Science & Mystery Read in english

அறிவியல் சாரம் உள்ள மூடநம்பிக்கை

By Niroshan Thillainathan on February 25th, 2014

அறிவியல் சாரம் உள்ள மூடநம்பிக்கை„வெளியே செல்பவரைக் கூப்பிடாதே“, „நிலத்தில் படுத்து இருப்பவரைக் கடந்து செல்லாதே“ மற்றும் „அடடா, பல்லியே சொல்லிடுச்சு, அப்போ நல்ல சகுனம் தான்!“ என்று பெரியோர் சொல்வதை நீங்கள் அடிக்கடி கேட்டு இருப்பீர்கள். இவ்வாறான மூடநம்பிக்கை எனப்படும் அறிவுக்கு பொருந்தாத, பழக்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து அல்லது கோட்பாடுகள் நமது தமிழர்களால் மட்டும் நம்பப்படுவது அல்ல, ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் விதம் விதமான வகைகளில் காணப்படுகின்றது. பொதுவாக மூடநம்பிக்கை உருவாகுவதற்குக் காரணம் இது தான்: நமது முன்னோர்களின் காலத்தில், அதாவது அறிவியல் சரியாக வளர்ச்சி அடையாத காலத்தில், நடந்த ஏதாவது ஒரு சம்பவத்திற்கு காரணம் தெரியாமல் அவர்களுக்குத் அறிந்ததை, தெரிந்ததை வைத்து கூறப் பட்ட விளக்கங்கள் தலைமுறை தலைமுறையாகக் கொண்டு செல்லப்பட்டு, இன்று மூடநம்பிக்கையாக கருதப்படுகின்றது. ஆனால், எல்லா மூடநம்பிக்கையும் அர்த்தம் இல்லாத நம்பிக்கை என்று சொல்லமுடியாது! அறிவியல் சாரம் உள்ள எவ்வளவோ நம்பிக்கைகளும் உண்டு. இந்த அறிவு டோஸில் உங்களுடன் சில மூடநம்பிக்கைகளும் அவற்றின் அறிவியல் சார்ந்த அர்த்தங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.

1. ஆடி மாதத்தில் திருமணம் வைத்தால் அல்லது கணவன் மனைவி அந்நேரம் சேர்ந்தால் ஆகாது

இந்த மூடநம்பிக்கைக்கு அர்த்தம் என்னவென்று எவரிடமும் கேட்டால், ஆடியில் பிறக்கும் குழந்தை எதிர்காலத்தில் திருடன் ஆகிவிடும் என்று  சொல்லி மழுப்பி விடுவார்கள். ஆனால், இதன் அறிவியல் ரீதியான காரணம் மிகவும் அர்த்தமுள்ளது ஆகும். பொதுவாக ஆடி மாதத்தில் கணவன் மனைவி சேர்ந்தால் அடுத்த வருடம் சித்திரை, வைகாசி மாதங்களில் குழந்தை பிறப்பதை எதிர் பார்க்கலாம். எனவே, அந்த மாதங்களில் இருக்கும் உச்ச வெயிலை ஓர் சிறு குழந்தையால் தாங்க முடியாது. அது முன்னோர்களுக்கு நன்றாகவே தெரிந்து விட்டது. ஆனால், கணவன் மனைவியிடம் வெயிலைக் காரணமாகச் சொன்னால் விடவா போகிறார்கள்? இல்லையே, எனவே இப்படி ஒரு திருடன் கதையைக் கட்டிவிட்டார்கள்.

2. இரவு நேரங்களில் மரத்தின் கீழ் நிற்க வேண்டாம் அல்லது மரத்தின் கீழ் தூங்கினால் பேய் பிடித்து விடும்

இந்த நகைச்சுவையான மூடநம்பிக்கைக்கு கூட ஓர் சிறப்பான அறிவியல் ரீதியான அர்த்தம் உள்ளது. பொதுவாக பகல் நேரத்தில், சூரிய ஒளி இருக்கும் வரை தாவரங்கள் கரியமிலவாயு (carbon dioxide) உள்ளெடுத்து ஆக்சிசனை (oxygen) வெளியிடுவன. ஆனால், இதுவே சூரிய ஒளி இல்லாத இரவு நேரத்தில் இந்தச் செயல்பாடு எதிர்மாறாக ஆகிவிடும். இரவில் ஆக்சிசனை உள்ளெடுத்து கரியமிலவாயு வெளியிடப்படுகிறது. எனவே, இரவு நேரங்களில் நாம் ஓர் மரத்திற்கு கீழ் நிற்கும் போது அல்லது தூங்கும் போது அந்த மிகவும் ஆபத்தான கரியமிலவாயு சுவாசிக்க வேண்டி வந்துவிடும். ஆனால், இப்படி அறிவியல் விளக்கம் கொடுத்தால் யார் தான் கேட்கப் போவது, எனவே பேய், பூதம், பிசாசு பிடித்து விடும் என்று சொல்லி பயம் உறுத்தி விட்டார்கள்.

