Science & Mystery

பெர்முடா முக்கோணப் பகுதியின் மர்மம்

By Niroshan Thillainathan on July 28th, 2014

பெர்முடா முக்கோணப் பகுதியின் மர்மம்மர்மமாக மறைந்துவிட்ட விமானங்கள் மற்றும் கப்பல்கள் பற்றி நீங்கள் நிச்சயமாகக் கேள்விப்பட்டு இருப்பீர்கள், சரி தானே? இவ்வாறான மர்மங்களுக்குப் பெயர் பெற்ற இடமென்றால் அது பெர்முடா முக்கோணம் தான். ஃபுளோரிடா, சான் ஜூவான் (போர்டோ ரிக்கோ) மற்றும் பெர்முடா பகுதிகள் அடங்கிய பகுதிதான் பெர்முடா முக்கோணம் ஆகும். இங்கு பலவிதமான விமானங்களும், கப்பல்களும் காணாமல் போயுள்ளன. இதற்கான காரணங்கள் இன்றளவும் உறுதிசெய்யப்படவில்லை என்பதே இதன் மர்மத்திற்கு அடித்தளமாக உள்ளது. இயற்கையைக் கடந்த, அமானுஷ்ய விஷயங்களை ரசிப்பவர்கள் இவ்விடத்தில் அறிவியல் விதிகள் அனைத்துமே தோற்றுப்போவதாகக் கருதுகிறார்கள். ஆனால் சிலர் இங்கு ஏற்பட்ட விபத்துகளுக்கு உபகரணங்களில் ஏற்பட்ட கோளாறு, மனிதனின் பிழைகள் அல்லது இயற்கை சீற்றங்கள் காரணங்களாக இருக்கலாம் என்கின்றனர்.

1950 ஆண்டில் ஃப்ளைட்-19 என்ற விமானம் காணாமல் போனதில் இருந்து தான் இந்தப் பெர்முடா முக்கோணத்தின் மீதான பார்வை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த விமானத்தின் தலைமை அதிகாரி கடைசியாக, “நாங்கள் வெள்ளைநிற நீருக்குள் இறங்குகிறோம், எங்கே இருக்கிறோம் என்றே தெரியவில்லை, நீர் பச்சையாக உள்ளது, வெள்ளை இல்லை” என வித்தியாசமாகப் பேசியதாகத் தெரியவந்தது. ஒரு சில கடற்படை அதிகாரிகள் அந்த விமானங்கள் செவ்வாய் கிரகத்திற்குப் பறந்து போயிருக்கலாம் என்று கூட கூறுகின்றனர்.

ஆனால் இத்தனை விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் காணாமல் போனால், அதற்குப் பின்னால் நிச்சயமாக ஏதோ ஒரு மர்மம் இருக்கத் தானே வேண்டும்? இந்தப் பெர்முடா முக்கோணத்தினைப் பற்றி நீங்களும் ஏதும் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா நண்பர்களே? இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.

Photo: Unknown,  License: Public Domain.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

60 Comments

 • Zackeer Ahamed - 07/28/2014, 3:37 PM

  Neag ga solluga

 • Leo Francis - 07/28/2014, 2:38 PM

  God is great!

