Natural Sciences Read in english

சிரி, சிரி, சிரி: சிரிப்பின் நன்மைகள்

By Niroshan Thillainathan on April 5th, 2014

சிரி, சிரி, சிரி: சிரிப்பின் நன்மைகள்மனம் விட்டுச் சிரிப்பது போல் ஓர் சிறந்த விடயம் இல்லவே இல்லை! ஒரு மணி நேரம் சிரிப்பதும், அரை மணி நேரம் பாரம் தூக்குதலும் (weight lifting) ஒன்று என விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். அது ஏன் என்றால், இரு வேளைகளிலும் எரிக்கப்படும் கலோரியின் அளவு ஒன்று எனக் கணக்கிட்டுள்ளனர். எனவே, ஒரு ஆண்டிற்கு ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் சிரித்து வந்தால், ஐந்து கிலோ வரை எடையைக் குறைக்கலாம் என்கிறது ஆராயச்சி. மனம் விட்டு சிரிப்பது ஒரு விதமான ஏரோபிக் (aerobic) உடற்பயிற்சி ஆக அமையும் என்கிறார் நரம்பணுவியல் மருத்துவர் டாக்டர் ஹெலன் பில்செர் (Helen Pilcher). அவ்வாறு சிரிப்பதின் காரணமாக இதயத் துடிப்பு வேகமாகி, உடல் முழுவதும் உள்ள பாகங்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மேலும் சிரிக்கும் போது மார்பு ஏறி இறங்கி, வயிற்றுத் தசைகளும் இறுக்கம் அடைகிறது.

சிரிப்பின் நன்மைகள் இவ்வளவு தான் என்று நினைத்து விடாதீர்கள்! சிரிப்பதற்கு குறைந்தது 15 முக தசைகள் தேவைப் படுகின்றது. இதனால் முகம் மிருதுவாகவும், பிரகாசமாகவும் மிளிரும். மேலும், இது உடலுக்கு நலம் தரும் என்டோர்பின் (endorphine) உற்பத்தியை தூண்டி, மன அழுத்தத்தையும் குறைக்கிறது. இதை விட சிரிப்பது இதயத்திற்கு மிகவும் நன்று என வேறு சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. உடற்பயிற்சி மற்றும் கொழுப்பு குறைக்கும் மருந்துகள் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது போலவே, உரக்கச் சிரிப்பதும் இரத்த சுழற்சியை அதிகரிக்கிறது. இப்படிச் சிரிப்பதால் உடல் மற்றும் மனம் நிம்மதி பெற்று, நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும்.

வாய் விட்டுச் சிரித்தால், நோய் விட்டுப் போகும் என்று இதைத்தான் பெரியவர்கள் பல நூற்றாண்டுக்கு முன்பே எழுதிவைத்தார்களோ?சரி நண்பர்களே, சிரிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்பதை அறிந்துவிட்டீர்கள். இனி மற்றவர்களை நீங்களும் சிரிக்க வையுங்கள் பார்ப்போம். கீழே உங்களுக்குத் தெரிந்த ஓர் ஜோக் எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

The Health Benefits of Laughter


There is nothing better than a hearty laughter! Scientists say that laughing for an hour is equivalent to weight lifting for half an hour. It is said so because, the calories burnt in both the actions are the same. Researchers say that we can reduce our weight by 5 Kg if we laugh for 1 hour every day for a year. Dr.Helen Pilcher, a neurologist says that a hearty laughter is an aerobic exercise. Such laughter increases the blood circulation to all the organs of the body. Also, laughter strengthens the abdominal muscles as it makes the chest move up and down.

The advantages of laughter don’t stop here. Laughter makes at least 15 muscles to work. This makes the face shiny and glowing. It also increases the secretion of endorphin and reduces the blood pressure. Some studies say that laughter is good for heart. Laughter increases the blood flow similar to exercises and anti obesity drugs. This laughter will give you a healthy body, peaceful mind and a good immune system. Now you know that laughter is very important to be healthy. So, try to make others laugh and be healthy.

Did you enjoy reading this Arivu Dose?  I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


http://www.flickr.com/photos/vatobob/ | Creative Commons by -2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

42 Comments

 • Jafar Ullahkhan - 09/25/2014, 8:17 PM

  ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா…………

 • Guna Sekaran - 09/25/2014, 3:48 PM
 • Subha Shini - 09/25/2014, 3:37 PM

  Thanks

 • Gopi Nath - 09/25/2014, 1:30 PM
 • Raja Esr - 09/25/2014, 1:02 PM
 • Murugan Mariyappan - 09/25/2014, 10:58 AM
 • Jeevamani Jeevamani - 09/25/2014, 10:57 AM

  இந்த தகவல்களை எல்லாம் எப்படி திரட்டுகிறீர்கள் வாழ்த்துக்கள்

 • Deman Deva - 09/25/2014, 10:13 AM

  Thangs

 • Murugesan Duraisamy - 09/25/2014, 9:59 AM

  Bass nenga nalla vanthutenga pa valthukal

 • Kingsly Gladson - 09/25/2014, 9:57 AM

  1Manithiyalam sirgkka na enna loosa

 • Priya Sangee - 09/25/2014, 9:52 AM

  Nice information keep smile

 • Ashvidha Dharshi - 09/25/2014, 9:00 AM

  good

 • Rathuma Rathu - 09/25/2014, 8:23 AM

  Siringa siringa sirichukite irunga…

 • Jai Balaji - 09/25/2014, 7:55 AM

  Yes friend

 • Praveen Kumar - 09/25/2014, 7:23 AM

  Dai appa aala vedu da samy

 • Nathika Nafa - 09/25/2014, 6:56 AM

  siri kirathukku oru jok

 • Sudhan Kumar - 09/25/2014, 5:21 AM

  Jam biskate la jam irukum ana nai biskete la nai irukuma enaku tharinchatha sonna mudincha siringa

 • Mani Hari - 09/25/2014, 5:13 AM

  Wow what a information

 • Anas Mohamed - 09/25/2014, 4:40 AM

  Paithiyamdu solla matangkala

 • இராயப்பன் தேவாங்கர் - 09/25/2014, 4:21 AM

  haha

 • Albert Singh - 09/25/2014, 3:49 AM

  Very nice one

 • Saravanan Kanthasamy - 09/25/2014, 3:44 AM

  Nice

 • Selvi Jegan - 09/25/2014, 3:02 AM

  Nice

 • Sathu Bavina - 09/24/2014, 4:04 PM

  eanda appa ean kunda erukkirar eandu eppathan puriuthu..98kg.. avar sirikkave maddar.

 • Sangeetha Ug Jayaraj - 09/24/2014, 1:34 PM

  Ha ha ha…….thanks nanba.