Natural Sciences Read in english

உப்பு சாப்பிடுவது எவ்வளவு முக்கியம் தெரியுமா?

By Niroshan Thillainathan on June 16th, 2014

உப்பு சாப்பிடுவது எவ்வளவு முக்கியம் தெரியுமா?பொதுவாக நம்மில் பலர் உப்பு உடல் நலத்திற்குக் கேடு என்றே கருதுகிறோம். மருத்துவர்கள் கூட உப்பின் அளவைக் குறைத்தால் பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அறிவுரைகள் கூறுவர். இப்படியிருக்கையில் ஆயுர்வேதமும் நாட்டு வைத்தியர்களும் இதற்கு முரண் கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சுத்தமான இயற்கை உப்பு உடல் ஆரோக்கியத்தைப் பேணவும், வாழ்க்கை செயல்முறைகளைத் துவக்கவும் மிகவும் முக்கியமானது என்கின்றனர். இன்றைய தூய்மை இல்லாத சூழலில் மனிதர்கள் நாம் பலவாறான நச்சுப் பொருள்களின் தாக்கத்திற்கு இலக்காகிறோம். இதன் விளைவாக உடலின் நச்சுத் தன்மையின் அளவு அதிகரிக்கின்றது. அளவுக்கதிகமான நச்சுப் பொருள்களை சரிவர சுத்திகரிப்பு செய்ய முடியா நிலை ஏற்படும்போது உடலின் அமிலத் தன்மையும் அதிகரிக்கும். அமிலத் தன்மையின் அளவு உடலில் அதிகமாகும் பொழுது, மனிதனின் உடல் வைரசு, கிருமி போன்ற நுண்ணுயிரிகளின் தாக்கத்திற்கு இலக்காகும் அபாயமும் அதிகரிக்கின்றது. எனவே, உடலில் நிலையான அமிலத் தன்மையை ஏற்படுத்த உப்புத் தேவைப்படுகின்றது. அதிகமான உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூளையின் செயல்பாடுகளும் அதிகரிக்கின்றது. மேலும், சோர்வின்மை, உடல் புத்துணர்ச்சி, சிறந்த செரிமானச் சக்தியையும் உப்பைச் சேர்ப்பதன் மூலம் நாம் பெறலாம் என நாட்டு வைத்தியர்கள் கூறுகின்றனர்.

ஒரு பக்கம் மருத்துவர்கள், இன்னுமொரு பக்கம் நாட்டு வைத்தியர்கள். இதில் யாரை நீங்கள் நம்புவீர்கள் நண்பர்களே? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

The importance of salt in your diet


Most of us think that, salt is bad for our health. Doctors also suggest that we can protect ourselves from various diseases by reducing the salt in our diet. But Doctors of Naturopathy and Ayurvedha contradict this belief. They say that pure natural salt is essential for good health and to begin various physiological processes in our body. In the current unclean environment, we are subjected to various harmful effects of toxic substances. This leads to increase in toxic chemicals in our body. The acidity of our body increases, when our body fails to detoxify the excess toxins.  It leads to increased susceptibility to virus and bacterial infections. To balance the acidity of the body, we need salt. Salt also increases the brain function. Naturopathy doctors say that salt can prevent us from getting tired, keep us active and give a good digestive ability.

Allopathy doctors on one side and naturopathy doctors on other side. Whom do you believe? Post your comments below.


Cloveapple | Creative Commons by-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

2 Comments

  • Naga Raj - 06/18/2014, 11:22 AM

    Naduu.vatear

  • Nam Mohamed Sadiq - 06/18/2014, 1:25 AM

    If you have kidney stone doctor advice use 0% salt

    If follow his words

    You will receive new disease of thyroid