3. எங்கும் செல்லும் போது பூனை குறுக்கே சென்றால் போகின்ற வேலை நடக்காது

நான் எவ்வளவோ ஆராய்ந்து பார்த்தேன், ஆனால் இதற்கு அறிவியல் ரீதியான காரணத்தை என்னால் கண்டே பிடிக்க முடியவில்லை நண்பர்களே. எனவே, நான் நினைப்பது இது தான்: முன்னொரு காலத்தில் ஒரு பாட்டி நடந்து சென்ற போது ஏதாவது ஒரு கெட்ட சம்பவம் நடந்து இருக்கும். உடனடியாக அதற்குக் காரணம் என்னவென்று தேடிய பாட்டி, தற்செயலாக குறுக்கே சென்ற பூனை மேலே பழியைப் போட்டிருப்பார். பூனை குறுக்கே சென்ற காரணத்தால் தான் இந்தச் சம்பவம் நடந்து விட்டது என்று கூறி, இதை தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து கொடுத்து விட்டு இருப்பார். ஆனால், அதற்கு அந்தப் பூனை என்ன செய்வது? அது ஏதும் உணவைத் தேடி அவ்வழியாகச் சென்று இருக்கும், அல்லது எதிரே நின்ற ஒரு பூனை ஃபிகரைப் பார்த்து சைட் அடிச்சு style ஆக நடந்து இருக்கும். என்னவோ தெரியவில்லை, இதற்கு என்னால் காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த மூடநம்பிக்கைக்கு உங்களில் ஒருவருக்குக் காரணம் தெரிந்தால், அதைக் கட்டாயம் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆக மொத்தத்தில் எனது கருத்து என்னவென்றால்: எல்லா மூடநம்பிக்கையும் முட்டாள் தனமான நம்பிக்கை இல்லை. அதே போன்று, எல்லா மூடநம்பிக்கைக்கும் அறிவியல் ரீதியான காரணமும் இல்லை. எது சரி, எது தப்பு என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்!

சரி, இனி கூறுங்கள் நண்பர்களே! உங்களுக்குத் தெரிந்த வேறு மூடநம்பிக்கையும் அதன் மூல காரணமும் என்ன? காரணம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, உங்களுக்குத் தெரிந்த மூடநம்பிக்கைகளைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்! நாம் எல்லோரும் சேர்ந்து அதற்குக் காரணத்தைக் கண்டுபிடிக்கலாம்!


English Version

The Science in Superstitions


There are diverse sets of beliefs and superstitions governing every aspect of Tamil people’s life. Superstition is a practice, which is in contradiction to modern science. We often hear about the following beliefs, such as questioning “where are you going?” while someone is leaving the house, will be a hindrance for their purposes of journey, or never crossover someone lying on the floor or a lizard’s sound is indicating a good omen and others from our grandparents at many occasions. All these beliefs or superstitions are prevalent among Tamil people and claimed to be blind faiths due to massive ignorance in the community. However, this does not mean that such superstitions are peculiar to Tamil community alone, but they do exist in other countries and being practiced by other races as well. Superstitions started to be a common element among people from all walks of life at the time where science is still at its early stage. Thus, people had difficulties in understanding a phenomenon occurred at that period of time scientifically. Therefore, they started to reason the phenomenon happening around them in their own way based on luck, omen and other elements. Such beliefs passed from one generation to the next generation and that is why they are still prevalent among our community until today. However, stereotyping all the beliefs as irrational is certainly wrong, because a part of these beliefs do have some scientific reasons behind them, and this Arivu Dose will give you a vivid knowledge about some valuable Tamil superstitions.

1. The month of Aadi is considered to be an inauspicious month for weddings, and married couples are prohibited from having sex.

This is because, when a woman conceives during Aadi, the child’s birth would be in Chithirai which is peak summer, causing problems during the process of child’s birth. Besides, the new born baby will surely cannot adapt itself to withstand high temperature. Elder generation people are well aware of this fact and thus they strictly don’t plan for weddings or allowing married couple to have sex in this month. However, they failed to find proper reasons or ways to persuade the couples, thus often relate this belief to a quirky idea in which they used to say “the new born baby will end up being a thief in future, if it is born on Chittirai” to simply scare the couples to not have body contact in the month of Aadi.

