Social Sciences Read in english

மாமேதை அப்துல் கலாம்

By Niroshan Thillainathan on April 6th, 2014

மாமேதை அப்துல் கலாம் இன்றைய அறிவு டோஸில் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்துத் தந்தவர் ஒருவரைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இவரில் உள்ள விசேஷம் என்னவென்றால், இவர் முதலில் இயற்பியலில் பட்டம் பெற்றதும், அதில் ஆர்வம் இல்லாமல் போனதால் அடுத்ததாக விண்வெளி பொறியியல் படித்த பின் சிறந்த அறிவியலாளராக பணிபுரிந்தார். இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். நான் இவ்வளவு நேரமும் யாரைப் பற்றி எழுதியுள்ளேன் என்பது உங்கள் எல்லோருக்கும் புகைப்படத்தைப் பார்த்தே தெரிந்திருக்கும், இருந்தாலும் கூறுகின்றேன். அது வேறு யாரும் இல்லை 15.10.1931இல் இப்புவியில் இராமேஸ்வரம், தமிழ்நாடு, இந்தியாவில் உதயமான டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) அவர்கள். வாழ்நாள் அறிவியலாளராகக் கருதப்படும் இவர், 1998ம் ஆண்டில், இவர் மேற்கொண்ட அணு ஆயுத சோதனையால் உலகமே போற்றும் மனிதராகத் திகழ்ந்தார். 2002ம் ஆண்டில், கோச்சேரில் ராமன் நாரயணன் அவர்களை எதிர்த்துத் தேர்தலில் வென்று, இந்தியாவின் 11-வது குரியரசுத் தலைவரானார்.

இதில் வியப்பூட்டும் விடயம் என்ன தெரியுமா? அவருக்கு பத்ம பூசண், பத்ம விபூசண் மற்றும் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகிய பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது. இது எல்லாம் போதாது என்று பல்வேறு பல்கலைக் கழகங்கள் அவருக்கு ஒட்டுமொத்தமாக 40 கௌரவ டாக்டர் பட்டங்கள் கொடுத்துள்ளன. இங்கு நாம் ஒரு டாக்டர் பட்டம் பெறுவதற்கே பாடு படுகின்றோம், ஆனால் இந்த மாமேதை ஒன்றிற்கு 40 டாக்டர் பட்டங்களைப் பெற்றுவிட்டார். இந்த வியப்பூட்டும் தமிழருக்கு தலை வணங்குவோமா நண்பர்களே? உங்கள் கருத்துகளைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

The great Scientist A. P. J. Abdul Kalam


Let us know about a person who made all the Tamil people proud. The interesting fact about this great person is that, though he had graduated in Physics first, he studied Aeronautical Engineering later, as he lost interest in Physics. He worked as an efficient scientist before joining the Defense Research and Development Organization (DRDO) and the Indian Space Research Organization (ISRO) as an Aeronautical Engineer. You would have identified this great personality immediately on seeing his picture. Yes! The genius who was born on 15.10.1931, in Rameshwaram, Tamil Nadu in India – Dr. A. P. J. Abdul Kalam (Avul Palkir Jainulabdeen Abdul Kalam). This scientist of the lifetime became world famous by leading the Nuclear Weapon Testing mission. He won the presidential election in 2002 and succeeded Kocheril Raman Narayan as the President of India.

The surprising information is that he has been awarded the Padhma Bushan, Padhma Vibushan and also the highest civilian award, The Bharat Ratna. In addition to these, so many universities have given him a total of 40 Honorary Doctorate degrees. While most of us struggle to get a single doctorate degree this master mind has earned 40. Hats off to this great Tamilian!

Aren’t you proud about him? I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


Ricardo Stuckert/PR (Agência Brasil) | Creative Commons by-sa-3.0 de, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

8 Comments

  • Subramanian Manickam - 01/31/2015, 2:52 PM

    தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன்
    .

  • pavi - 09/08/2014, 4:44 AM

    TAMIL NADU MA…………..

  • Rukmani Ruku - 04/07/2014, 8:11 AM

    tamilargaluku perumai sartha thalai magan

  • Shugu Maran - 04/07/2014, 3:09 AM

    wonderful person…respect him…

  • Palani Thiruvallur Arumugam - 04/06/2014, 3:24 PM

    வாழ்த்துக்கள் ஐயா! நீவிர் நீடூழி வாழ்க!

  • Sathish Kumar - 04/06/2014, 12:08 PM

    He is 11th president not prime minister ;)

    • Sathish Kumar - 04/06/2014, 12:56 PM

      ;)

    • Niroshan Thillainathan
      Arivu Dose – அறிவு டோஸ் - 04/06/2014, 12:15 PM

      Ouch! That was a small Typo. I corrected it. Thanks Sathish Kumar