 • Angels Fly - 07/28/2014, 1:56 PM

  allah z know eveything

 • Mubarak Basha - 07/28/2014, 1:51 PM

  nanum kelvi patu etukken……

 • Sivakumar Siva - 07/28/2014, 1:49 PM

  உலகின் புரிந்து கொள்ள முடியாத
  ஒரு மர்மங்களில் பெர்முடா முக்கோணமும்
  ஒன்று..பெர்முடா,ப்ளோரிடா மற்றும்
  போர்டேரிகோ ஆகிய
  பிரதேசங்களுக்கு இடைப்பட்ட முக்கோண
  வடிவ கடல் பகுதியே பெர்முடா முக்கோணம்
  எனபடுகிறது.. இந்த பகுதியினூடாக
  செல்லும் கப்பல் மற்றும் விமானகளில் பல
  மாயமாக மறைவதும்,விபத்துகுள்ளவதும்
  புரிந்து கொள்ளமுடியாத புதிராக உள்ளது..
  இந்த மர்மம் வெளிச்சத்துக்கு வந்தது ம் 1945
  ஆண்டு நடந்த ஒரு சம்பவம் மூலம்
  ஆகும்..1945ம் ஆண்டு பயிற்சிக்காக
  புறப்பட்டு சென்ற அமெரிக்க
  கடற்படையை சேர்ந்த flight19 எனும் விமானம்
  மாயமாக மறைந்து போனது…முதலில்
  காலநிலை காரணமாக விமானம்
  விபத்துக்குள்ளகியிருக்கலாம்
  என்றே கருதப்பட்டது..
  ஆனால் ஆய்வுகளின்
  படி அன்று வானிலை மிக அமைதியாக
  இருந்ததாகவும்,விமானத்தை ஒட்டிய
  விமானி மிகவும் அனுபவம் வாய்ந்த ஒருவர்
  என்றும் கூறப்பட்டது..காணாமல் போன
  விமானத்தை தேடி 13 பேர் கொண்ட ஓர்
  மீட்பு குழு இன்னுமொரு விமானத்தில்
  புறப்பட்டது…. ஆனால் பயிற்ச்சி விமானம்
  போலவே மீட்பு விமானமும் மாயமாக
  மறைந்து போனது..
  இன்று வரை அந்த இரு விமானங்களுக்கும்
  அதில் பயனித்தவர்களுகும் என்ன
  நடந்தது என்பது யாருக்கும்
  தெரியாது..மூன்று வருடங்கள் கழித்து 32
  பயணிகளுடன்
  போடேரிகோவிலிருந்து மியாமி நோக்கி பு
  றப்பட விமானம் மாயமாக
  மறைந்தது..இன்றுவரை அதன் சிதைவுகள் கூட
  கண்டுபிடிக்கப்படவில்லை..
  இதே வருடம் அசாரோசில்
  இருந்து பெர்முடா நோக்கி புறப்பட்ட
  விமானம் மாயமாக
  மறைந்து போனது..பின்பு 1949 ம்
  ஆண்டு பெர்முடாவில்
  இருந்து ஜமெயக்கா நோக்கி புறப்பட்ட
  விமானம் காணாமல் போனது…
  இதே போல் 1963ம் ஆண்டு 39 பேருடன் சென்ற
  கப்பல் ஒன்று இந்த பகுதியில் மாயமாய்
  மறைந்தது…பின்பு 1969 ம் ஆண்டு இந்த
  முக்கோணத்தின் மீது பறந்து கொண்டிருந்த
  ஒரு விமானத்தின்
  ரேடியோ தொடர்பு அறுந்து போய்
  பின்பு அதன் கெதி யாருக்கும் தெரியாமல்
  போனது..
  இந்த மர்மங்களுக்கு பலர் பலவிதமான
  விளக்கம் கொடுத்தனர்..சிலரின்
  கருத்துப்படி இந்த கடல் பகுதியில் ராட்சச
  சுழிகள் இருப்பதாகவும் அவைதான்
  கப்பல்களை விழுங்குவதாகவும்,வேறு சிலரோ
  இந்த பகுதியில் எதோ ஒரு அமானுஷ்ய
  சக்தி உலாவுவதாகவும் அவைதான் இந்த
  கானாமல்போதல்களுக்கு காரணம் எனவும்
  கூறுகின்றனர்…
  ஆனால் ஆராய்சியாளர்களின்
  கருத்து வேறுமாதிரி உள்ளது….சில
  இயற்கை நிகழ்வுகள் தான் இதற்கு காரணம்
  என்பதே இவர்களின் வாதமாகும்..இந்த
  முக்கோண பகுதியில் மின்காந்த புலம்
  ஏனைய இடங்களை விட வலுவாக இருப்பதாக
  ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்….வலுவான
  மின்காந்த புலத்தால் கப்பல் மற்றும்
  விமானங்களின் திசையறி கருவிகள்
  குழப்பமடைந்து அவை வேறு திசையில்
  பயணித்து விபத்துக்குள்ளவதாக
  விஞ்ஜானிகள் தெரிவிகின்றனர்..மேலும்
  கடலுக்கு அடியில் இருந்து வெளிப்படும்
  மெதேன் வாயு காரணமாக தண்ணீரின்
  அடர்த்தி குறைவடைந்து கப்பல்கள்
  மூழ்குவதாகவும் தெரிவிக்க
  படுகிறது….யார் என்ன கூறினாலும்
  பெர்முடா முக்கோணம் பல மர்மங்களை கொண்ட
  பயங்கர இடமாகவே இன்றும் கருத
  படுகின்றது….
  அந்த பகுதில் என்ன நடக்கிறதென்பது அந்த
  ஆண்டவனுக்கே வெளிச்சம்…

 • Gánésh Jaï - 07/28/2014, 1:45 PM

  Bro. . Nenga soluga bro

 • Oruvan Avan Oruvan - 07/28/2014, 1:30 PM

  Jinnaka irukalam…

  • Sam Dano - 07/28/2014, 4:27 PM

   Valigala meeri jinugalala onum panamudiyadhu….