2. Ghost will haunt those sleeping or standing underneath trees at night.

This belief seems to be one of the funniest, yet it has a scientific reason behind it. During the day time, in the presence of sunlight, the plants use up the carbon dioxide gas and release oxygen gas as a byproduct.  On the other hand, during night they are unable to utilize the carbon dioxide and this leads to an increase in the proportion of carbon dioxide in the air. Therefore, if one sleeps underneath the trees, the amount of increased carbon dioxide in the air around will certainly affect his/her health and that is why it is inadvisable to sleep under trees during night. The ignorance among the community at that time is again the reason for the elder people to create a funny story linking tress and ghost to emphasize the dangers of sleeping under the tress at night.

 3. It is unlucky and inauspicious to see a cat crossing over at the start of the journey.

This belief still remains as an unsolved puzzle in my head as I could not find the actual science behind it. Do any of you know why such a belief appeared in our community?

In conclusion, it is not a smart idea of neglecting all the superstitions just because most of them are contradicting with modern science, as some parts of them do have scientific reasons. Therefore, one should envisage the reasons of practicing such beliefs in life and take wise decisions about this issue rather than following the crowd. Do you know any other superstitions with scientific reasons, which are prevalent among Tamil people until to date? I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


Nino Barbieri | CC-BY-SA-3.0, via Wikimedia Commons, changes were made.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

78 Comments

 • Yuvaraj Poondiyan - 10/01/2014, 6:10 PM

  பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்ற ஏன் கூறினார்கள் தெரியுமா?

  பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த
  பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில்
  போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது.
  அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்க­ சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள்,
  வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.
  ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள்
  பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள்
  வந்த திசையை மாற்றி வேறு திசையில்
  செல்வார்களாம்.

  மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்க
  பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.
  பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என
  உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.
  அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக
  செல்லக்கூடாது என்றார்கள்.

  நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல
  விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்,
  .
  பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும்
  திரிக்கப்பட்டுவிட்டது. பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை. இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?

  பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்…!

 • Arun Laal - 08/29/2014, 5:20 PM

  Super

 • மார்த்தாண்டனும் தேடலும் - 08/29/2014, 2:59 AM

  2000 வருடங்களுக்கு முன்பு , எகிப்தில் பூனை அரசனுக்கு உரிய ஒன்றாக இருந்தது, எனவே பூனை குறுக்கே செல்லும் போது, அதிகார வர்க்கம் செல்லும் போது அவ்வழியை தவிர்ப்பது நல்லது என்ற அடிமை என்னம்தான் பிற்காலத்தில் இதே என்னம் கெட்ட சகுனம் என்று மாறியது

 • Kamalabathan Lakshmipathy - 08/28/2014, 8:57 PM

  neengal kaattu vazhiyil payanam seithu irunthal ithai kaettu irukka maatteergal.

 • Sudhar Sun Ashok - 08/28/2014, 7:50 PM

  Namba munnor . Photo yedutha ayul korajidum nu solli ireukanga atha pathi explin panna mudiyuma

 • Antony Doss - 08/28/2014, 7:36 PM

  Intha poonaiya paarthaa archana facesum vaani facesum kalantha kalavai pola theyriuthuma

 • Mk Mk - 08/28/2014, 3:57 PM

  Veliyea kelambum pothu kaal thadukkuna or thalaila muttitta nama normal a illanu artham (pathatamavo, kavanakuriva irugomnu

 • Jana Janarthanan - 08/28/2014, 3:38 PM

  veliyae kelambum bothu kaal thadukkitta or thalaila muttitta konja neram kalichu poga solranga yaen?… sollunga frnds

 • Subi Thra - 08/28/2014, 3:37 PM

  I hate cat :@

 • Bkr Basheer - 08/28/2014, 3:22 PM

  Noor Mohmd adu 100/100 sariyana tagaval

 • Bharani Vijay - 08/28/2014, 2:31 PM

  Poosanikai amavasayila odacha..vidhai ellam paravi chedi valandhu innoru poosanika [email protected] anitha..

 • Selvaraj Selvaraj - 08/28/2014, 2:15 PM

  Nanpa antha palli pasiyil kathirukkalam allava.

 • Mohamed Alif - 08/28/2014, 12:14 PM

  india wil thaan mooda nambikkei adiham.mooda nambikkeiku mutruppulli islam mattum thaan.

