Future Sciences Read in english

ஓர் சில மணி நேரத்தில் மட்டுமே உலகையே சுற்றிவர முடியுமா?

By Niroshan Thillainathan on November 23rd, 2014

ஓர் சில மணி நேரத்தில் மட்டுமே உலகையே சுற்றிவர முடியுமா?நண்பர்களே, ஒன்று தெரியுமா? வருங்கால தொழில்நுட்பத்தின் மூலம் ஓர் சில மணி நேரத்தில் மட்டுமே நீங்கள் உலகையே சுற்றிவர முடியும். என்ன, ஆச்சரியமாக உள்ளதா? ஆம், அது நிச்சயமாக முடியும் என விஞ்ஞானம் கூறுகின்றது! அதிவேக புல்லட் ரயில்கள் தற்போது போதிய அளவு முன்னேற்றங்களைக் கண்டுவிட்ட நிலையில், அடுத்த கட்டமான மிகவும் அதிவிரைவு போக்குவரத்தின் பக்கம் இன்றைய தொழில்நுட்பங்கள் செல்லத் தொடங்கியுள்ளது.

இதில் பல ஆண்டுகளாக கவனத்தில் இருப்பது வெற்றிட ரயில்கள் (vacuum tube train). இந்த வகை ரயில்கள் காந்த உயர்த்துதலின் படி குறைவாக காற்றுள்ள அல்லது காற்று இல்லாத (வெற்றிடமான) ரயில்களாக செயல்படுகின்றன. இதனால் காற்றின் தடை குறைந்தபட்சமாகவே இருக்கும், இதன் மூலம் அதிவேகமாக மணிக்கு 6000 முதல் 8000 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். அதாவது இந்த உலகத்தையே ஓர் சில மணி நேரத்திலே சுற்றிவர முடியும்.

இது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இதற்கான முதலீடு மற்றும் தொழில்நுட்பத் தேவைகளால் இன்னும் பின்தங்கியே உள்ளது. ‘எலோன் மஸ்க்’ என்பவர் பேபால், டெஸ்லா மோட்டார்ஸ் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு பொறுப்பில் இருப்பவர், இந்த எதிர்காலப் போக்குவரத்தில் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளார்.

கண்டம் விட்டு கண்டம் செல்லும் போக்குவரத்தாக இயங்கவிருக்கும் இந்தப் புதிய தொழில்நுட்பம் வெற்றியடைந்துவிட்டால் எதிர்காலத் தலைமுறையினருக்கு அதிவிரைவு முன்னேற்றம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அது மட்டும் இல்லை, இது சாத்தியப்பட்டால் விமானச் சேவையில் இருந்து ரயில் சேவைக்கு மாறிவிடலாம் என்பதும் உண்மையாகிவிடும்!

இந்தத் தகவல் ஆச்சரியமாக இல்லையா நண்பர்களே? இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

The Future of Train Travel


Hi friends! Do you know that the future technology will make us travel around the whole world in just few hours? Yeah! Scientifically, it is certainly possible.

The fast bullet trains have reached their technical peak. As the next step, the technological improvements have paved way for the ultrafast transportation systems.

One thing that has got the attention for many years now is the vacuum tube train. These types of trains function in a low air filled or in vacuum tubes using the magnetic elevation. Due to the low air resistance, these trains can travel at a speed of 6000 to 8000 Km/hr which means we can go around the world in few hours.

Although it is a dream come true the enormity of the investment and technological needs have delayed its implementation. ‘Elon Musk’ who is in the management of Paypal, CEO of Tesla motors and SpacX corporation has turned his attention towards this future means of transport.

If this intercontinental transport becomes a success, there is no doubt about the ultrafast advancement of our future generations. Also, the preference will shift from airways to railways.

Isn’t it surprising? Post your comments about this Arivu Dose.


Yosemite | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

2 Comments

  • Thangaganesan - 12/04/2014, 9:31 AM

    Super welcome vacuum tube train.

  • rajasekar - 11/25/2014, 4:06 PM

    ARPUTHAM NANBA!