Natural Sciences Read in english

அழுவது உடலுக்கு நல்லது

By Niroshan Thillainathan on October 22nd, 2014

அழுவது உடலுக்கு நல்லதுநமக்கு ஏதாவது எதிர்மறையாக நடக்கும் போது நாம் பெரும்பாலும் அழுவதுண்டு. ஆனால், அழுகை என்பது எவ்வளவு ஓர் முக்கியமான செயல் என்பது உங்களில் எத்தனை பேர்க்குத் தெரியும், நண்பர்களே? ஓர் ஆராய்ச்சியின் படி பெண்கள் சராசரியாக ஒரு ஆண்டில் 47 முறை அழுகிறார்கள் என்றும், ஆண்கள் அதே நேரத்தில் 7 முறை மட்டுமே அழுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது. ஆனால், இதில் உள்ள ஆச்சரியம் என்னவென்றால், அழும் பெண்களில் 83 சதவீதமானோரும், ஆண்களில் 73 சதவீதமானோரும் அழுதுமுடித்த பிறகு நன்றாக உணர்கிறார்கள் என்பது தான். இதனால் தான் ஆராய்ச்சியாளர்கள் அழுகை என்பது ஓர் மிகவும் சிறந்த விடயம் என்கிறார்கள்.

இதில் உங்களுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லையென்றால், அழுகையைப் பற்றி சில உண்மைகளை அறியத் தருகிறேன், படியுங்கள்.

1. அழுவதால் மன அழுத்தம் குறைகிறது.
2. அழுகை, இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத்துடிப்பின் அளவினைக் கட்டுப்படுத்தும்.
3. அழுகை, நமது இரத்தத்தில் எதிர்மறையான விளைவினை ஏற்படுத்தும் மாங்கனீசைக் குறைக்கும்.

நண்பர்களே, இனி அழுகை வந்தால் அதைக் கட்டுப்படுத்தாமல் அழுதுவிடுங்கள். மற்றவர்கள் அழுதாலும் அவர்களைக் கட்டாயம் அழவிடுங்கள். இதனல் நமக்கு நன்மையே தவிர தீமை ஏதும் இருக்கப் போவதில்லை.

இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா, நண்பர்களே? இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

The health benefits of crying


When something bad happens to us, we cry. Do you know how important crying is? According to a research, a woman cries for about 47 times a year while a man cries only for about 7 times a year. It is interesting that 83% of women and 73% of men feel better after crying. This is why researchers say that crying is good for health.

If you don’t believe this, let me tell you some interesting facts about it.

  1. Crying reduces psychological stress.
  2. Crying reduces blood pressure and controls heart rate.
  3. Crying reduces Manganese, which causes bad effects on our blood.

Dear friends, don’t control your tears when you feel like crying. If you see someone crying, let them do so. There is no harm in it.

Did you like this Arivu Dose? Post your comments below.


Taremu | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

1 Comments

  • K.Mathiyalagan - 10/27/2014, 8:13 AM

    I like to your matter and use full me.