 • Noor Mohamed - 08/28/2014, 12:11 PM

  மரங்கள் இரவில் ஆக்சிஜனை உள்வாங்கி கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுதல் புதுத் தகவலாக உள்ளது.அது சரியான தகவல்தானா?

  • Mohanadas Ajanthan - 08/28/2014, 12:37 PM

   sir school pogalayo?

 • Kanagesh Thangaiah - 08/28/2014, 8:59 AM

  Thanks bos

 • கயல் விழி - 08/28/2014, 8:57 AM

  // எங்கும் செல்லும்
  போது பூனை குறுக்கே சென்றால்
  போகின்ற வேலை நடக்காது (அல்லது) பூனை குறுக்கே போனால், சகுனம் சரியில்லை //

  நீங்கள் காட்டுப் பாதையில் நடந்திருந்தால். இதை அறிந்திருப்பீர்கள். பொதுவாக பூனை ஒரு திறந்தவெளியைக் கடந்தால், உடனே மறைவில் சற்று நேரம் பதுங்கியிருக்கும். ஏதாவது நடமாட்டம் இருக்கிறதா என்று ஒளிந்திருந்து கூர்மையாக கவனிக்கும். அது அதனுடைய இயற்கையான குணம்.
  புலி, சிறுத்தை போன்றவை பூனை இனத்தைச் சேர்ந்தவை.
  இன்றைக்கு கூட உங்கள் வாகனம் போகும் பாதையில் ஒரு புலி கடந்தால், அது ஓடிப் போய்விடாது. புதரில் மறைந்து உட்கார்ந்திருக்கும். அதன் இரை வருகிறதா அல்லது அதன் பாதுகாப்புக்கு இடையூறாக யாராவது வருகிறார்களா என்று பார்த்திருக்கும்.
  நகரங்கள் உருவாகாத பழைய தினங்களில், காட்டுப் பாதையில் மக்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் மாட்டு வண்டிகளின் மூலமாகவும் நடந்தும் தங்கள் பயணத்தை அவர்கள் மேற்கொண்டார்கள்.
  “புலி போன்ற பூனை இன மிருகம் குறுக்கில் கடந்தால், அது புதரில் பதுங்கியிருக்கலாம். உங்களையோ, உங்கள் வாகனத்தை இழுக்கும் மிருகங்களையோ குறி வைத்து அது பாயக்கூடும். சற்று நேரம் பொறுத்துப் பயணத்தைத் தொடர்வது நல்லது” என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.
  இன்றைய தினத்தில், ” எங்கும் செல்லும்
  போது பூனை குறுக்கே சென்றால்
  போகின்ற வேலை நடக்காது” என்பதெல்லாம் அபத்தமான நம்பிக்கை.
  மோட்டார் வாகனங்கள் விரையும் நகரத்தில், பூனை குறுக்கே போனால், அதற்குதான் சகுனம் சரியில்லை. ஏதாவது வண்டியில் அடிபட்டு சாகும்.

  #குரு

 • Vinoth D Seelan - 08/28/2014, 8:49 AM

  See pizza 2 movie.. Exact explanation.. for negative and.positive energy

 • க.திவான் பிரியன் - 08/28/2014, 8:01 AM

  Anna ankeye poittenna

 • Arun Vedaranyam - 08/28/2014, 5:29 AM

  அக்கால சமர் நாட்களி்ல் வழி தவறி வீரர்கள் பாகேும் பாதே புூனை குருக்கிட்டால் அருகில் ஊர் இருக்கிறது என்று அர்த்தம்

 • Dhanapriyan Sekar - 08/28/2014, 5:06 AM

  Puratasi masathula yen non veg sapidakudathunu soltranga theriuma

 • Prakash Kutty - 08/28/2014, 5:02 AM

  Kalyanatha yan aaerm kaalathu pairnu solraainga pa

 • Sinduja Laxman - 08/28/2014, 4:44 AM

  kulanthaya ooti valakkurathu illa. Namma veetukku vara marumagala nalla pathukitta, adutha veetukku marumagala pora namma ponna nalla pathupanganu.

 • Sinduja Laxman - 08/28/2014, 4:42 AM

  ooran pillaya ooti valatha, than pillai thana valarumnu solluvanga. Athukku artham pakkathu veetu

 • Vinoth Anitha - 08/28/2014, 4:31 AM

  poosanikaai road la potu odaikarthuku science enna solludhu. anybody knows ? Noway.

 • Karthick Karthick - 08/28/2014, 3:27 AM

  Nam munnorkal onerum moodarkal illai arthamulla inthumatham padithu parungal nam kathu kuthuvatharku koda oru artham irukum