Natural Sciences Read in english

மனிதனுக்கு அடுத்து புத்திசாலியான விலங்கு எது?

By Niroshan Thillainathan on April 21st, 2014

மனிதனுக்கு அடுத்து புத்திசாலியான விலங்கு எது?விலங்கு இராஜ்ஜியத்திலேயே புத்திசாலியான இனம் மனித இனம் என நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால், புத்திசாலியான விலங்குகளில் அடுத்த இடத்தை எது எடுத்துள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? இரண்டாவது இடத்தில் பாட்டில்நோஸ் டால்பின்கள் (Bottlenose dolphins) உள்ளன. இவற்றுக்கு மேம்பட்ட மொழி அறிவு உண்டு, மேலும் அவற்றால் எளிதான சைகை மொழிகளை அறிந்து கொள்ள முடிகிறதாம். இதை விட அவை அடிப்படை எண் கணித கருத்துகளைப் புரிந்து கொள்கின்றன. ஒளி மற்றும் ஒலித் தகவல்களைப் பெற முடிவதால், இந்த பாட்டில்நோஸ் டால்பின்கள், தொலைக்காட்சி மூலம் வரும் செய்திகளைக் கண்டு, கிரகிக்கவும் முடிகின்றன.

டால்பின்கள் சமூக குழுக்களாக பயணிக்கின்றன; மேலும் அவை சிக்கலான விசில் மற்றும் கீச்சு சத்தங்கள் மூலம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்றன. பிற டால்பின்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டால், மற்ற டால்பின்கள் குழுக்களாக பயணித்து வந்து அதைக் காப்பாற்றும். மனிதர்களை விட அறிவு அதிகமோ இல்லயோ, இரக்கம் அதிகம் இருக்கின்றது என்பதில் சந்தேகமே இல்லை!

தங்களது பயிற்சியாளர்கள் கற்றுக் கொடுத்த வித்தைகளை, நினைவில் வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், பின்னால், மற்ற டால்பின்களுக்கும் இந்த செயல்முறைகளைக் கற்றும் கொடுக்கின்றனவாம். குரல்வித்தைகள் மற்றும் செயல்பாடு இரண்டிலும், மனிதர்களைப் போல் நடிக்கவும் டால்பின்களுக்குத் தெரியுமாம்.

என்ன நண்பர்களே, இந்த அதிசயப் பிராணியைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

The most intelligent animal after human being


We feel proud that human beings are the most intelligent in the animal kingdom. Do you know which animal holds the second place? The Bottlenose dolphins are in the second place and they have an advanced language skill. They are also capable of understanding simple gestures. It is surprising to know that they are able to understand simple mathematical facts. As they understand sound and visual images, these Bottlenose Dolphins are able to get the news and information telecasted in the television.

Dolphins travel as social groups. They communicate with one another by whistling and screaming noises. It is very interesting to know that when a dolphin gets into danger, other dolphins reach it as a group and will save it. They may be second in the intelligence level but they take up the first place in kindness!

The dolphins not only learn and remember the tricks from their trainers, but also teach them to other dolphins. Dolphins also know to mimic and act like human beings. What do you think about this wonderful animal? Post your comments below.


Clayoquot | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

4 Comments

  • Veera Bala - 04/21/2014, 8:10 PM

    ya its true

  • Dheena Mathan - 04/21/2014, 6:09 PM

    gud

  • Palani Thiruvallur Arumugam - 04/21/2014, 4:32 PM

    I love Dolphins.

  • Bala Ji - 04/21/2014, 2:09 PM

    Thannelaimarammal erupadhu than edan serappu. Manethan appade erupadhu aredhu.