி, பொய் சொல்பவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று கூறிவிட்டேன். நான் பேசுவதைப் பார்க்கமுடியவில்லை என்றாலும், என் எழுத்தைப் பார்த்து இந்தக் கேள்விக்கு பதில் கூறிவிடுங்கள். இந்த அறிவு டோஸில் கூட நான் ஒரு பொய் சொல்லி இருக்கிறேன். அது என்ன பொய் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம். கண்டு பிடித்ததும் அதைக் கீழே ஒரு கருத்தாக எழுதிவிடுங்கள்.

Photo: Gareth Saunders, License: Creative Commons by-sa-2.0, changes were made.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

78 Comments

 • irzath - 10/26/2014, 10:58 PM

  இந்த அறிவு டோஸில் கூட நான் ஒரு பொய் சொல்லி இருக்கிறேன். அது என்ன பொய் என்று கண்டுபிடியுங்கள். Ithu thaan antha poi……

 • adhi - 10/26/2014, 2:16 PM

  10 nimidhirku 3 poi solgirom enbadhu….mutrulum poi….

 • Aboo Maahy Milhan - 09/03/2014, 4:41 PM

  intha thahavale poy thane…,

 • Ganesan Kumar - 09/03/2014, 4:16 PM

  Poei wt?
  Hay iam small boy!
  Wt mening poei?

 • Mohamed Shakil Naushad - 09/03/2014, 3:41 PM

  enaiya porutha waraikkum grls than adhigama poi slwanga

 • Thala Maruthu - 09/03/2014, 3:40 PM

  ayyo narayana mudiyila poi endra cholluku eppadi oru kandu pudippa….!

 • Venkatesh Shanmugam - 09/03/2014, 2:57 PM

  Poi sollara yarukum athigam tension irukarthu illa

 • Gopala Krishnan - 09/03/2014, 2:33 PM

  Periiiiiya. Poiiii

 • Mohamed Ramees - 09/03/2014, 12:58 PM

  5n

 • Mohamed Niyas - 09/03/2014, 12:44 PM

  பொய்என்றால்எனக்குஎன்னன்னூதொியாதூ

 • Yaseen Ramees - 09/03/2014, 12:08 PM

  Niggal sonnathea ouru poi

 • Daklas MP - 09/03/2014, 11:26 AM

  Poy enda enna ?

 • Rajendran Ranjithan - 09/03/2014, 11:14 AM

  Ithuve periya poi thaan……

 • Ramesh Karthik - 09/03/2014, 9:44 AM

  Poyai thavira veru onrum pesuvathillai

 • Paramaguru Hit - 09/03/2014, 9:13 AM

  epalam poi sollama yr vala mudiyathu.nermaya vazhtha yr mathika mattanunga

 • Madalai Muthu - 09/03/2014, 8:44 AM

  நேக்கு பொய் சொல்ல தெரியல.

 • S.m. Usman - 09/03/2014, 8:33 AM

  Sumaraha.., . . . . Aama poi enra enna. . . ?

 • Zeenath Fathima - 09/03/2014, 8:29 AM

  Ok manidarhale poi solra enda
  Neega solradhum poi thane

 • Saji Sajivan - 09/03/2014, 8:08 AM

  antha uoor naaikuttima nee

 • Paul Arputharaj - 09/03/2014, 7:52 AM

  400000 Trainingla ithu oru episodaa ?…hi..hi

 • Mrm Satham - 09/03/2014, 7:35 AM

  Sister intha messege innoru murai solla mudiyathannu kekkanum polarukku ok thanks

 • Kavya Selvi - 09/03/2014, 7:28 AM

  பொய் சொல்வது என்பது எமது மூளைக்கு ஒரு கடினமான விடயம் ஆகும்… இந்த உலகத்துல யாராலும் பொய் சொல்லாமல் ஒரு நிமிடம் கூட நகர்த்த முடியாது….

 • Mrm Satham - 09/03/2014, 7:12 AM

  Neenga ariu doss solrathu basiclayavathu ariupporvamaha sinthippavarkalukkuthan payanperum okva? Friend inthamathiri ilichchvayangalukku idli, idiyappam avikkuthathu patri sollunga nalla varuvanga? Ok ungal ariuppayana thodara iraivanaip piraththikkiren valththukkal

 • Nanban Sskaran - 09/03/2014, 6:41 AM

  Poi solvathu moolaiku easyana vidayam athu kadinam allla

 • Saravanan Saro - 09/03/2014, 6:28 AM

  Ungaluku vijay awards kandipa undu