Behavioural Sciences Read in english

மிசோஃபோனியாவும் கோபமும்

By Niroshan Thillainathan on June 13th, 2014

மிசோஃபோனியாவும் கோபமும்நாம் அனைவருமே இதைச் சந்தித்திருப்போம்! சிலர் சாப்பிடும் பொழுது, பற்களைக் கொண்டு ஓசையுடன் மெல்லுவார்கள். வேறு சிலரோ, மூச்சு விடும் பொழுது அதிகமான ஒலி எழுப்புவார்கள். அப்பொழுதெல்லாம், இவர்களுக்கு என்ன பிரச்சனை என்று உள்ளூர எரிச்சல் அடைந்திருப்பீர்கள் அல்லவா? இந்த எரிச்சலுக்குப் பெயர் உண்டு, இதை மிசோஃபோனியா என்று அழைப்பார்கள்!

மிசோஃபோனியா என்பது “ஒலி வெறுப்பு” என்ற பொருள் தரும். குறிப்பிட்ட ஒலிகள் மூலம் எதிர்மறை உணர்வைத் தூண்டுவதே இந்த மிசோஃபோனியா. இது ஒரு வகை நரம்பியல் கோளாறு ஆகும். மிசோஃபோனியா நோய் உள்ளவர்கள் வாழ்வில் அடிக்கடிக் கேட்கின்ற ஒலிகளைக் கேட்டால் கூட பெருங்கோபம் கொள்கின்றனர். சிரிப்பொலி, பல் துலக்குவதால் ஏற்படும் ஒலி, குறட்டை ஆகிய ஒலிகளும் இதில் அடங்கும்.

மிசோஃபோனியா எத்தனை சதவீத மக்களுக்கு இருக்கிறது என்று சரியான கணக்கீடு இல்லை. ஆனால், சில ஆராய்ச்சிகள் பத்து சதவீத மக்களுக்கு மிசோஃபோனியா இருக்கிறது என்று தெரிவிக்கிறது. இன்னும் சில ஆராய்ச்சிகள் அறுபது சதவீத மக்களுக்கு இருப்பதாகத் தெரிவிக்கிறது.

நீங்கள் எப்படி நண்பர்களே? உங்களுக்கு இவ்வாறு ஏதும் ஒலிகள் கேட்கும் பொழுது கோபம் வருவது உண்டா? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

The science behind Misophonia


We all would have been in the following situation at least once in our life time! Some people chew their food noisily. Some people make noise while they breathe. You would have been irritated by them and wondered what is wrong with them. This irritation is called as Misophonia.

Misophonia is hatred of sounds. Instigation of negative feelings on hearing particular sounds is called Misophonia. This is a type of nervous disorder. People suffering from Misophonia gets furious even on listening to sounds of day to day life. It includes laughter, snoring and the noise of brushing your teeth.

There is no statistics to estimate the number of people with Misophonia. But some studies say that about 10% of people suffer from this condition. Some other studies say that it is found in 60% people.

What about you, friends? Have you ever got irritated by these sounds? Post your comments below.


Lara604 | Creative Commons by-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

5 Comments

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 06/22/2014, 6:32 PM

    உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நண்றி நண்பர்களே Karuppu Roja Ramdas Rdx Nadar Poncavetrivel Poncavetrivel Gánésh Jaï

  • Poncavetrivel Poncavetrivel - 06/13/2014, 7:45 PM

    Yenaku mathavanga kindal seium osai pidikathu

  • Karuppu Roja - 06/13/2014, 4:00 PM

    Eantha sathamum eanaku kovam varathu master earumaiku aprama porumainna athu intha karupu than

  • Gánésh Jaï - 06/13/2014, 3:50 PM

    Lighta varum bro

  • Ramdas Rdx Nadar - 06/13/2014, 3:02 PM

    kuratai satham arave aagadhu