Natural Sciences Read in english

நெருங்கும் அபாயம்: மூளைக்கட்டியும், செல்லிடத் தொலைபேசி

By Niroshan Thillainathan on June 4th, 2014

நெருங்கும் அபாயம்: மூளைக்கட்டியும், செல்லிடத் தொலைபேசிசிறிய அளவிலான கதிரியக்கத்தால் பாதிப்பு ஏற்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், நிஜத்தில் குறைந்த அளவு கதிர்வீச்சுமே உடல் நலத்திற்கு நன்றல்ல. அது எந்த அளவில் இருந்தாலும் முற்றிலும் பாதுகாப்பற்றது. புற்றுநோயைக் குணமளிக்கக் கதிர்வீச்சு சிகிச்சை பயன்படுத்தப் பட்டாலும் கூட, அதன் பக்கவிளைவுகள் அதன் நன்மைகளை விட அதிகமானவை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கதிர்வீச்சு வெளிப்பாடு, பிற்காலத்தில் ஏற்படும் உடல் நலக் கோளாறுகளுக்கு மூல காரணியாக அமையும். கடந்த சில ஆண்டுகளில் உயர்ந்துவரும் செல்லிடத் தொலைபேசியின் (mobile phone) பயன்பாடு, பல சர்ச்சைகளைச் சந்தித்துள்ளது. உலக மக்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் சொந்தமாகத் தொலைபேசி வைத்துள்ளார்கள். அதிலும் சிலர் ஒன்றுக்கு மூன்று வைத்திருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

செல் பேசியிலிருந்து வெளிவரும் மின் காந்தக் கதிர்வீச்சுகளின் தீங்கு மற்றும் அபாயம் பற்றி விஞ்ஞானிகள் பல ஆராய்ச்சிகள் நடத்தி இருக்கின்றனர். இதில், 15 வயதிற்குக் குறைந்த குழந்தைகளை அடிக்கடி செல் தொலைபேசி பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. தற்காலத்தில் குழந்தைகளின் இறப்புக்கு இரண்டாவது மூல காரணமாக இருப்பது மூளைக் கட்டியே (brain tumor) ஆகும் என்கிறது ஒரு ஆய்வு. சக்திவாய்ந்த மின் காந்த கதிரியக்கத்‌தின் தாக்கமே இதன் மற்றொரு காரணமாக இருக்கிறது.

எனவே, செல் பேசி உபயோகத்தைக் குறைப்பது உடலையும், உயிரையும் பாதுகாக்கும். நீங்கள் அதிகமாக உங்கள் கை தொலைபேசியைப் பயன் படுத்துவீர்களா, நண்பர்களே? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

The hidden dangers of cell phone radiation


It is said that there is no hazard in small amount of radiation. In reality, even a small amount of radiation is not good for health and is harmful irrespective of its quantity. Even if the radiation is used to treat cancer, the side effects are much more than the benefits. Mostly, the exposure to the radiation results in health derangements at a later time. The rising mobile phone usage in the past few years has created many controversies. More than 80% of the world population own a cell phone. Some of them have more than one and the number is constantly increasing.

Scientists have conducted so many researches to study the harmful effects of electromagnetic radiation emitted by the cell phones. They say that children less than 15 years should not be allowed to use cell phones very often. One of the researches has found that the second most important cause of death in childhood is brain tumours. The effects of powerful electromagnetic radiation are one of the reasons.

So, reduction in the usage of cell phones will save your health and life. Do you use your cell phones more frequently? Post your comments below.


Tim Parkinson | Creative Commons by-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

5 Comments

  • Msarunachalammsc Msarun - 06/06/2014, 9:55 AM

    fulla

  • Vignesh Vignesh - 06/05/2014, 7:07 PM

    Apa one doubt mobile la call pesama atha avoid panidu, verum message,songs,videos,fb patha utal nalathitku pathipu varathula..???

  • Madhumitha Mital - 06/04/2014, 3:07 PM

    Wellsaid.

  • Seeni Afridi - 06/04/2014, 1:06 PM

    Thank you for information