Natural Sciences Read in english

காதலின் அறிவியல் என்ன

By Niroshan Thillainathan on February 12th, 2014

காதலின் அறிவியல் என்னநான் அறிவியலைக் காதலிக்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்! இப்படி அறிவியலைக் காதலிக்கும் நான், காதலின் அறிவியல் பற்றி ஒரு அறிவு டோஸ் எழுதாமல் இருக்க முடியாது தானே?

காதல் என்கிற அந்த உணர்வு எங்கே நடைபெறுகின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? பலர் சொல்வார்கள் காதல் இருதயத்தில் தான் உருவாகின்றது என்று, ஆனால் உண்மை அது அல்ல! காதல் மூளைக்குள் தான் உருவாகி நடைபெறுகிறது. இதில் என்ன அதிசயம் என்றால், காதலிப்பவர்களின் மூளை கோக்கைன் (cocaine) எனப்படும் போதை மருந்து எடுப்பவர்களின் மூளை போல் ஒத்திருக்கும். கோக்கைன் பாவிப்பதால் மூளையில் இருக்கும் மகிழ்ச்சி மையம் (pleasure center) செயல்படுத்தப்பட்டு இதன் விளைவாக எப்போதுமே மிக இலகுவாக ஒரு மகிழ்ச்சி நிலையை அடைந்துவிடலாம். இதே போன்று தான் காதலிப்பவர்களும் தமது காதலன்/காதலியை காதலிப்பது மட்டும் இல்லாமல், தமது சூழலையும் மகிழ்ச்சியுடன் ஒரு விதமான romantic பார்வையிலே பார்ப்பார்கள்.

இதில் இன்னும் ஒரு சிறப்பும் இருக்கிறது! காதலிக்கும் போது பயம் மற்றும் வெறுப்பு போன்ற உணர்வுகள் குறைந்து, கவலைகள் அனைத்தும் பறந்தே போய்விடுகின்றது! இப்படிப்பட்ட இந்த மகிழ்ச்சி மையத்தை உதாரணத்திற்கு கல்வி கற்கும் போது தூண்டினால், நாம் படிப்பதைக்கூட மிகவும் சுலபமாகச் செய்துவிடுவோம்!

சரி, காதல் என்கிற உணர்வு மூளைக்குள் நடைபெறுகின்றது என்று முதல் கூறியிருந்தேன். அப்படியென்றால் இந்த உணர்வுக்கு ஏதாவது வேதியியல் பொருள்கள் தானே காரணமாக இருக்க வேண்டும்? நிச்சயமாக! Dopamine, Norepinephrine, Oxytocin  என்று அழைக்கப்படும் வேதியியல் பொருள்கள் தான் நாம் காதலிக்கும் அந்த நபரை மேலும் மேலும் விரும்புவதற்கு ஊக்கத்தையும் ஏக்கத்தையும் தருகின்றன. இது போதாது என்று தீவிர சக்தி, அக்கறை மற்றும் நன்னிலை உணர்வுகளையும் கொடுக்கின்றன.

என்ன தான் காதலின் அறிவியலை ஆராய்ந்தாலும், காதல் ஓர் கண் இல்லா மர்மம் தான்! உண்மை சொல்லப்போனால் ஆராய்ச்சியாளர்கள் இன்று வரை காதலின் அறிவியலை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால், இப்படிப் புரியாத இந்தக் காதல் நமக்குள் மலரும் போது நாம் காதலிக்கின்றோம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்துவிடுகிறது!

ஆக மொத்தத்தில் காதல் ஒரு போதை மாதிரி! சிம்பிள் ஆகக் கூறப்போனால், காதலிப்பதை நாம் காதலிக்கின்றோம் (we love being in love). ஆஹா… என்னாலேயே தாங்க முடியலடா சாமி!

நீங்கள் காதலித்தது உண்டா நண்பர்களே? உங்கள் பதிலை மற்றும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

The Science of Love


By this time, you would have been aware of my love for science. So, it will not be a surprise if I write an Arivu Dose about the science behind love. Do you know where love begins? People say that love blossoms in the heart. But that is not true. It begins in the brain. The fascinating fact is that the brain of a person in love is similar to the brain of a cocaine addict.

Cocaine addiction stimulates the pleasure centers of the brain and helps to attain euphoria easily. Similarly, a person in love, not only see their lovers romantically, but also their surroundings in a romantic perception. The surprising information is that negative feelings like fear, hatred and sadness are reduced in a person in love. So, if one can stimulate the pleasure centre while studying, even studies will be easy.

As I said in the beginning, love begins in the brain. So it’s kind of obvious that it can happen through chemical mediators. Yes! Dopamine, norepinephrine and oxytocin are the chemical mediators, which increase our love and longing for the person. They also provide strength, care and a good feel. Though, we research about the science behind love, it is a blind mystery. To be frank, researchers are unable to understand this science completely. But when love blossoms in us, we feel it undoubtedly. So love is like addiction. We love being in love…

Did you enjoy reading this Arivu Dose? Share your thoughts and opinions with me by dropping a comment below.


