Natural Sciences Read in english

576 மெகாபிக்சல் நிழற்படக் கருவி

By Niroshan Thillainathan on June 6th, 2014

570 மெகாபிக்சல் நிழற்படக் கருவிஉண்மை சொல்லப்போனால் நமது கண்களும் ஒரு விதமான நிழற்படக் கருவி தானே, நண்பர்களே? அப்படி என்றால் நமது இந்த நிழற்படக் கருவிக்கு எவ்வளவு மெகாபிக்சல் இருக்கும் என்று எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கின்றீர்களா? இன்றைய அறிவு டோஸில் அதற்குப் பதிலைக் கூறுகின்றேன்.

சராசரி மனிதனின் விழித்திரையில் ஐந்து மில்லியன் கூம்பு வாங்கிகள் (cone receptors) உள்ளன. நாம் காணும் படங்களின் நிறங்களைப் பார்க்க இந்தக் கூம்புகள் காரணமாக இருப்பதால், நம் கண்களை ஐந்து மெகாபிக்சல் (megapixel) நிழற்படக் கருவிக்கு ஒப்பாகக் கூறலாம். ஆனால், நாம் பார்க்கும் படத்தைக் கண்டறியவும், அதன் வண்ணங்களைப் பிரித்துணரவும் மேலும் 100 மில்லியன் கோள்களும் (rods) நம் கண்களில் உள்ளன. இருந்தாலும், இந்த 105 மெகாபிக்சலும் குறைவான மதிப்பீடாகவே இருக்கும்; காரணம், நம் கண்கள் ஒன்றும் அசைவில்லாத நிழற்படக் கருவி அல்ல. நமக்கு மொத்தம் இரண்டு கண்கள் உண்டு, எனவே இந்த இரு விழிகளும் தொடர்ந்து அங்கும் இங்கும் சுழன்று காட்சிகளைக் கண்டு, அவற்றை மூளையில் விரிவான படமாகப் பதிவு செய்கின்றது. எனவே, விஞ்ஞானிகள் முடிவாக நமது கண்கள் 576 மெகாபிக்சல் நிழற்படக் கருவிக்கு ஒப்பானது எனக் கூறுகின்றனர்.

ஆச்சரியமாக இல்லையா நண்பர்களே? இயற்கை உருவாக்கும் அதிசயங்கள் போல் வருமா…? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.


English Version

The human eye has 576 megapixels


In reality, our eyes are also a type of camera. Have you ever thought how many megapixels does this camera have? Let me tell you about it in this Arivu Dose.

The average human retina has about 5 million cone receptors. As these cone receptors are responsible for our colour perception, we could say that this camera has 5 megapixels. But we have around 100 million rods in our eyes to see the objects and to perceive different colours. But this 105 megapixel will be a lower estimate because our eye is not a standstill camera. As we have two eyes, the rotate and capture various images and store them vividly in our brain. Finally, scientists say that our eyes can be compared to a camera with 576 megapixels.

Isn’t it surprising? Nothing can compete with nature’s creations. Post your comments below.


Photo: Garretttaggs55, License: Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

16 Comments

  • Mohammed Sawfan - 06/08/2014, 2:12 PM

    Subhanallah allahvin oru athatchi than ithi

  • Sherma Manoj - 06/08/2014, 11:46 AM

    I like office serial

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 06/08/2014, 10:59 AM

    உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றிகள் நண்பர்களே Mahendra Selvan D Tharmalingam Kirubendran Prabhu Rks Uma Kanth Jai Vel San Rajesh Raji Sifan Mhd Singaravalli Seeman Raghu Raman Indhu Viji Shan Suthe Bala Sankar Arun Kumar

  • Jai Vel San - 06/08/2014, 10:32 AM

    Migavum arumaiyana arivu dose thalaivare……..

  • Rajesh Raji - 06/08/2014, 10:15 AM

    power full eyes yarum thappamudiyathu

  • Sifan Mhd - 06/08/2014, 8:08 AM

    tnx for allah..

  • Singaravalli Seeman - 06/08/2014, 3:20 AM

    thank god. super

  • Raghu Raman - 06/07/2014, 5:56 PM

    Eyarkkai kadavul padaithathu.thank god

  • Indhu Viji - 06/07/2014, 5:34 PM

    Thnks 4 gd infrmatn

  • Prabhu Rks - 06/07/2014, 4:31 PM

    Tharmalingam Kirubendran –> எவ்வளொ மெகா பிக்சல் கேமராவை செய்தாலும் அதை நம் 576Mp கேமராவால் தான் பார்க்க முடியும்…

  • Tharmalingam Kirubendran - 06/07/2014, 3:24 PM

    Soon humans will make cameras with more mega pixel… the hubble telescope must have more i belive

  • Shan Suthe - 06/06/2014, 3:28 PM

    Good

  • Uma Kanth - 06/06/2014, 3:27 PM

    நானும் யோசித்து பார்த்த நாள் உண்டு but விடை கிடைக்கவில்லை now ok thanks good information

  • Mahendra Selvan D - 06/06/2014, 1:57 PM

    தகவல் நன்று.

  • Arun Kumar - 06/06/2014, 1:20 PM

    Now i am zoom that 576 megapixel

  • Bala Sankar - 06/06/2014, 1:14 PM

    Nice info