உயரமான கட்டிடத்தில் நகரம் – எதிர்கால வசிப்பிடம்
By Niroshan Thillainathan on December 15th, 2014
சாதாரணமாக நமக்குத் தெரிந்த உயரமான கட்டிடங்கள் எல்லாம் எப்படியிருக்கும்? ஒவ்வொரு அடுக்காக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தது போல் இருக்கும், சரி தானே? அத்துடன் மேலே செல்வதற்கு லிஃப்ட் அல்லது மாடிப்படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சுவர் ஆர்க்கிடெக்சர் (Sure Architecture) செனும் நிருவனம் ஒரு புதுவித யோசனையுடன் வந்துள்ளது.
இதன்படி சாய்வு சரிவேற்றம் கொண்ட சுருள் போன்ற அமைப்பினைக் கொண்ட உயரமான கட்டிடத்தினை வடிவமைத்துள்ளனர். இதற்கு ‘என்ட்லெஸ் சிட்டி இன் ஹைட்’ (Endless City in Height) என்று பெயர். இது நமது சாதாரண கட்டிடங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
சரிவாக அமைக்கப்பட்ட சரிவேற்றங்கள் மக்கள் மேலும், கீழும் செல்ல உதவும். இந்த சரிவுகள் சாதாரண அமைப்புடையவை அல்ல, வித்தியசமான வடிவங்களில் அமைந்துள்ளன. இதில் என்ன பயன் என்று நினைக்கிறீர்களா?
இப்படி அமைப்பதால் ஒரு கட்டிடத்திலே அதிகப்படியான இடவசதிகளைச் செய்துகொள்ள முடியும். அத்துடன் அங்குள்ள வெளியேறும் நீர்க்கழிவுகளை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துதல், முடிந்தவரை இயற்கை வசதிகளை பயன்படுத்தி செயற்கைத் தன்மையினை குறைத்தல் போன்றவை இந்த கட்டிடத்தின் சிறப்பம்சங்களில் கண்டிப்பாக இருக்கும் என இதன் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
இதனை அமைப்பதற்கான இடம் லண்டனில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் செயல்வடிவம் பெறவில்லை. இதுபோன்ற கட்டிடங்கள் வரத்தொடங்கிவிட்டால் ஒரு ஊரையே ஒரே கட்டிடத்தில் வசிக்க வைக்க முடியும். இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன நண்பர்களே? இப்படி ஓர் கட்டிடத்தில் நீங்கள் வசிப்பீர்களா? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!
The endless city in height – Our future habitat
Most of the tall buildings that we are aware of, are usually built with several floors one above the other. There will be elevators or staircases to take us up or down. But Sure Architecture has come up with a novel idea. They have designed a tall building with inclined spiral structure. This building called “Endless city in Height” is completely different form our ordinary buildings.
The inclined ramp up helps us to go up and down. These ramps are not ordinary structures, but are of rather unusual design. You may think what is so special about it!
This design makes it possible to have more living space in a single building. The architects say that, recycling of the sewage, using the natural resources and reducing the artificialness will be the specialty of this building.
A place in London has been chosen for the construction of this building. But it has not yet attained a working pace. If such a model becomes successful, we will be able to make room for an entire city in a single building. Post your comments about this Arivu Dose below.
SURE Architecture | http://www.sure-architecture.com/
Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்