Unknown | Public Domain

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

29 Comments

 • Thangadurai - 10/10/2014, 10:19 AM

  Yes love is great enargi

 • sutharsan savirimuthu - 10/02/2014, 3:59 PM

  Kaathalukku kan ellai. Enpathu unmai. Ananraal yaar endu alama ariyaamale kathaliththu vaalkaiya tholaithu vidukiranka.

 • sutharsan savirimuthu - 10/02/2014, 3:52 PM

  Yes

 • Gunasegaran Jegan Jegan - 08/19/2014, 4:42 PM

  Soooper

 • Sharon Yadav - 08/19/2014, 2:16 PM

  ethu than karanama…

 • Spark Pintoo Peter - 08/19/2014, 2:11 PM

  very niceee. inum niraiya yosinga..unga ariviyal kadhaluku nan adimai.. romba nalla kadhalikiringa scienceah… i like your science knwledge…

 • Bala Kanishka - 08/19/2014, 1:36 PM

  love panrathu sarithen, ana love pannum pothu nama kavelaiyellam marakkuthu oru romantic life oruvagum ana padikkum pothu love vantha life venapoidum sir athu yeppadi padikkum pothu romantic vantha nalla padikkalamunu solluringa

 • Siva Sankari - 08/19/2014, 9:05 AM

  (y)

 • Muruga Anandam - 08/19/2014, 8:15 AM

  பாலியல் உணர்வுகள் உடலில் தூண்டப்பட்டவுடன் தலையில ஜிவ்வுன்னு ஒரு சக்தி பிரளயம் மாறினமாதிரி புலப்படுகிறது அது அறிவியல் நுணுக்கங்களால் கண்டு பிடிக்க முடியாத ஒரு சக்தியாகத்தான் தோன்றுகிறது சிக்கு விழுந்த நூல்கண்டு மாதிரி நம் உடம்பிலிலுள்ள நரம்பியல்களுள் பாலியல் உணர்வுகள் ஊடுறிவிச்சென்று பின்னப்பட்டுள்ளன தேவாமிர்தம் சாப்பிட்டவர்களுக்கு தெரியும் அதன் நிலைப்பாடு அது உயிரனங்கள் அத்தனையும் ஜீவித்திருக்கும் ஒரு மூடு மந்திரம் இதற்க்கு தன்னிலை விளக்கம் தருவது சிரமம் காதலின் உன்னதநிலையை புராணத்தில் வரும் கந்தவர்களை கேட்டால் தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது இது தெரியும்வரை காதலுக்கான தெளிவுகள் பிறக்கப்போவதில்லை

 • Alludu Laddu - 08/19/2014, 8:11 AM

  na enum adimai agala pa

 • Sethumanikkam Magamayi - 08/19/2014, 5:59 AM

  thanks…

 • Madhumitha Mital - 08/18/2014, 8:44 PM

  We love being in love “mind set” even in a situation we don’t have someone to love. It is an indicator of human’s (true intention on) love to be more human. if someone doesn’t realize what means being in love, He can’t be a complete human. He may have defective reception in his brain.

 • Loganathan Raja - 08/18/2014, 6:22 PM

  நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை.என் வாழ்விலும் அந்த சூழல் நடந்தது

 • Pugalchesskarur Kasparov - 08/18/2014, 5:48 PM

  S 24 hoursum love cocainela than iruken

 • Ps Raj - 08/18/2014, 5:29 PM

  Neenga solradha oru 75% nambanunu thonudhu nanba. . .

 • Pandian Ashwin - 08/18/2014, 5:25 PM

  Poya loss

 • Alex Pandian - 08/18/2014, 5:17 PM

  Atha en bro kekkurenga

 • Vishnu Kumar - 08/18/2014, 5:09 PM

  kadhal na oru pothai nu sollitinga. so it’s all lies

 • Suren Okok - 08/18/2014, 4:53 PM

  love is life b u t!

 • James Rajs - 08/18/2014, 4:36 PM

  appadithan nenaikiraen koncham kulappama irukku. nan kathalikkirena entru?

 • Shaaron FD S - 08/18/2014, 4:26 PM

  But anaku love feela wara matanguthey then what can i do?

 • Sha Sha - 08/18/2014, 4:11 PM

  Ayayooo na bothaiku adimai aga matten pa…!!

 • Gobinath Sgs - 08/18/2014, 4:03 PM

  that is called kathal oru pothai

 • Latha Cuty - 03/11/2014, 7:03 PM

  excellent..

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 03/11/2014, 11:47 PM

   மிக்க நன்றி Latha Cuty :)

 • Salu Lini - 03/10/2014, 5:15 PM

  Interesting. …