Natural Sciences Read in english

புகைபிடித்தலின் தீங்கு

By Niroshan Thillainathan on April 7th, 2014

புகைபிடித்தலின் தீங்குபுகைபிடிப்பதின் தீங்கு என்னவென்று கேட்டால் உடனடியாக புற்றுநோய் வருவது என்று கூறிவிடுவார்கள். ஆனால், இந்தப் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருட்கள் புகைபிடித்தவுடன் உடனடியாக உருவாகின்றது என்பது பலருக்குத் தெரியாத விடயம் ஆகும். இது 2011ம் ஆண்டில் நச்சியல் வேதிப்பொருள் ஆராய்ச்சி (Chemical Research in Toxicology) என்னும் இதழில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இதை அறிவியலாளர்கள் புகைபிடித்தல் பற்றி எச்சரிக்கை விடுப்பதற்கும், புகைபிடிப்பவர்களையும், புகைபிடிக்க நினைப்பவர்களையும் கடுமையாக எச்சரிக்கவும் இந்த ஆய்வை செய்துள்ளனர்.

புகைபிடித்தலின் விளைவாக நீண்ட காலத்திற்கு பின்னர் இதய நோய் மற்றும் பல விதமான புற்றுநோய்களும் உண்டாகும் என நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் நாம் எண்ணுவதைப் போல் புகைபிடித்தலின் தீங்கு நம்மை தாக்க நீண்ட காலம் எடுத்துக் கொள்வதில்லை. மாறாக ஒருவர் தனது முதல் சிகரெட்டை புகைக்க ஆரம்பிக்கும் பொழுதே விளைவுகளை உண்டாக்கும் என இந்த ஆய்வு கூறுகின்றது.

இந்த ஆராய்ச்சியில் 12 நபர்களைக் கொண்டு புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருட்களாக நம்பப்படும் Polycyclic Aromatic Hydrocarbons (PAH) தாக்கத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். PAH வேதிப்பொருட்கள் ஒருவரின் உடலுக்குள் சென்று, அந்த நபரின் மரபணுவை பாதித்து, புற்றுநோய் உண்டாக்கும் மற்றோர் வேதிப்பொருளாக மாற்றம் அடைய எடுத்துக் கொள்ளும் நேரம் 15 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே தான்! இது ஒரே ஒரு சிகரெட்டைப் புகைத்த பின் நடைபெறும் செயல்பாடு ஆகும். எனவே, நீண்ட காலம் வாழ விரும்புவோர் நிச்சயமாக புகைபிடித்தலை தவிர்ப்பதே நன்று. இந்த எச்சரிக்கையை மக்கள் கண்டிப்பாக மனதில் நிலைநிறுத்த வேண்டும்!

புகைபிடித்தல் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

The Health Risks of Smoking


When someone asks you about the dangerous effects of cigarette, your immediate reply will be ‘cancer’. But most of us do not know that the cancer causing agents are produced immediately after smoking and not long after. This report has been published in a journal called Chemical Research in Toxicology, in 2011. This research was carried out to warn the people about the dangerous effects of smoking and to create awareness among smokers.

We know that smoking has long term effects like heart damage and different types of cancers. But the effects of smoking do not take a long time to affect our health as we think. This research says that the effect begins right from the first puff of smoke inhaled.

In this research, the effect of cancer causing agent Polycyclic Aromatic Hydrocarbons (PAH) was analyzed in 12 people. It is found that the time taken by this PAH to damage the chromosomes of a person and cause cancer is just 15 to 30 minutes. This happens after smoking a single cigarette.  Scary, isn’t it? If you want to have a long and healthy life, avoid smoking. Don’t forget that smoking is dangerous. Are you a smoker and planning to quit smoking? Post your comments about this Arivu Dose below.


Oxfordian Kissuth | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

12 Comments

  • Thala Thalabathi - 04/08/2014, 8:37 AM

    addiction killer lam use panna smoking lam vittudalam nu soldrangale athu unmaya boss

  • Nalini Vidya Dharan - 04/07/2014, 7:46 PM

    Romba nalla information thanks

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 04/08/2014, 3:39 PM

      நன்றி Nalini Vidya Dharan :)

  • Jenil Mani - 04/07/2014, 4:52 PM

    Sonna yarum kekkurathe ella brother

  • Franklin Jose - 04/07/2014, 4:37 PM

    நல்ல தகவல், தூய தமிழ், எளிய நடை. சிந்திக்க தூண்டும் வாக்கியங்கள். பாராட்டுகள் ….

  • Franklin Jose - 04/07/2014, 4:33 PM

    நல்ல தகவல். தூய தமிழ். விழிப்புணர்வு ஏற்படுத்தும் எழுத்து நடை….. ..பாராட்டுகின்றேன் .

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 04/08/2014, 3:38 PM

      மிக்க நன்றி Franklin Jose :)

  • Jayanth Kumar - 04/07/2014, 1:23 PM

    ithai ellam paathu thaan boss vittuten…. n thanks 4 sahring :)

    • Jayanth Kumar - 04/08/2014, 3:39 PM

      :)

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 04/08/2014, 3:39 PM

      நல்லது நண்பா Jayanth Kumar :)!!