Social Sciences Read in english

மர்மச் சுரங்கப்பாதைகள்

By Niroshan Thillainathan on October 24th, 2014

மர்மச் சுரங்கப்பாதைகள்ஐரோப்பாவில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த ஒரு சுரங்கப்பாதை 1000 வருடங்களுக்கு முந்தைய காலத்தினைச் சேர்ந்தது. ஏறத்தாழ நூறுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருக்கும் இவை யாரால் எப்போது உருவாக்கப்பட்டது என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. “Erdstall” என்றழைக்கப்படும் இவை மிகவும் குறுகிய அளவில் இருக்கின்றன. இவை 3 அடி 3 அங்குலம் முதல் 4 அடி 7 அங்குலம் வரையிலான உயரமும், குறுக்காக 2 அடியும் என அளவுகளைக் கொண்டுள்ளன. மேலும் இதைவிட சிறிய சுரங்கப்பாதைகளும் உள்ளன, அங்கு வயதானவர்கள், அதிக எடையுள்ளவர்கள் செல்ல முடியாத வகையில் மிகவும் சிறிய பாதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

சில சுரங்கப்பாதைகள் முடிவில் வளையச் சுரங்கங்களாக உள்ளன. பெரும்பாலான சுரங்கப்பாதைகள் 160 அடிக்கு குறைவான நீளமுடையவையாக உள்ளன. இடைக் காலக்கட்டங்களில் இவை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற தோராயமான கருத்து நிலவுகிறதே தவிர, சரியான கால அளவினை இன்றளவும் கண்டறிய முடியவில்லை. தேவையான அளவு கலைப்பொருட்கள் கிடைக்காததே இதற்குக் காரணம் என்று சிலர் கூறுகின்றனர்.

அதே காரணம் தான், இவை ஒளியக்கூடிய இடமாக அல்லது வசிப்பிடமாக இருந்திருக்க முடியாது என்ற கற்பனையினையும் கொடுக்கிறது. ஒருவேளை இந்த இடம் கிறிஸ்தவர் அல்லாத மற்றவர்களால் வழிபாட்டிற்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த மர்மமான இடத்திற்கு மேலும் வலுவூட்டம் வகையில், வரலாறு பற்றிய எந்த புத்தகத்திலும் இவ்விடத்தினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு கூட இடம்பெறவில்லை.

அப்படியென்றால் இந்த மர்மமான இடம் எப்படி உருவாக்கப்பட்டிருக்கும் நண்பர்களே? உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களைக் கட்டாயம் கீழே ஓர் கருத்தாக எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

The Mysterious Stone Chambers


The tunnels discovered by the European archeologists are 1000 years old.  They are more than 100 in number. Who has built these tunnels is an unsolved mystery. These tunnels called as “Erdstall” are very narrow. They are 3 feet 3 inches to 4 feet 7 inches tall and 2 feet wide. There are still smaller structures in which small paths have been created. These paths are not suitable for old and obese people.

Some of them end as ring tunnels. Most of the tunnels are less than 160 feet in length. It is believed that they might have been built in the middle of the century, but there is no exact estimation of the time period. According to some people, it is due to the lack of art excavations from the place.

The same reason makes us believe that this place might not have been built to hide or live. There is also an opinion that, it might have been used by non Christians as a place to hold their religious gatherings. To intensify the mystery, there is no note of this place in any of the History books.

How would have this place be built? Post your thoughts here as a comment.


Jim Champion | Creative Commons by -3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.